Asianet News TamilAsianet News Tamil

சந்திர கிரகணத்தை ஒட்டி நிகழும் சூரிய பெயர்ச்சி..யாருக்கு ஆபத்து...யாருக்கும் அருள்.. இன்றைய 12 ராசிகளின் பலன்!

Suriyan Peyarchi 2022: ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியன் கிரகங்களின் ராஜாவாகவும், செவ்வாய் கிரகங்களின் தளபதியாகவும் கருதப்படுகிறது. இதுவரை மீன ராசியில் பயணித்து வரும், சூரியன் 2022 மே 15 ஆம் தேதி அதாவது நாளை ரிஷப ராசிக்கு செல்கிறார்.

Chandra Graha and Suriyan Peyarchi falls on the same day in 2022
Author
Chennai, First Published May 15, 2022, 5:01 AM IST

சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுகிறார். சூரியன் கடந்த  2022 ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் செவ்வாய் ஆளும் மேஷ ராசியில் பிரவேசம் அடைந்துள்ளார். இந்த நிலையில், தற்போது மே 15 ஆம் தேதி அதாவது நாளை சூரியன் மேஷ ராசியை விட்டு ரிஷப ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். 

சூரிய பெயர்ச்சி2022:

இந்த சூரிய பெயர்ச்சி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதையடுத்து, அடுத்த  30 நாட்களுக்கு சூரியன் ரிஷப ராசியில் மட்டுமே தங்கி இருப்பார். எனவே, இந்த சூரிய பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு சிறப்பான பலன்களை தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்: 

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி காரணமாக, இந்த நேரத்தில் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு பொறுமை தேவை. திருமண காரியங்கள் நடந்து முடியும். எதிலும், முன்னேற்றம் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்.  

ரிஷபம்: 

சூரியன் பெயர்ச்சி ரிஷப ராசியில் நடப்பதால், உங்களுக்கு அதிக தாக்கம் இருக்கும். இந்த சூரிய பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பல நன்மைகளை அள்ளி தரும். தொழிலில் வெற்றி பெறுவார்கள். பதவி உயர்வு இருக்கும். பணம் சம்பாதிக்க இது ஏற்ற நேரமாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மொத்தத்தில் உங்களுக்கு இன்று முதல் நல்ல நேரம் ஆரம்பமாகும். 

மிதுனம்: 

மிதுனம் ராசியினருக்கு சூரியன் பெயர்ச்சி, இந்த நாள் உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களிடம் பேசும்பொழுது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எச்சரிக்கை அவசியம். 

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் நன்மையாக இருக்கும்.. உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். புதிய வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். புதிய வேலைகளைத் தொடங்குவீர்கள். வெற்றி உங்களை தேடி வரும்.

சிம்மம்: 

சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி நிச்சயம் நன்மை தரும். தொழிலில் பெரிய மாற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். மரியாதை கூடும். தந்தையிடமிருந்து பெரிய வரவு இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். 

கன்னி: 

கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி சுப பலன்களைத் அள்ளி தரும். உங்கள் வாழ்வில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். இருப்பினும், வேலை, பண விஷயங்களில் எச்சரிக்கை அவசியம். திருமண யோகம் கூடும். 

துலாம்: 

துலாத்தில் பிறந்தவர்களுக்கு நிகழ்ந்துள்ள சூரியனின் பெயர்ச்சி, அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரித்து காணப்படும். உங்களுக்கு திடீர் யோகம் உண்டு. 

விருச்சிகம்: 

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு நிகழ்ந்துள்ள சூரியனின் பெயர்ச்சி, வருமானம் அதிகரிக்க கூடிய நல்ல நாளாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதுமுக அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அலைச்சல் ஏற்படலாம். 

தனுசு: 

தனுசில் பிறந்தவர்களுக்கு நிகழ்ந்துள்ள சூரியனின் பெயர்ச்சி, இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அரசு வழி காரியங்களில் ஆதாயம் உண்டு. கணவன் மனைவியிடையே அன்னோன்யம் அதிகரிக்கும். 

மகரம்: 

மகரத்தில் பிறந்தவர்களுக்கு நிகழ்ந்துள்ள சூரியனின் பெயர்ச்சி காரணமாக, நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். வெளியிட பயணங்களின் பொழுது உடைமை மீது கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் லாபம் ஏற்படும். வாழ்வில் முன்னேற்றம் அதிகரிக்கும்.

கும்பம்: 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு நிகழ்ந்துள்ள சூரியனின் பெயர்ச்சி, உங்களுக்கு பொறுமை அதிகரிக்க வேண்டிய நாளாக இருக்கும். தேவையற்ற வார்த்தைகளை உபயோகிப்பதன் மூலம் சில இழப்புகளை சந்திக்க நேரலாம். கணவன் மனைவிக்குள் புரிதல் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாங்குவதங்கள் தவிர்ப்பது நல்லது. 

மீனம்: 

மீனத்தில் பிறந்தவர்களுக்கு நிகழ்ந்துள்ள சூரியனின் பெயர்ச்சி, வேலையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும், பாராட்டுகள் உண்டு. ஆன்மிக பயணம் மேற்கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன் உண்டாகும்.  உத்யோகஸ்தர்களுக்கு வாழ்வில் வெற்றி நிச்சயம்.

 மேலும்  படிக்க...Rahu Peyarchi: ராகுவின் பித்ரு தோஷம்... சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்...அதிஷ்டம் பெறும் ராசிகள்..

Follow Us:
Download App:
  • android
  • ios