- Home
- Lifestyle
- Blood Group: இந்த ரத்த வகை உடையவரா நீங்கள்..? உங்களுக்கு இதய நோய் வரும் ஆபத்து இருக்கு..ஏன் தெரியுமா..?
Blood Group: இந்த ரத்த வகை உடையவரா நீங்கள்..? உங்களுக்கு இதய நோய் வரும் ஆபத்து இருக்கு..ஏன் தெரியுமா..?
Blood Group: உங்களுடைய ரத்த வகையை பொறுத்து இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

Blood Group:
இன்றைய மேற்கத்திய கலாசாரத்தில், இதய நோய் காரணமாக பல்வேறு இறப்புகள் ஏற்படுகிறது. சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நோய்களால் பாதிக்கபடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இவை இதய நோய் வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. இதனை தவிர்த்து ஒருவரின் ரத்த வகைகளை வைத்தும் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
Blood Group:
உங்கள் பெற்றோரிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கப்பெறும் மரபணுக்கள் அடிப்படையில் உங்களுக்கான ரத்த வகை எது என்பது தீர்மானிக்கப்படுகிறது. மனிதர்களிடம் பல்வேறு வகையான இரத்த வகைகள் உள்ளன. அதில் குறிப்பாக, AB, A, B, O இந்த ரத்த வகைகளை பிரிக்கும் போது. A பாசிடிவ், A நெகட்டிவ், B பாசிடிவ், B நெகட்டிவ், ABபாசிடிவ், AB நெகட்டிவ், O பாசிடிவ் மற்றும் O நெகட்டிவ் என்று எட்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது.
Blood Group:
இதில், ஏ, பி அல்லது ஏபி போன்ற குறிப்பிட்ட ரத்த வகையை கொண்டவர்களுக்கு, இதய நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.அதிலும் ஏபி ரத்த வகை கொண்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் 23 சதவீதம் அதிகம் ஆகும். ஆனால், ஓ வகை ரத்தம் கொண்டவர்களுக்கு இந்த ஆபத்து குறைவு ஆகும்.
Blood Group:
மேலும், ஓ வகை ரத்தம் கொண்டவர்களுக்கு இதய நோய் மட்டுமல்லாமல், வயிற்று புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயமும் குறைவு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, உங்கள் ரத்த வகை அதிக அபாயத்தை கொண்டது என தெரிந்து கொண்டால், அதில் இருந்து எப்படி உங்களை தற்காத்துக் கொள்வது என்பது குறித்த நடவடிக்கைகளில் உங்களை ஈடுபடுத்துங்கள்.