சமையலுக்கு கல் உப்பை கையில் எடுத்து போட்டால், சுக்கிரன், குபேரன் அருள் உண்டா? வாஸ்து, சாஸ்திரம் கூறுவது என்ன?
5 Vastu Tips To Attract More Wealth To Your Home: Kal Uppu Pariharam in Tamil: கல் உப்பை கைகளால் எடுத்து பயன்படுத்தினால், உங்களின் தரித்திரம் நீங்கி செல்வ மகளின் அருள் கிடைக்கும். தன, தானியங்கள் பெருகும் .பணவரவு அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
Vastu Tips
நம் வீட்டில் இருக்கும் தன, தானியங்கள் செல்வம் பெருகுவதற்கு குபேரன், அஷ்டலட்சுமிகளின் அருள் கிடைக்க வேண்டும். மற்ற எல்லா விஷயத்திலும் இருப்பதே போதும் என்று நினைக்க வேண்டும். ஆனால் பணத்தை ஈட்டுவதில், அதுவும் சுயமாக ஈட்டுவதில் இருப்பதே போதும் என்று நினைக்காமல் உடலில் தெம்பு இருக்கும் பொழுதே மேலும் மேலும் பணத்தை ஈட்ட வேண்டும் என்று ஆசை கொண்டால், அந்த மகாலட்சுமியே உங்களுக்கு வருவாய் கொடுக்கக்கூடிய அத்தனை வழிகளையும் காட்டுவாளாம்.
Kal Uppu Pariharam in Tamil:
அதில் முதன்மையானதாக இருப்பது உப்பு. உண்ணும் உணவில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருட்களிலும் அன்னபூரணி வாசம் செய்கின்றாள். ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்று கூறுவார்கள். இத்தகு சிறப்புகள் வாய்ந்த உப்பு, மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது.
இத்தகைய கல் உப்பை எப்பொழுதும் வீட்டில் வைத்திருக்க வேண்டும். முந்தைய காலங்களில் எல்லாம் கல் உப்பை தான் அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இன்று இக்காலத்தில் கல் உப்பு பயன்பாடு குறைந்து, தூள் உப்பு அதிகரித்துவிட்டது. தூள் உப்பை காட்டிலும், கல் உப்பே ஆரோக்கியத்திலும், ஆன்மீக ரீதியாகவும் சிறந்ததாக இருக்கிறது.
Kal Uppu Pariharam in Tamil:
அத்தகைய கல் உப்பு பயன்படுத்தும் பொழுது அதை கைகளால் எடுத்து பயன்படுத்த வேண்டும். அப்படி செய்தால், தரித்திரம் நீங்கி செல்வமகளின் அருள் கிடைக்கும். தன, தானியங்கள் பெருகும்.பணவரவு அதிகரிக்கும் என்பது ஐதீகம். அத்தகைய கல் உப்பை வெள்ளிக்கிழமைகளில் வாங்குவது சிறப்பு ஆகும். அதேபோன்று, சமையல் கட்டில் கல் உப்புஅருகில் வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றி வைத்தால், கணவன் -மனைவி நீண்ட நாள் பிரச்சனை விலகும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் தீராத பிரச்சனை விலகும். வேண்டிய பண வரவு இருக்கும்.
Kal Uppu Pariharam in Tamil:
ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் அருள் கிடைக்க, வெள்ளியால் ஆன சாவிக் கொத்து பீரோவுக்கு பயன்படுத்துங்கள். அது போல ஒரு வெள்ளி காசு வாங்கி, மஞ்சள் துணியால் சுற்றி, ஒரு முடிச்சாக கட்டி உப்பு ஜாடியில் வைத்து விட வேண்டும். இதனால் வீண் செலவுகள் குறையும், தனம் மட்டும் அல்லாமல் தானியங்களும் பெருகும்.
Kal Uppu Pariharam in Tamil:
கல் உப்பை பயன்படுத்துபவர்கள் அதை பீங்கான் அல்லது மண் குடுவைகளில் பயன்படுத்துவது ரொம்பவே நல்லது. இது குபேர அருளையும், மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொடுக்கும் ஒரு அற்புதமான விஷயமாக ஆன்மீகத்தில் குறிப்பிடப்படுகிறது. மேலும், இவ்வாறு செய்வதால் அந்த வீட்டில் இருப்பவர்களை அண்டியிருக்கும் தரித்திரம் நீங்கும். செல்வம் பெருகும். வாழ்வில் புது ஒளி பிறக்கும்.