- Home
- Lifestyle
- கிச்சனில் மறைந்துள்ள கரப்பான் பூச்சி, பல்லி எச்சங்கள்.... கிருமி இடமிருந்து நம்மை பாதுகாக்க சில பயனுள்ள டிப்ஸ்
கிச்சனில் மறைந்துள்ள கரப்பான் பூச்சி, பல்லி எச்சங்கள்.... கிருமி இடமிருந்து நம்மை பாதுகாக்க சில பயனுள்ள டிப்ஸ்
Kitchen cleaning Tips: உங்கள் சமையலறை பகுதியை சுத்தமாகவும், அதில் இருக்கும் பொருட்களையும் கரப்பான் பூச்சி, பல்லி எச்சங்களிடமிருந்து எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

kitchen cleaning
குடும்ப தலைவிகள் நம் வீட்டில் அதிகம் பயன்படுத்தும் இடம் சமையல் அறை ஆகும். குறிப்பாக, காலையில் எழுந்து ஆஃபீஸ் ஃபோன் கால்ஸ், குழந்தைகள், குடும்ப வேலை இடையே சமையலறை என பிஸியாக இருக்கும் பெண்கள், சமையல் அறையில் சில முக்கிய விஷயங்களை கவனிக்க தவறுகின்றனர். உங்கள் வீட்டின் அளவு சிறியதோ, பெரியதோ அதனை நீங்கள் முறையாக பயன்படுத்த புத்திசாலித்தனமும், புதுமையான சிந்தனைகளும் தேவை. வீட்டில் உள்ள அனைவருக்கும் சுவையோடு அன்பையும் கலந்து உணவு தயாரிக்கும் சமையலறை சுத்தமாகவும், வேலையை சுலபமாகவும் செய்ய சில பயனுள்ள குறிப்புகளை தெரிந்துகொள்வது அவசியம். எனவே உங்களுடைய சமையலறையின் ஒவ்வொரு மூலை முடுக்கு உட்பட அனைத்து ஏரியாவை சரியாக பயன்படுத்துவது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.
kitchen cleaning
டிப்ஸ்1:
சமையல் அறையில் நாம் அன்றாடம் அதிகம் பயன்படுத்தும் பாத்திரங்கள் கழுவும் 'சிங்க்’ எப்போதும் பாசியும், அழுக்கும் படிந்திருக்கும். இதனால், எப்போதும் ஒருவித நாற்றம் இருக்கும். இதற்கு முதலில் சிங்க் சுவர்களில், கிளீனரை ஊற்றி நன்றாகத் தேய்த்துக் கழுவவும். பிறகு, நாப்தலின் உருண்டையை சிங்கினுள் போட்டு வைக்க வேண்டும். இதனால் கரப்பான், பல்லி போன்ற பூச்சித் தொல்லைகளில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும்.
kitchen cleaning
டிப்ஸ் 2:
சாப்பாடு தயாரித்தவுடன், சமையல் அறையை மட்டுமல்ல, ஒவ்வொரு உணவையும் தயாரித்த பிறகு கேஸ் அடுப்பையும் சுத்தம் செய்வது நல்லது. கேஸ் அடுப்பை எண்ணெய்ப் பிசுக்கு இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க, அடுப்பிலும் சமையல் மேடையிலும் திரவ சோப்பை ஊற்றி நன்கு தேய்த்து ஊறவிட்டு சுத்தமாக தேய்த்து கழுவ வேண்டும். இல்லையென்றால், கரப்பான், பல்லி போன்ற பூச்சிகள் இரவில் அந்த இடத்தில் உலா வரும். இவை நமக்கு பல்வேறு நோய் தொற்றுக்களை உண்டாக்குகிறது.
kitchen cleaning
டிப்ஸ் 3:
சமையல் அறைக் குப்பைக் கூடையை சிங்கிற்கு கீழ் வைக்கலாம். மூடும் வசதியுடைய கூடை நல்லது. இந்தக் குப்பைக் கூடையில் இருந்து கிளம்பும் நாற்றத்தைத் தடுக்க ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடாவைக் கொட்டி, கூடைக்குப் பக்கத்திலேயே வைப்பது பலன் தரும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பேக்கிங் சோடாவை மாற்றினால் போதும்.
kitchen cleaning
டிப்ஸ் 4:
மற்றொரு முக்கியமான அம்சம் நாம் பயன்படுத்தும் ஸ்பான்ச் கிருமிகள் தங்கும் இடம். அதன் ஒரு சதுர இன்ச் பரப்பிலேயே லட்சத்துக்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் குடியிருக்கும். எனவே, ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் ப்ளீச்சிங் தூள் கலந்த வெந்நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து தண்ணீரால் சுத்தம் செய்ய பரிந்துரைக்கிறது. இல்லையென்றால், இரவில் கரப்பான், பல்லி போன்றவை அதில் ஏறி விளையாடும் இவற்றின் எச்சங்கள் ஸ்பான்ச்சில் உள்ள ஈரப்பதத்தால் ஒட்டிக்கொள்ளும், இவை வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று வலியை உருவாக்கும்.