MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • உங்கள் உடலில் போதுமான புரதத்தை உறுதிப்படுத்த நீங்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள் இவை தான்.

உங்கள் உடலில் போதுமான புரதத்தை உறுதிப்படுத்த நீங்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள் இவை தான்.

நமது தசைகள், செல்கள் மற்றும் பிற உடல் கட்டமைப்புகளை ஆரோக்கியமாகவும் சரியாகவும் பராமரிக்க தேவையான வளர்ச்சி காரணிகளை புரதம் தான் வழங்குகிறது.

2 Min read
Author : Ramya s
| Updated : Jun 10 2023, 09:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்யும் புரதத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள், ஆனால் உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கும் இது அவசியம். புரதம் நமக்கு உடலுக்கு தேவையான முக்கியமான சத்து. நமது தசைகள், செல்கள் மற்றும் பிற உடல் கட்டமைப்புகளை ஆரோக்கியமாகவும் சரியாகவும் பராமரிக்க தேவையான வளர்ச்சி காரணிகளை புரதம் தான் வழங்குகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

சைவ உணவு டயட்கள் இப்போதெல்லாம் பிரபலமாகி வருகின்றன, ஆனால், அதிக ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், அவை புரதம் மற்றும் வைட்டமின் பி 12 இல் பற்றாக்குறையாக இருக்கலாம். அமினோ அமிலங்கள் புரதங்களின் அடிப்படை கூறுகள். நம் வாழ்நாள் முழுவதும், அமினோ அமிலங்கள் செல் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமானவை. புரோட்டீன் நமது சருமம், முடி மற்றும் நகங்களுக்கு நன்மை பயக்கும். அதிக புரதச்சத்து உள்ள உணவு தசைகளின் மறுவாழ்வுக்கும் உதவுகிறது. குறைவான புரதத்தை உட்கொள்ளும் ஒரு நபர், சோர்வு மற்றும் தசை வலிமை குறைவு போன்ற பிரச்சனைகளை அனுபவிக்கலாம். எனவே புரதம் நிறைந்த உணவுகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

37
பழங்கள்

பழங்கள்

பழங்களில் பெரும்பாலும் புரதச்சத்து அதிகம் இல்லை, ஆனால் கொய்யா, வாழைப்பழம் மற்றும் பெர்ரிகளில் கணிசமான அளவு உள்ளது. உடற்பயிற்சி செய்வதற்கு முன் இந்த பழங்களை உட்கொள்வதால் தசைகள் வலிமையாவதுடன், சோர்வு குறையும்.

47
உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

சைவ உணவு உண்பவர்களுக்கு உருளைக்கிழங்கு ஒரு சிறந்த உணவு. உருளைக்கிழங்கிலிருந்து தோராயமாக 8 கிராம் புரதத்தைப் பெறலாம். கூடுதலாக, உருளைக்கிழங்கு கணிசமான அளவு பொட்டாசியம் மற்றும் பிற வைட்டமின்களை வழங்குகிறது, அவை நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.

57
சியா விதைகள்

சியா விதைகள்

சியா விதைகள் இந்தியாவில் மிகவும் பிரபலமான சூப்பர்ஃபுட் ஆகி வருகிறது. சியா விதைகள் புரதத்தின் சிறந்த மூலமாகும். மேலும் அவை கால்சியம், மெக்னீசியம், இரும்பு, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன, அவை நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக இருக்க உதவும்.

67
நட்ஸ்

நட்ஸ்

சைவ புரதத்தின் நம்பகமான ஆதாரத்தை நம் உணவில் சேர்க்க விரும்பினால், நட்ஸ் வகைகள் நமது உணவுத் தேர்வுகளில் சேர்க்கப்பட வேண்டும். சைவ உணவு உண்பவர்கள் பாதாம் பருப்பில் இருந்து போதுமான புரதத்தைப் பெறலாம். ஒவ்வொரு நாளும் ஒரு கைப்பிடி பாதாம் பருப்பில் 6 கிராம் வரை புரதம் காணப்படலாம். நமது உணவில் உள்ள புரதம் வேர்க்கடலை போன்ற பிற கொட்டைகளிலிருந்தும் வரலாம்.

77
பருப்பு, தானியங்கள்

பருப்பு, தானியங்கள்

அரை கப் சமைத்த பருப்பு, மார் 12 கிராம் புரதத்தை வழங்குகிறது. எனவே உணவில் தவறாமல் பருப்பு வகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதே போல் தானியங்களில் பொதுவாக கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் அவற்றில் கணிசமான அளவு புரதமும் உள்ளது. உதாரணமாக, அரை கப் ஓட்ஸில் 5 கிராம் புரதம் உள்ளது. கம்பு, தினை போன்ற பாரம்பரிய தானியங்களையும் உடலில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
டீ, காபி கறை முதல் செல்லப் பிராணிகள் முடி வரை... சோஃபா உறையைக் கழற்றாமல் நிமிடங்களில் பளிச்சென மாற்றும் டிப்ஸ்!
Recommended image2
D-Mart : இங்கே குறைவான விலையில் கிடைக்கும் 10 பொருட்கள்! என்னென்ன தெரியுமா?
Recommended image3
Detox Drinks: செரிமானத்தை சீராக்கும் 8 எளிய டிடாக்ஸ் பானங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved