உங்கள் வீட்டில் வறுமை நீங்கி செல்வம் செழிக்க..வடகிழக்கு மூலையில் ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி வைத்தால் போதும்..
Vastu Tips: வடகிழக்கு மூலையில் ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி வைத்தால் போதும் உங்கள் வீட்டில் வறுமை நீங்கி செல்வம் செழிக்கும். குறிப்பாக மஹாலக்ஷ்மியின் அருள் கிடைத்து பணம் கொழிக்கும்.
Vastu Tips:
நாம் எவ்வளவு தான் பணத்தை சம்பாதித்தாலும் அதிலிருந்து, நம்மால் ஒரு ரூபாய் கூட சேர்த்து வைக்க முடியாவிட்டாலும் அதுவும் வறுமை நிலை தான். பணம் வந்த வழியே சென்று கொண்டிருந்தால் தீட்டிய திட்டங்கள் பலவும் பாதியிலேயே நிற்கும். நாட்கள் செல்ல செல்ல வருமானம் குறையவும், செலவுகள் அதிகரிக்கவும் நிறைய காரணங்கள் உள்ளது.
Vastu Tips:
இதனால், நாம் நினைத்த எந்த ஒரு விஷயத்தையும் நம்மால் செய்ய முடியாமல் போகும். உங்களின் நீண்ட நாள் திட்டம் தடைபடும். இப்படி ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு தடைகள் ஏற்பட்டு நீங்கள் நினைத்தது நடக்காமல் தட்டி சென்று கொண்டே இருந்தால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இல்லை என்பது பொருளாகும். வீட்டில் வறுமை நீங்கி செல்வ வளம் பெருக வாரத்தில் ஒருமுறை இப்படி செய்து பாருங்கள் பல்வேறு நன்மைகளை பெறலாம். அது என்னென்னெ..? செய்முறை என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
Vastu Tips:
முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் மண்பாண்டங்கள், செம்பு பாத்திரங்கள் அதிகம் இருக்கும். இதனால் உணவு ஆரோக்கியமாக இருந்தது. உடம்பு ஆரோக்கியமாக இருந்தது. ஆனால், இன்று பெரும்பாலானோர் வீடுகளில் செம்பு மற்றும் மண்பாண்டமே இல்லாமல் இருக்கிறது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு குறைபாடுகள் ஏற்படுகிறது.
Vastu Tips:
எனவே, ஒவ்வொரு வீட்டிலும் சில செம்பு பாத்திரங்கள், ஒரு சில மண்பாண்டங்கள் கட்டாயமாக இருக்க வேண்டும். பூஜை அறையிலாவது சுத்தமான செம்பினால் செய்யப்பட்ட பஞ்சபாத்திரம் இருக்க வேண்டும். ஆம், மண்பாண்டத்தில் ஆரோக்கியமும், பஞ்சபூதங்களின் சக்தியும் அடங்கியிருக்கிறது. செம்புப் பாத்திரத்தில் ஆரோக்கியத்தோடு ஐஸ்வரியமும் நிறைந்திருந்தது. இது அறிவியல் ரீதியாகவும் நமக்கு நன்மையை தருகிறது. ஆன்மீக ரீதியாகவும் நன்மையை தருகிறது.
Vastu Tips
வீட்டில் இருக்கும் எவ்வளவு கஷ்டங்களும், துன்பங்களும் தீர்வதற்கும், மகாலட்சுமி கடாட்சம் இல்லாத வீடுகளில், மகாலட்சுமி குடியேறவும் இந்த பரிகாரத்தை வெள்ளி, செவ்வாய் நாட்களில் செய்யலாம்.
இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யும் போது, வீடு முழுவதும் சுத்தம் செய்து விட்டு, பூஜை அறையையும் நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு சிறிய செம்பு டம்ளரை எடுத்து அதில் சுத்தமான நல்ல தண்ணீரை ஊற்றி அதில் வாசம் மிகுந்த பச்சை கற்பூரம் ஏலக்காய் துளசி இலைகள் போட்டு உங்கள் வீட்டு வடகிழக்கு மூலையில் வையுங்கள்.
Vastu Tips:
இது உங்களுக்கு பணவரவை அதிகரிக்கச் செய்யும். வாரத்தில் இரண்டு நாள் இந்த டம்ளரில் இருக்கும் தண்ணீரை கீழே ஊற்றி விட்டு புதிய தண்ணீர் வைத்தால் கூட போதும். செம்பு நேர்மறை ஆற்றலை ஈர்க்கக் கூடியது. இதனால் உங்கள் வீட்டில் மகாலட்சுமியின் அருள் அதிகரித்து வறுமை நீங்கி செல்வ வளம் நிச்சயம் பெருகும்.