MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பருவமழை வெளுத்து வாங்குது; இப்போ டெய்லி நீங்க கடைபிடிக்க வேண்டிய 4 விஷயங்கள் என்ன தெரியமா!

பருவமழை வெளுத்து வாங்குது; இப்போ டெய்லி நீங்க கடைபிடிக்க வேண்டிய 4 விஷயங்கள் என்ன தெரியமா!

Tips for Monsoon : தமிழகத்தில் இப்போது பருவமழை துவங்கியிருக்கிறது. இந்நிலையில் நம்மை நாமே ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள கடைபிடிக்க வேண்டிய நான்கு முக்கிய விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Ansgar R
Published : Oct 20 2024, 11:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rainy Season

Rainy Season

பிற பருவ நிலைகளை ஒப்பிடும்போது, மழை காலத்தில் நாம் சற்று கூடுதல் கவனத்தோடு நம்மையும், நம் வீட்டில் உள்ள குழந்தைகளையும், முதியவர்களையும் கவனித்துக் கொள்வது பெரிய அளவிலான நன்மைகளை பயக்கும். நாம் செய்யக்கூடிய சிறு சிறு முன்னெடுப்புகள் கூட பெரிய அளவிலான வியாதிகளிலிருந்து நம்மை காக்கின்றது. அந்த வகையில் மழை காலத்தை பொறுத்தவரை எப்பொழுதும் நம்மை ஈரப்பதம் இல்லாமல் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. வெளியில் செல்லும்பொழுது குடை மற்றும் மழையில் இருந்து காத்துக் கொள்வதற்கான கவசங்கள் போன்றவற்றை எடுத்துச் செல்வது. வீட்டில் அதிக ஈரப்பதம் இருக்கும் இடங்களில் காலணிகளை அணிந்து செல்வது. குறிப்பாக இந்த காலணிகளை வீட்டிற்கு வெளியே பயன்படுத்தாமல் வீட்டிற்கு உள்ளே மட்டும் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

யாரெல்லாலாம் பாதாம் சாப்பிடக் கூடாது? சாப்பிட்டால் என்ன ஆகும்?

24
Boiled Water

Boiled Water

மழைக்காலம் தான் என்றாலும், நம் உடலை உள்ளிருந்து நீர்சத்து நிறைந்ததாக வைத்துக்கொள்ள, கொதிக்க வைத்து ஆறவைக்கப்பட்ட நீரை குடிப்பது மிகவும் நல்லது. அதிலும் இந்த மழை காலத்தில் சீரகம் போன்ற செரிமானத்திற்கும், உடல் நலத்திற்கும் உதவும் பொருட்களை வெதுவெதுப்பான நீரில் கலந்து அதை வடிகட்டி குடிப்பது மிகவும் நல்லது. இது நமது உடலை ஈரப்பதத்தோடு வைத்திருப்பது மட்டுமல்லாமல் நமது தோளையும் பெரிய அளவில் பாதுகாக்கிறது. இஞ்சி பூண்டு போன்றவற்றை அதிக அளவில் இந்த மழை காலத்தில் சேர்த்துக் கொள்வது நமக்கு அதிக எதிர்ப் சக்தியையும் தருகிறது.

34
Mosquito Net

Mosquito Net

மழைக்காலம் வந்துவிட்டாலே நம் வீடுகளில் அருகில் தண்ணீர் தேங்க தொடங்கும். நிச்சயம் இதனால் கொசுக்களின் உற்பத்தியும் பெரிய அளவில் இருக்கும். ஆகவே நம் வீட்டின் அருகில் தண்ணீர் தேங்க விடாமல் பார்த்துக் கொள்வதும். நம் வீட்டுக்குள் கொசுக்கள் அதிக அளவில் வராமல் பார்த்துக் கொள்வதும் நல்லது. இதற்காக நம் உடலுக்கு உபாதை அளிக்காத கொசுவிரட்டிகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது. அதிக புகை தரக்கூடிய கொசுவிரட்டுகளை பயன்படுத்துவது, கொசுக்களை விரட்டுவதோடு அல்லாமல் நம் உடலுக்கும் கேடுகள் தருகிறது. ஆகையால் நம் உடலுக்கு கேடு தராமல் கொசுக்களை மட்டும் விரட்டும் பொருட்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது.

44
Street Food

Street Food

பிற காலங்களில் நாம் சாப்பிடும் துரித உணவுகளையும், ரோட்டோர கடைகளில் உள்ள உணவுகளையும் பெரிய அளவில் குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. மழைக்காலத்தில் ரோட்டோரங்களில் தயாரிக்கப்படும் உணவுகளின் சுகாதாரம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியாது. ஆகையால் அவற்றை உண்பதால் நம்முடைய உடலுக்கும் நம்மை சார்ந்த உறவினர்களின் உடல் நலத்திற்கு பெரிய அளவில் கேடுகள் விளைவிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே இந்த மழை காலத்தில் வீட்டு உணவை, சத்தான உணவை, சூடான உணவை உண்டு வந்தால் மிகவும் நல்லது.

குழந்தைகள் மன அழுத்தத்தில் இருப்பதை எப்படி கண்டறிவது? எப்படி சரிசெய்வது?

About the Author

AR
Ansgar R
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved