- Home
- Lifestyle
- Sukran Peyarchi 2022: இன்று சுக்கிரன் பெயர்ச்சியால்...இந்த ராசிகளுக்கு மித மிஞ்சிய பணம், புகழ் வந்து சேரும்..!
Sukran Peyarchi 2022: இன்று சுக்கிரன் பெயர்ச்சியால்...இந்த ராசிகளுக்கு மித மிஞ்சிய பணம், புகழ் வந்து சேரும்..!
Sukran Peyarchi 2022 Palangal: இன்று சுக்கிரன் கிரகம் கன்னி ராசியில் மாறப்போகிறது. சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பணம், புகழ் மற்றும் செல்வம் பெருக செய்யும்.

Sukran Peyarchi 2022 Palangal:
ஜோதிடத்தின் படி, சுக்கிரன் கிரகம் மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். ஒருவரது வாழ்வில் சுக்கிரன் சுபமாக இருந்தால், பொன்னும், பொருளும் அள்ளி தருகிறார். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. சுக்கிரன் சிற்றின்பம், திருமணம் முதலான சுகத்தை ஆணுக்கு அளிப்பவர். அதன்படி சுக்கிரன் கிரகம் இன்று அதாவது செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி தனது ராசியை மாறப் போகிறது.
Sukran Peyarchi 2022 Palangal:
அதன்படி, சுக்கிரன் கிரகம் சரியாக 12. 00 மணியளவில் கன்னி ராசியில் பிரவேசிப்பார். இந்த நேரத்தில் சூரியனும் புதனும் ஏற்கனவே கன்னி ராசியில் உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் கன்னி ராசியில் சுக்கிரன் மாறுவது சிறப்பான கிரக நிலையை உருவாக்கும். இதனால் யாருக்கு என்ன பலன் என்பதை பார்ப்போம்.
Sukran Peyarchi 2022 Palangal:
ரிஷபம்:
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அதிபதி சுக்கிரன் இருப்பதால் சுக்கிரன் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். நிறுத்தப்பட்டு இருந்து பணத்தைப் திருப்பி பெறுவீர்கள். மதிப்பும் செல்வாக்கும் அதிகரிக்கும். இவர்களின் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பண வரவு மிகவும் சாதகமாக இருக்கும்.
Sukran Peyarchi 2022 Palangal:
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் மிகவும் சுப பலன்களைத் தரும். பண வரவு சாதகமாக இருக்கும். சொத்துக்களைக் காணலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அவர்களின் வியாபாரம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் உணர்வீர்கள்.
Sukran Peyarchi 2022 Palangal:
கன்னி:
சுக்கிரன் சஞ்சாரம் அவர்களுக்கு சுப பலன்களைத் தரும். பண வரவு மிகவும் சாதகமாக இருக்கும். பழைய முதலீடுகள் லாபகரமாக இருக்கும். முதலீடு செய்வதற்கும் இதுவே நல்ல நேரம். கன்னி ராசிக்காரர்களின் வியாபாரம் பெருகும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.