Sani Peyarchi 2022: சனியின் வக்ர பெயர்ச்சி...ஜனவரி 17, 2023 வரை மிகுந்த உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்..
Sani Peyarchi 2022 Palangal: சனி பகவான் கடந்த 12 ஜூலை 2022 அன்று மகர ராசிக்குள் நுழைந்தார். இதனால், வரும் ஜனவரி 17, 2023 வரை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
sani peyarchi 2022 date
ஜோதிடத்தின் பார்வையில், நீதியின் கடவுளான சனி பகவான் இரண்டரை ஆண்டுகளில் ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறார். ஆனால் 2022 ஆம் ஆண்டில், சனி கிரகம் இதுவரை 2 முறை ராசியை மாற்றியுள்ளது. நீதி தேவனான சனி பகவான் கடந்த 12 ஜூலை 2022 அன்று காலை 10.28 மணிக்கு மகர ராசிக்குள் நுழைந்தார்.
sani peyarchi 2022 date
இதையடுத்து வரும் ஜனவரி 17, 2023 வரை சனி இந்த ராசியில் வக்ர நிலையில் இருப்பார். இந்தச் சனிப்பெயர்ச்சியால் குறிப்பிட்ட ராசிகளில் ஏழரை நாடு சனியும், சனி திசையும் நடக்கிறது. எனவே, வரும் ஜனவரி 2023 வரை எந்தெந்த ராசிகளில் சனி தசை இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
sani peyarchi 2022 date
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி திசை மற்றும் எழரை நாட்டு சனியினால் உடல், நிதி மற்றும் மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் முன்னேற்றம் தடைபடும். சனி தசை நடக்கும் போது உண்ணும் உணவில் இருந்து உடுத்தும் ஆடை வரை எளிமையை கடைப்பிடிக்க வேண்டும். சனிக்கிழமை தோறும் சனி கோவிலில் தீபம் ஏற்றுவது நல்லது.
sani peyarchi 2022 date
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்குப் பிற்போக்கான சனி பகவான் அசுப பலன்களை தருவார். இந்த காலகட்டத்தில், நீங்கள் சண்டை போடுவதை தவிர்க்கவும், வாகனங்களில் செல்லும்போது நிதானமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில்உங்களுக்கு மோசமான நிதி இழப்பு ஏற்படும். இதனால் நிதி சிக்கல்கள் இருக்கும். எந்த விஷயத்திலும் பொறுமையாக செயல்படுவது நல்லது. வெளி இடங்களுக்கு செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
sani peyarchi 2022 date
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில், பக்குவப்படுத்தும் நடவடிக்கையை சனி பகவான் மேற்கொள்கிறார்.தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் தடைபடும். சனி தசை வரும் போது ஒருவர் பொதுவாக நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வருமானம் குறையும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் தடைபடும். வாழ்வில் கோபத்தை நிதானமாக கையாள்வது நல்லது. எதிலும், முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.