வெயில் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சிம்பிள் டிப்ஸ்!!
கோடை வெயிலில் இருந்து உங்களது குழந்தைகளை பாதுகாக்க சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Summer Care Tips For Kids : கோடைகாலத்தில் குழந்தைகளை பாதுகாப்பது ரொம்பவே முக்கியம். குறிப்பாக தேர்வு முடிந்து வீட்டில் இருப்பதால் வெளியே சென்று விளையாட தான் விரும்புவார்கள். உணவு மற்றும் தூக்கத்தை கூட புறக்கணித்து விடுவார்கள். ஆனால் இந்த சீசனில் அலட்சியமாக இருந்தால் குழந்தைகளுக்கு நீரிழப்பு பிரச்சனை ஏற்படும். மேலும் இந்த பருவத்தில் குழந்தைகளை சரியாக கவனிக்காவிட்டால் சரும பிரச்சனை உள்ளிட்ட பல நோய்கள் வர வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இந்த கோடைகாலத்தில் உங்களது குழந்தைகளை ரொம்பவே கவனமாக கவனிக்க வேண்டும். குழந்தைகளின் உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது ரொம்பவே நல்லது.
மதியம் வெளியே அனுப்பாதீங்க!
கோடைகாலத்தில் குழந்தைகள் பெரும்பாலும் வீட்டிற்குள் இருப்பதற்கு பதிலாக வெளியே சென்று விளையாட வேண்டுமென்று தான் விரும்புவார்கள். ஆனால் குழந்தைகளை மதிய வேளையில் ஒருபோதும் வெளியே விட வேண்டாம் ஏனெனில் இந்த நேரத்தில் தான் வெயில் அதிகமாக இருக்கும். அதற்கு பதிலாக காலையிலும் மாலையிலும் வெளியே அனுமதிக்கலாம். ஏனெனில் இந்த நேரத்தில் வெயில் இருக்காது.
தண்ணீர் மற்றும் பழங்கள் கொடுங்கள்:
கோடையில் குழந்தைகளின் சருமம் வறட்சி, அரிப்பு, வீக்கம் போன்ற பல வகையான பிரச்சனைகளால் பாதிக்கப்படும். கூடவே நீரிழப்பு ஏற்படும். வயிற்று வலி, தலைவலி, குமட்டல், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை உள்ளிட்டவை உடலில் நீர்ச்சத்து குறைபாட்டிற்கான அறிகுறியாகும். எனவே இந்த பிரச்சனைகளை தவிர்க்க தினமும் குழந்தைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வைக்கவும். மேலும் காலை ஒரு கிளாஸ் தேங்காய் தண்ணீர் கண்டிப்பாக கொடுங்கள். ஏனெனில் இதில் பொட்டாசியம் உள்ளதால் இது சூரிய ஒளியில் இருந்து உங்களது குழந்தைகளை பாதுகாக்க உதவும். மண் பானை தண்ணீர் மற்றும் சப்ஜா தண்ணீர் குழந்தைகளுக்கு ரொம்பவே நல்லது. அதுபோல தர்பூசணி, வெள்ளரிக்காய், திராட்சை போன்ற பழங்களை கொடுக்கலாம் மற்றும் அவற்றில் ஜூஸ் போட்டும் கொடுங்கள்.
இதை கொடுக்காதே!
பொதுவாக கோடையில் சமைக்கும் உணவுகள் சீக்கிரமாகவே கெட்டுப் போய்விடும். இதன் காரணமாக பலர் பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவார்கள் ஆனால் ஃப்ரிட்ஜில் வைத்த உணவை குழந்தைகளுக்கு ஒருபோதும் கொடுக்கவே கூடாது. இதன் விளைவாக குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதுபோல குழந்தைகளுக்கு கோடை காலத்தில் ஜில்வாட்டரை கொடுக்க வேண்டாம்.
பருத்தி ஆடைகள்
கோடிகளில் சூடாக இருக்கும் போது குழந்தைகளுக்கு பருத்தி ஆடைகளை அணிவதுதான் நல்லது. ஏனெனில் இதுதான் மற்ற ஆடைகளை விட அதிகமாக வியர்வையை உறிஞ்சும். அதுபோல குழந்தைகளுக்கு வெளிர் நிற ஆடைகளை மட்டுமே அணியுங்கள்.
இதையும் படிங்க: Parenting Tips: பெண் குழந்தைகளை தைரியமாக வளர்க்க பெற்றோர் செய்யவேண்டியது என்ன?
கண்களில் கவனம்:
வெயில் காலத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும்போதெல்லாம் கூலிங் கிளாஸ் அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். ஏனெனில் கூலிங் கிளாஸ் சூரிய கதிர்கள் குழந்தைகளின் கண்ணில் படாமல் பாதுகாக்கும். மேலும் தொப்பி அணிவது நல்லது. தலையில் வெயில் பட்டால் தலைவலி, தலைசுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதுபோல வெளியில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் கண்டிப்பாக குளிர்ந்த நீரில் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: உங்க குழந்தை புத்திசாலியா? இந்த '5' விஷயம் வைச்சு கண்டுபிடிங்க!!
இந்த உணவுகளை கொடுக்காதீங்க!
கோடையில் குழந்தைகளுக்கு மசாலா, மிளகாய், இனிப்புகள் போன்ற உணவுகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உடல் சூட்டை அதிகமாக்கும். அதுபோல பீட்சா பர்கர் போன்ற குப்பை உணவுகளையும் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் இவை அனைத்தும் தாகத்தை அதிகரிக்க செய்யும் அதற்கு பதிலாக வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே கொடுங்கள்.
மோர் கொடுக்கலாம்!
ஒரு கப் மோரில் ஒரு ஸ்பூன் சீரகப்பொடி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு உப்பு கலந்து தினமும் மதிய உணவுக்குப் பிறகு குழந்தைகளுக்கு கொடுத்தால் நீரேற்றத்துடன் இருப்பார்கள் செரிமானமும் விரைவாகும். மோரில் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் பி12 உள்ளதால் இவை குமட்டல், தலைவலி போன்ற பிரச்சனைகளை நீக்கும்.