இனி வாஷிங் மெஷின் வேண்டாம்; கம்பளி துணிகளை துவைக்க சூப்பர் டிப்ஸ்!!
Hand Washing Woolen Clothes : குளிர்காலத்தில் நீங்கள் கம்பளி துணிகளை துவைக்க விரும்பினால் கண்டிப்பாக இந்த குறிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள். உங்களது நேரம் ரொம்பவே மிச்சமாகும்.

Hand washing woolen clothes in tamil
தற்போது குளிர்காலம் என்பதால், கம்பளி ஆடைகளை பயன்படுத்துவோம். மேலும் கம்பளி ஆடைகளை சுத்தம் செய்ய வேண்டிய நேரம் இது. கம்பளி ஆடைகளை துவைக்காமல் நீண்ட நாள் பயன்படுத்தினால் அவற்றில் துர்நாற்றம் வீசும் அல்லது கறைகள் படிந்திருக்கும். அவற்றை அகற்றுவதற்கான எளிதான வழி கம்பளி ஆடைகளை துவைப்பதுதான் ஆனால் கம்பளி ஆடைகளை துவைப்பது அவ்வளவு பெரிதான காரியம் அல்ல.
Washing and drying woolen clothes in tamil
கம்பளி ஆடைகளை தவறான முறையில் துவைத்தால் அது அதன் மென்மையை இழந்து விடும் மற்றும் விரைவில் கிழிந்து விடும். ஆனால் இந்த சிக்கலை எளிதாக்க இன்று உங்களுக்காக சில உதவி குறிப்புகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க: வாஷிங் மிஷினில் மறந்தும் இந்த '6' துணிகளை போடாதீங்க!! துணிக்கு தான் சேதாரம்
How to care for woolen clothes in tamil
கம்பளி ஆடைகளை தனியாக துவைக்க வேண்டும்:
நீங்கள் கம்பளி ஆடைகளை துவைக்க விரும்பினால் முதலில் சுமார் 10 நிமிடம் சூடான நீரில் ஊற வைத்து, பிறகு தண்ணீரில் லேசாக சோப்பு போட்டு துவைக்க வேண்டும். முக்கியமாக கம்பளி ஆடைகளை ஊறவைக்கும் முன் உள்பக்கமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம் அவற்றின் நார்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
இது தவிர கம்பளி ஆடைகளை பிழிந்து துவைக்க கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த முறையில் நீங்கள் கம்பளை ஆடைகளை துவைத்தால் அதில் படிந்திருக்கும் தூசி நீங்கி, அவற்றின் நிறம் மற்றும் மென்மை அப்படியே இருக்கும்.
Caring for woolen garments in tamil
பிடிவாதமான கறைகளை சுத்தம் செய்ய:
கம்பளி துணிகளில் இருக்கும் பிடிவாதம் கறக்களை சுத்தம் செய்ய முதலில் கறை மீது லேசான சோப் சோப்பு அல்லது ஷாம்பு போட்டு உங்கள் கைகளால் கரையை தேய்க்கவும். பிறகு தண்ணீரில் அலசி வெயிலில் காய வைக்கவும். முக்கியமாக, கம்பளி துணிகளில் பிரஷ் கொண்டு வரும்போதும் தேய்க்க வேண்டாம்.
இதையும் படிங்க: போர்வையில் வீசும் கெட்ட வாசனை.. 'இப்படி' ஈஸியா சுத்தம் செய்ங்க!!
Drying and reshaping woolen clothes in tamil
ஜாக்கெட்டுகள் மற்றும் கம்பளி கோட்டுகளை துவைப்பது எப்படி?
குளிர்காலத்தில் ஜாக்கெட்டுகள் மற்றும் கம்பளி கோட் துவைக்க நீண்ட நேரம் எடுக்கும். இதற்கு முதலில் ஜாக்கெட்டில் உள்ள பிடிவாதமான கறை மீது லேசான சோப்பு போட்டு சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு கறையை மெதுவாக தேய்க்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் அலசவும்.