Purattasi Non Veg: புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிட கூடாது, அறிவியல் மற்றும் ஆன்மீகம் என்ன சொல்லுது தெரியுமா
Purattasi Non Veg: பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியில், அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து கோவிலுக்கு விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். இருப்பினும், சிலருக்கு ஏன் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிட கூடாது என்ற சந்தேகம் இருக்கும்.
ஆன்மீக ரீதியாக நல்லது:
ஜோதிட சாஸ்திரத்தில் 6வது ராசியான கன்னி ராசிக்குரிய மாதம் புரட்டாசி. அதற்கு அதிபதி புதன். புதன் பகவான் சைவத்திற்குரிய கிரகம் என்பதால், புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளாமல், விரதம் இருந்து பெருமாள் வழிபாடு செய்வது சிறந்தது.
அறிவியல் பூர்வமான உண்மை:
புரட்டாசி மாதத்தில் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும். இதனால், காற்று குறைந்து மழை ஆரம்பிக்கும் நேரம். இதுநாள் வரை சூடாகி இருந்த பூமி இப்பொழுது, தன்னுள் இருக்கும் சூட்டை மழை பெய்ய வெளியேற்றி கொண்டு உஷ்ணத்தை கிளப்பிவிடும்.
இது அக்னி நட்சத்திர வெயில் காலமான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான பருவத்தில் நிலவும் வெப்பத்தை காட்டிலும் கொடியது. எனவே, இந்த சமயத்தில் அசைவ உணவுகளை சாப்பிட்டால் மேலும் கூடுதல் சூட்டை கிளப்பி வயிறு சம்பந்தமான உபாதைகளை ஏற்படுத்தி, நம்முடைய உடல் நலத்தை கெடுக்கும்.
ஆம், புரட்டாசி மாதத்தில் சூரியனின் வெளிச்சம் குறைந்து காணப்படும். இதன் காரணமாக, பூமியின் சுழற்சி இயக்கத்தின் படி நமக்கு செரிமானக் குறைவும், வயிற்று உபாதைகளும் ஏற்பட்டு நம் உடம்பில் கெட்ட கொழுப்புகள் தங்கி விடும்.
மேலும், குறைவாக பெய்யும் மழையினால் நோய் தோற்று ஏற்பட்டு சளி, ஜுரம் போன்றவை அதிகரிக்கும். இது கதையோ, நிஜமோ எதுவாக இருந்தாலும், மாறும் காலநிலையால் ஏற்படும் இந்த சிரமத்தை எதிர்கொள்ள ஒரு மாதம் மட்டும் உணவு பழக்கத்தை மாற்றி தான் பாருங்களேன்.