- Home
- Lifestyle
- பாத்திரம் அடிபிடித்து விட்டதா? விடாப்பிடியான கரையை போக்கி, பாத்திரத்தை பளிச்சுனு மின்ன வைக்கும் நச்சு டிப்ஸ்..
பாத்திரம் அடிபிடித்து விட்டதா? விடாப்பிடியான கரையை போக்கி, பாத்திரத்தை பளிச்சுனு மின்ன வைக்கும் நச்சு டிப்ஸ்..
Burnt milk vessel cleaning in Tamil: உங்கள் வீட்டில் இருக்கும் பாத்திரத்தில் விடாப்பிடியாக ஒட்டிக் கொண்டிருக்கும் கறையை நொடியில் சுத்தம் செய்வது பற்றிய அட்டகாசமான டிப்ஸ் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

நம்முடைய அனைவரின் வீடுகளில் இயல்பாக நடக்கும் தவறுகளில் ஒன்றுதான் பாத்திரம் அடிபிடித்து விடுவது. ஒரு சில நேரம் நாம் அடுப்பை அணைக் மறந்துவிட்டு, நம்முடைய அன்றாட பணிகளை செய்ய சென்று விடுவோம். கருகிய வாடை அடிக்கும் வரை நமக்கு அது தெரியவே தெரியாது.
pans-cleaning
இதனால் நம்முடைய பாத்திரம் வீணாகி விடுவதுடன், நாம் இரட்டிப்பு வேலை செய்ய வேண்டி இருக்கும். இல்லையென்றால் அதனை தூக்கி போட்டு விட்டு வேறு பாத்திரம் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும். இதனால் உங்கள் பணமும் செலவு ஆகும். எனவே,சமையல் அறையில் நாம் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும்.
அப்படி, உங்கள் வீட்டில் இது போன்ற பாத்திரத்தில் விடாப்பிடியாக ஒட்டிக் கொண்டிருக்கும் கறையை நொடியில் சுத்தம் செய்வது பற்றிய அட்டகாசமான டிப்ஸ் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். கண்டிப்பாக இதை ட்ரை பண்ணி பாருங்கள், உங்களின் பணமும் மிச்சம், கையும் வலிக்கவே வலிக்காது.
அதற்கு முதலில் நீங்கள் அடிபிடித்த பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முக்கால் பாகம் தண்ணீரை நிரப்பி அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள். ஒரு இரண்டு நிமிடத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்து விடும். அந்த சமயத்தில் கொஞ்சம் உப்பு மற்றும் எலுமிச்சை தோலை எடுத்து உள்ளே போடுங்கள்.
பின்னர் ஒரு ஸ்பூன் அளவுக்கு டிடர்ஜென்ட் பவுடர் அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், பாத்திரம் தேய்க்கும் வாஷிங் பவுடரை விட, டிடர்ஜென்ட் பவுடர் வெகு விரைவாக வேலை செய்யும். இப்போது அடுப்பை சிம்மில் வைத்துக் இரண்டு நிமிடம் கொள்ளுங்கள். இல்லையென்றால் டிடர்ஜென்ட் பவுடரில் இருக்கும் நுரை பொங்க ஆரம்பித்து விடும்.
பிறகு அடுப்பை அணைத்து அந்த பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை சிங்கிள் கொட்டி விடுங்கள். அதன் பிறகு, சோப் அல்லது லிக்விட் கொண்டு நீங்கள் எப்பொழுதும் போல உங்கள் அந்த பாத்திரத்தை தேய்த்து பாருங்கள். பாத்திரம் புதிது போல பளிச்சென்று பாத்திரம் மின்னும். எனவே இந்த முறையை ட்ரை பண்ணி பாருங்கள்.மேலும் படிக்க...இந்த அற்புத சக்தி பற்றி தெரிந்தால் போதும்..இனி எலுமிச்சம் பழத்தோலை தூக்கி குப்பையில் போட மாட்டீர்கள்..