- Home
- Lifestyle
- இன்று ஆரம்பமாகும் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்...எந்த நேரம் தெரியுமா..? யாருக்கு எச்சரிக்கை அவசியம்..!
இன்று ஆரம்பமாகும் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்...எந்த நேரம் தெரியுமா..? யாருக்கு எச்சரிக்கை அவசியம்..!
Lunar Eclispe 2022 Horoscope Today: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம், மே 16 அதாவது இன்று நிகழவுள்ளது. இந்த கிரகணம் நிகழும் போது யாருக்கு எச்சரிக்கை அவசியம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

chandra grahan 2022
ஜோதிடத்தில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகியவை மங்களகரமானதாக கருதப்படுவதில்லை என்பதால், இந்த நேரத்தில் சில வேலைகளைச் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திர கிரகணம் வட தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் தெரியும். ஆனால், இந்த கிரகணம் இந்தியாவில் காணப்படாது.
chandra grahan 2022
மே 16 ம் தேதி அதாவது இன்று, இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 12:20 மணிக்கு முடிவடையும். இந்த கிரகணம் காலத்தில், எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
chandra grahan 2022
விருச்சிகம்:
ஜோதிடத்தின் படி, இன்று நிகழும் சந்திர கிரகணம் விருச்சிக ராசியில் நடைபெறும். எனவே, இந்த நேரத்தில், விருச்சிகம் ராசிக்காரர்கள் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும். நீங்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்கலாம் எனவே துவண்டு போகாமல், துணிச்சலுடன் செயல்படுங்கள். பண சிக்கல் ஏற்படும். நீங்கள் வெளி இடங்களுக்கு செல்லும் போது அதிக எச்சரிக்கையுடன் இருங்கள்.
Taurus
ரிஷபம்:
ஜோதிடத்தின் படி, ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் சந்திர கிரகணம் கெடு பலன்களை கொடுக்கும். தொழிலில் பிரச்சனைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். இந்த காலக்கட்டத்தில் வன்முறை செயல்களை தவிர்ப்பது அவசியம்.
(Aquarius)
கும்பம்:
கும்பம் ராசியில் பிறந்தவருக்கு இன்று நிகழும், சந்திர கிரகணம் பல்வேறு பிரச்சனையை கொடுக்கும். உறவுகள் மோசமடையும். நீங்கள் இந்த நேரத்தில் அதிக பொறுமையுடனும் நிதானத்துடனும் இருப்பது அவசியம்.பணம் தொடர்பான விஷயங்களில் அதிக கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் நஷ்ட்டம் ஏற்படும். எதிலும், நிதானத்துடன் செயல்படுவது அவசியம்.