MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Kitchen Tips : இட்லி மாவு புளிக்கலயா? வெறும் ஒரு மணி நேரத்தில் மாவு புளிக்க சூப்பர் டிப்ஸ்

Kitchen Tips : இட்லி மாவு புளிக்கலயா? வெறும் ஒரு மணி நேரத்தில் மாவு புளிக்க சூப்பர் டிப்ஸ்

இட்லி, தோசை மாவை எளிமையான முறையில் வெறும் ஒரு மணிநேரத்தில் புளிக்கச் செய்யும் அற்புதமான டிப்ஸ் இங்கு காணலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Nov 06 2025, 04:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
How To Ferment Idli Dosa Batter In One Hour
Image Credit : Pinterest

How To Ferment Idli Dosa Batter In One Hour

தமிழ்நாட்டில் இட்லி, தோசை ஆகிய உணவுகளை சமைக்காத வீடுகள் மிகவும் குறைவு. இட்லி மாவு உண்மையில் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யக் கூடிய அருமையான உணவு. புளிக்கவைக்கப்பட்ட மாவில் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை ஆதரிக்கும் பண்புகள் உள்ளன. ஆனால் பெரும்பாலானோர் மாவு அரைக்க அரிசி ஊறவைக்க மறந்து விட்டு, தாமதமாகவே மாவு அரைப்பார்கள். அது புளிக்க கூடுதல் நேரம் எடுக்கும். இதுமாதிரியான அவசர காலங்களில் மட்டும் இங்கு கொடுத்துள்ள டிப்ஸ் உபயோகிக்கலாம். இந்தப் பதிவில் அரிசி மாவை எப்படி புளிக்கச் செய்யலாம் என காண்போம்.

25
பிரஷர் குக்கர் முறை
Image Credit : Istock

பிரஷர் குக்கர் முறை

நல்ல மூடியுள்ள பாத்திரத்தை எடுத்து அதில் தேவையான மாவை ஊற்றி உப்பு போடுங்கள். இதை நன்கு கலக்கிவிட்டு கொள்ளுங்கள். ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடு செய்யுங்கள். இந்தக் குக்கருக்குள் கலக்கிய மாவையும் வைத்து மூடி வைத்து மூட வேண்டும். குக்கரை மூடி விசிலை சொருகுங்கள். வெறும் 5 நிமிடங்கள் அடுப்பை குறைந்த தீயில் எரியவிடுங்கள். பின்னர் அடுப்பை அணைக்க வேண்டும். இதை ஒரு மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு குக்கர் மூடியை திறந்தால் மாவு நன்கு புளித்து இட்லி அல்லது தோசை செய்யும் பதத்திற்கு வந்துவிடும்.

Related Articles

Related image1
Tips For Storing Idli Batter : ஃப்ரிட்ஜில் இட்லி மாவை '3' நாளுக்கு மேல வச்சு யூஸ் பண்றீங்களா? உடனே இதை மாத்துங்க!!
Related image2
Protein Dosa Batter : தோசை மாவில் இந்த '1' பொருள் சேர்த்து அரைங்க.. புரோட்டீன் தேவை பூர்த்தியாகும்!!
35
பாத்திரங்கள் தேர்வு
Image Credit : Pinterest

பாத்திரங்கள் தேர்வு

மாவை சேமிக்க பிளாஸ்டிக் வாளி, டப்பாக்களை பயன்படுத்துவதற்கு பதிலாக மண் பாத்திரங்கள், எவர்சில்வர் பாத்திரங்களை உபயோகிக்கலாம். இவை மாவை சரியாக புளிக்கவைக்கும். சில்வர் பாத்திரங்களில் மாவை அரைத்து வைப்பது நல்லது.

45
அடுக்கு அருகே வைத்தல்
Image Credit : Google And Youtube

அடுக்கு அருகே வைத்தல்

இட்லி மாவில் கல் உப்பு போட்டு கைகளால் மாவை நன்கு பிசைந்து கொள்ளுங்கள். இதனுடன் அரை ஸ்பூன் அளவுக்கு தயிர், சர்க்கரை (கால் ஸ்பூன்), அதே போல கால் ஸ்பூன் மட்டும் எலுமிச்சை சாறு விட்டு மூடி வைத்தால் சீக்கிரம் புளித்து விடும். இந்த பாத்திரைத்தை காற்று போகாதபடி மூடி, சமைக்கும் அடுப்புக்கு அருகே வைத்தால் அந்த வெப்பத்தில் 1 மணி நேரத்தில் புளிக்கும்.

55
Kitchen Tips
Image Credit : Instagram

Kitchen Tips

இந்த முறையை அடிக்கடி செய்யாமல் அவசர காலங்களில் மட்டுமே பயன்படுத்துங்கள். மாவை இயற்கை வழியில் புளிக்க வைப்பது நல்லது. இதற்கு மாவு அரைத்த பின்னர் 4 முதல் 7 மணி நேரம் தேவைப்படும். எப்போதும் சீக்கிரமே மாவை அரைத்து அதனை இயற்கையான முறையில் புளிக்கச் செய்து உண்பதே குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
சமையலறை குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Related Stories
Recommended image1
Tips For Storing Idli Batter : ஃப்ரிட்ஜில் இட்லி மாவை '3' நாளுக்கு மேல வச்சு யூஸ் பண்றீங்களா? உடனே இதை மாத்துங்க!!
Recommended image2
Protein Dosa Batter : தோசை மாவில் இந்த '1' பொருள் சேர்த்து அரைங்க.. புரோட்டீன் தேவை பூர்த்தியாகும்!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved