Budhan Peyarchi 2022: புதன் பெயர்ச்சியால்..இந்த ராசிகளுக்கு இன்னும் 24 மணி நேரத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும்..
Budhan Peyarchi 2022 Palangal: புதன் சுபமாக இருக்கும்போது, ஒருவருக்கு சுப பலன்கள் கிடைக்கும். அப்படியாக ஆகஸ்ட் 21ம் தேதி புதன் சுப பெயர்ச்சியால், எந்தெந்த ராசிகளுக்கு வாழ்வில் புது ஒளி பிறக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
Budhan Peyarchi 2022 Palangal:
ஜோதிடத்தின் பார்வையில், புதன் கிரகம் தனது ராசியை மாற்றும்போது அதன் தாக்கம் 12 ராசிகளையும் பாதிக்கும். வணிகம், பேச்சு, புத்திசாலித்தனம், வியாபாரம், தர்க்கம் மற்றும் பணம் போன்றவற்றின் காரணியாக புதன் கிரகம் கருதப்படுகிறது. அந்த வகையில், இன்னும் 24 மணி நேரத்தில் நாட்களில் அதாவது ஆகஸ்ட் 21 முதல் புதன் கிரகம் தனது ராசியை மாற்றப் போகிறது. புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் குறிப்பிட்ட ராசிகளுக்கு பொருளாதார நிலை, தொழில் வாழ்க்கை மற்றும் கல்வி ஆகியவற்றில் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் புதன் கிரகத்தின் ராசி மாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Budhan Peyarchi 2022 Palangal:
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் நிதி நிலை மேம்படும். இந்த காலகட்டத்தில் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். அதேபோல் உங்களின் காதல் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். பணமும், புத்தி சாதுர்யமும் பெறுவீர்கள். இருப்பினும், உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
Budhan Peyarchi 2022 Palangal:
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் நன்மையான பலன்களை பயக்கும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை நீங்கள் பெறுவீர்கள். குடும்பத்துடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். இந்த ராசியில் இருக்கும் வியாபாரிகள்தங்கள் வியாபாரத்தில் அதிக லாபம் அடையலாம். நீங்கள் புதிய வேலை தொடங்க நினைத்தால் இது சரியாமன நேரமாக அமையும்.
Budhan Peyarchi 2022 Palangal:
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி சாதகமாக பலனை தரும். இந்த காலகட்டத்தில் நீங்கள் மரியாதை மற்றும் கௌரவத்தை பெறவீர்கள். எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுப்பதற்கு முன், பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.இந்த காலகட்டத்தில் நீங்கள் சிக்கிய பணத்தை திரும்பப் பெறலாம்.
Budhan Peyarchi 2022 Palangal:
கன்னி:
புதன் சஞ்சாரம் கன்னி ராசிக்காரர்களுக்கு எல்லா வகையிலும் நன்மை பயக்கும். இந்த நேரம் உங்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். தொழில் முன்னேற்றத்துடன் பண வரவு ஆதாயத்திற்கான அறிகுறிகள் ஏற்படும்.உங்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.கூட்டாளியின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.