போர்வையில் வீசும் கெட்ட வாசனை.. 'இப்படி' ஈஸியா சுத்தம் செய்ங்க!!
Remove Musty Smell from Blankets : குளிர்காலத்தில் போர்வையில் இருந்து வரும் துர்நாற்றத்தை, சில எளிய பொருட்களைக் கொண்டு சுலபமாக போக்க முடியும். அதைப்பற்றி இங்கு பார்க்கலாம்.
Remove Musty Smell from Blankets In Tamil
குளிர்காலம் ஆரம்பமாகி விட்டது. குளிர் காற்றும் வீசத் தொடங்கியுள்ளதால், கம்பளி ஆடைகள், போர்வைகள் ஆகியவற்றை வெளியே எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆனால் அவை மாத கணக்கில் பீரோவில் வைத்திருப்பதால் அவற்றில் விசித்திரமான வாசனை வீசும்.
Remove Musty Smell from Blankets In Tamil
இப்படி வாசனை வீசும் போர்வையை துவைக்காமல் பயன்படுத்த முடியாது. ஆனால் அவற்றை குளிர்காலத்தில் துவைக்கவும் முடியாது. அப்படியானால் என்ன செய்வதென்று நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் கவலைப்பட தேவையில்லை. உண்மையில் சில குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும். பணத்தை செலவழிக்காமல் உங்கள் போர்வையில் இருந்து வரும் கெட்ட நாற்றத்தை விரைவிலேயே அகற்றி விடலாம்.
இதையும் படிங்க: குளிரில் 'எலக்ட்ரிக் போர்வை' பயன்படுத்துகிறீர்களா? இது பாதுகாப்பானதா..? தெரிஞ்சிக்க இத படிங்க!
Remove Musty Smell from Blankets In Tamil
போர்வையில் இருந்து வரும் கெட்ட நாற்றத்தை போக்க சில டிப்ஸ்:
பொதுவாகவே குளிர்காலத்தில் போர்வைகள், கம்பளை ஆடைகளில் துர்நாற்றம் வீசுவது பெரிய விஷயம் அல்ல. ஆனால் சில விஷயங்களை முன்கூட்டியே கவனித்தால் துர்நாற்றம் பிரச்சனையை பெருமளவில் அகற்றி விடலாம் இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்..
1. இதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் போர்வை மற்றும் கம்பளை ஆடைகளை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் போர்வையில் இருக்கும் ஈரப்பதம் நீங்கும் மற்றும் துர்நாற்றமும் அடிக்காது.
2. போர்வையில் துர்நாற்றம் வீசுவதற்கு ஒரு காரணம் என்னவென்றால், சிலர் கை, கால்களை கழுவி பிறகு படுக்கையில் அப்படியே வந்து விடுவார்கள். ஆனால் இந்த பழக்கத்தால், ஈரப்பதம் காரணமாக போர்வையில் துர்நாற்றம் அடிக்கும். எனவே நீங்கள் கை, கால்களில் ஈரம் ஏதுமில்லாமல் பிறகு போர்வையை பயன்படுத்துங்கள்.
3. அதுபோல நீங்கள் குளிர்காலத்தில் உங்களது படுக்கையில் உணவு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
Remove Musty Smell from Blankets In Tamil
கற்பூரம்:
குளிர்காலத்தில் போர்வையை அடிக்கடி துவைக்க மாட்டோம். எனவே அதில் இருந்து வரும் துர்நாற்றத்தை போக்க கற்பூரத்தை பயன்படுத்தலாம். இதற்கு கற்பூரத்தை நன்றாக உடைத்து அதை ஒரு தாளில் வைத்து, நன்றாக மடித்து அதை போர்வையில் மதியம் வரை அப்படியே வைத்து விடுங்கள். பிறகு போர்வையை சிறிது நேரம் வெயிலில் காய வைத்து எடுக்கவும். இப்படி செய்வதன் மூலம் போர்வையில் ஒரு போது துர்நாற்றம் வீசாது.
அத்தியாவசிய எண்ணெய்
போர்வையில் இருந்து வரும் கெட்ட வாசனை போக்க அத்தியாவசிய எண்ணை சிறந்த தீர்வாக இருக்கும். இதற்கு நீங்கள் விரும்பும் எந்த ஒரு அத்தியாவசிய எண்ணெயின் சில துளிகளை போர்வையில் தெளிக்கலாம். இது தவிர பருத்தி உருண்டையை அத்தியாவசிய எண்ணெயில் நனைத்து போர்வைக்குள் வைக்கலாம்.
Remove Musty Smell from Blankets In Tamil
பேக்கிங் சோடா & வினிகர்
போர்வையில் இருந்து வரும் துர்நாற்றத்தை போக்க பேக்கிங் சோடா மற்றும் வினிகரின் கலவையை பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் போர்வையை துவைக்கும் போது சோப்பு கரைசலுடன் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் வினிகரை சேர்க்க வேண்டும். நீங்கள் விரும்பினால் இதனுடன் எலுமிச்சை சாறும் சேர்த்துக் கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் போர்வையில் துர்நாற்றம் அடிக்காது. வாசனை வீசும்.
இதையும் படிங்க: AC Bed Sheet: ஏசி பெட்சீட் தெரியுமா? அதுவும் வெறும் ரூ.699 தான்! இதை வாங்கிட்டா ஜில்லுனு தூக்கம் வர்றது உறுதி!