MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Explained: டிராபிக் சிக்னல் விளக்குகள் பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்களில் மட்டும் இருப்பது ஏன்? காரணம் இதுதான்!

Explained: டிராபிக் சிக்னல் விளக்குகள் பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்களில் மட்டும் இருப்பது ஏன்? காரணம் இதுதான்!

பச்சை, சிவப்பு, மஞ்சள்... போக்குவரத்து விளக்குகள் ஏன் இந்த மூன்று வண்ணங்களைக் கொண்டுள்ளன என்று நீங்கள் எப்போதும் யோசித்திருக்கிறீர்களா?

2 Min read
Author : SG Balan
Published : Aug 30 2023, 03:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சிவப்பு, பச்சை, மஞ்சள்

சிவப்பு, பச்சை, மஞ்சள்

ஒரு நாள், போக்குவரத்து விளக்குகளுக்கு யாரோ வண்ணங்களைத் தேர்வு செய்யவேண்டியிருந்தது, அவர்கள் சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறங்களை பயன்படுத்துவது என்று முடிவு செய்திருக்கிறார்கள். அது ஏன் என்பது பற்றி பலரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள். சிலர் இதைப்பற்றி பல ஆண்டுகளாக யோசித்துக்கொண்டு இருக்கலாம். இந்த கேள்விக்கான பதிலை இன்று நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

26
போக்குவரத்து சமிக்ஞைகள்

போக்குவரத்து சமிக்ஞைகள்

இந்த வண்ணங்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டன என்பதை அறிய, போக்குவரத்து விளக்குகள் மற்றும் அவற்றின் வண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை அறிவது உதவியாக இருக்கும். 1910ஆம் ஆண்டில், நாட்டில் முதல் போக்குவரத்து சமிக்ஞைகள் வந்தன. கார்களின் ஓட்டத்தை பராமரிக்க அதிகாரிகள் விசில் மற்றும் விளக்குகளைப் பயன்படுத்தி, எப்போது நிறுத்த வேண்டும் அல்லது செல்ல வேண்டும் என்பதை ஓட்டுநர்களுக்கு தெரியப்படுத்தினர்.

36
போக்குவரத்து விளக்குகள்

போக்குவரத்து விளக்குகள்

1920இல், வில்லியம் பாட்ஸ் முதல் போக்குவரத்து விளக்கை உருவாக்கினார். அந்த நேரத்தில், எந்த வகையான விளக்குகள் அல்லது வடிவங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து எந்த விதிகளும் இல்லை. ஒவ்வொரு இடத்திலும் சிக்னல் விளக்குகள் வித்தியாசமாக இருக்கும்.

46
போக்குவரத்து கையேடு

போக்குவரத்து கையேடு

1935ஆம் ஆண்டில், ஃபெடரல் நெடுஞ்சாலை நிர்வாகம் சீரான போக்குவரத்து கட்டுப்பாட்டு சாதனங்களின் கையேட்டை உருவாக்கியது. அதில் அனைத்து அடையாளங்கள் மற்றும் சமிக்ஞைகளுக்கான தரநிலைகள் வரையறுக்கப்பட்டன. அந்தக் கையேடு போக்குவரத்து விளக்குகள் எல்லா இடங்களிலும் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறமாக இருக்க வேண்டும் என்று கூறியது.

56
சிக்னலில் வெள்ளை கலர்

சிக்னலில் வெள்ளை கலர்

போக்குவரத்து விளக்குகளுக்கு முன்பு, ரயில் போக்குவரத்தில் ஏற்கெனவே ஒளி சமிக்ஞைகள் பயன்படுத்தப்பட்டன. இந்த போக்குவரத்து விளக்குகளில் சிவப்பு என்றால் நிறுத்தம் என்றும், வெள்ளை என்றால் செல் என்றும், பச்சை என்றால் எச்சரிக்கையுடன் செல்லலாம் என்றும் பொருள் இருந்தது. பிறகு வெள்ளை நிறத்திற்குப் பதில் பச்சை நிறம் மாற்றப்பட்டது. ‘எச்சரிக்கையுடன் செல்லலாம்’ என்பதைக் குறிக்க மஞ்சள் நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

66
சிவப்பின் சிறப்பு

சிவப்பின் சிறப்பு

சிவப்பு நிறம் மிக நீளமான அலை நீளம் கொண்ட நிறம். அதாவது வெகுதொலைவில் இருந்தும் சிவப்பு நிறத்தைப் பார்க்க முடியும். இதனால் நிறுத்தச் சொல்லும் சிக்னல் தூரத்தில் வரும்போதே தெரிந்துவிட்டால் மிகவும் உதவியாக இருக்கும். இதனால்தான் நிறுத்தத்தைக் குறிக்க சிவப்பு நிறம் பயன்படுத்தப்படுகிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved