MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • கெட்டு போன மீன் 'இப்படி' தான் இருக்கும்.. நல்ல மீனை கண்டுபிடிக்க '7'  டிப்ஸ்!! 

கெட்டு போன மீன் 'இப்படி' தான் இருக்கும்.. நல்ல மீனை கண்டுபிடிக்க '7'  டிப்ஸ்!! 

Fish Tips : நல்ல மீனை பார்த்து வாங்குவதற்கு என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
Published : Feb 08 2025, 03:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
கெட்டு போன மீன் 'இப்படி' தான் இருக்கும்.. நல்ல மீனை கண்டுபிடிக்க '7' டிப்ஸ்!!

கெட்டு போன மீன் 'இப்படி' தான் இருக்கும்.. நல்ல மீனை கண்டுபிடிக்க '7' டிப்ஸ்!!

மீன்கள் உடலுக்கு ஆரோக்கியமானவை. புரதச்சத்துக்கு பெயர்போனவை. மீன் சாப்பிடுவது கண் முதல் இதயம் வரை பல உறுப்புகளுக்கு நன்மை தரக் கூடியது. ஆனால் இப்போதெல்லாம் மீன்களில் ரசாயனம் தடவி விற்பது, நீண்ட நாள் ஐஸில் வைத்து கெட்டு போன மீனை விற்பது என பித்தலாட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நல்ல மீன்கள் நன்மை செய்வது போலவே கெட்டுப் போன மீன்கள், ரசாயனம் கலந்த மீன்கள் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன. இந்த பதிவில் கெட்டு போன மீன்களை கண்டறிவது பற்றி காணலாம்.  

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ரசாயனம் பூசப்படும் மீன்கள்:

ரசாயனம் பூசப்படும் மீன்கள்:

சில இடங்களில் மீன்கள் கெட்டுப் போகாமல் புதிது போல தெரிய வேண்டும் என்பதற்காக ஃபார்மலின் என்ற ரசாயனத்தை பூசுவதாக சொல்லப்படுகிறது. 2020ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் இப்படிப்பட்ட மீன்கள் கண்டறியப்பட்டனவாம். இந்த ரசாயனம் இறந்த மனித உடல்களை கெடாமல் வைத்திருக்க பிணவறையில் வைத்திருப்பார்கள். இந்த மீன்களை நாம் உண்ணும்போது வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி போன்ற உடல் உபாதைகள் வரலாம். தொடர்ந்து உண்டால் புற்றுநோய் கூட வரும் வாய்ப்புள்ளது. 

36
நல்ல மீன் வாங்க டிப்ஸ்:

நல்ல மீன் வாங்க டிப்ஸ்:

1). ஐஸில் வைக்கும் மீன்கள்  இரண்டு நாட்களுக்கு மேல் வைத்தால் நல்லதல்ல. அந்த  மீன்களை கவனித்து வாங்க வேண்டும். அதற்கு மீனின் செவுளை பார்க்க வேண்டும். மீன் கெட்டுப் போகவில்லை எனில் அவை சிவப்பு நிறமாக இருக்கும். கெட்டுப் போன மீன்களில் வெளிர் நிறமாக காணப்படும். 

2). செவுள் நிறம் மாறாமல் இருக்க சிலர் ரசாயனம் பூசலாம். ஐஸில் வைப்பதால் கூட செவுள் நிறம் மாறலாம். இந்த மாதிரி நேரங்களில் மீனின் உடல் விறைப்பாக இருக்கிறதா என ஆராய வேண்டும். அப்படி மீன் உடல் தொளதொளவென இல்லாமல் உறுதியாக இருந்தால் வாங்கலாம். 

3). செவுளைப் பிளக்கும்போது அங்கு விரல்களை வைத்து தொட்டால் பிசின் போல அங்கு கொழகொழப்பாக இருக்கும். கையில் பிசுபிசுப்பு வந்தால் அது ஃபிரெஷ் மீன் தான். சந்தேகம் வேண்டாம். 

4). மீனின் கண்கள் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். அதாவது தெளிவாக நம்மை பார்ப்பது போல இருந்தால் நல்ல மீன். ரத்த நிறம், மங்கிய நிறம், உப்பிய கண்கள் இருக்கும் மீன்கள் ரொம்ப நாள்  ஐஸில் வைக்கப்பட்டவையாகும். 

5). ரசாயனம் பூசியுள்ள மீன்களின் மீது மருந்து வாசனை வரும். அதனால் கொஞ்சம் மூக்கை பயன்படுத்துங்கள். 

6). மீனை தலையை பிடித்து தூக்கினால் அதன் வால்பகுதி விறைப்பாக நிற்க வேண்டும். அப்படியில்லாமல் கீழே  நோக்கி தொளதொளவென தொங்கினால் கெட்டுப்போன மீன் என்று அர்த்தம். நல்ல மீன்  தலைப்பகுதியைத் தூக்கினால் விறைப்பாக இருக்கும். 

7). சில மீன்களின் செவுள் வெளிறி இருந்தாலும் அவை நல்ல மீனாக இருக்க வாய்ப்புள்ளது. அவற்றை அறிய உடல், வால், கண் ஆகியவற்றை பார்க்க வேண்டும். 

46
எப்படி பார்த்து மீன் வாங்க வேண்டும்?

எப்படி பார்த்து மீன் வாங்க வேண்டும்?

 
மீன் வாங்க சென்றால் மீனின் உடல்பகுதியை தொட்டு பார்க்க வேண்டும். விரல்களால் அழுத்தும் போது  சதைப்பகுதி விறைப்பாக இருந்தால் நல்ல மீன். ஆனால் அழுகிய தக்காளி மாதிரி விரல்கள் தொட்டாலே மீன் உடலில் குழிவிழுந்தால் கெட்டுப்போன மீனாகும். 

இதையும் படிங்க:  மீனுடன் பால் சேர்த்து சாப்பிடாதீங்க; இந்த பிரச்சனைகள் வரும்!

56
குளத்து மீன் வாங்க டிப்ஸ்!

குளத்து மீன் வாங்க டிப்ஸ்!

ஆறு, குளம், மீன் பண்ணை ஆகிய இடங்களில் பிடிக்கும் மீன்களை ஐஸில் வைத்து உண்ணக் கூடாது. அவற்றை உயிருடன் பிடித்து சமைப்பது தான் நல்லது. அவற்றை ஐஸில் வைத்து பயன்படுத்தக் கூடாது. அவை நல்லதல்ல. 

இதையும் படிங்க:  மீன் வாங்கப் போறீங்களா..? அப்ப முதல்ல 'இத' தெரிஞ்சுக்கோங்க.. நல்ல மீன் வாங்கலாம்!

66
மீன் சமைக்க தாமதமானால்!!

மீன் சமைக்க தாமதமானால்!!

மீன் சமைக்க தாமதமாகும் என்றால் அதனை கழுவி  புளிக்கரைசலில் போட்டு வைக்கலாம். இதை செய்யாவிட்டால் எலுமிச்சைச் சாறு பிழிந்துவிட்ட நீரில் ஊறவிடலாம். இதனால் சமைக்கும் நேரம் வரை மீன் பிரஷ் ஆக இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சமையலறை குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Innings Break
NZNZ
-
INDIND
(20.0 ov)191/8
NZ chose to bowl.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rat Control Tips: இதை செஞ்சி பாருங்க.. எலிகள் இனி உங்க வீட்டு பக்கமே வராது.. சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
தீபாவளிக்கு மனைவிக்கும், அம்மாவுக்கும் என்ன வாங்கலாம்? டாப் 6 அசத்தல் கிப்ட் ஐடியாக்கள் இதோ!
Recommended image3
Travel : வெறும் ரூ.2,000 செலவில் 6 மாநிலங்கள்! எப்படி டிராவல் செய்கிறார் இந்தப் பெண்? ரகசியம் இதுதான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved