- Home
- Lifestyle
- Morning Study Benefits : மாணவர்களே! தேர்வில் முதலிடம் பிடிக்க எந்த நேரத்தில் படிக்கனும் தெரியுமா? கண்டிப்பா பலன் கிடைக்கும்
Morning Study Benefits : மாணவர்களே! தேர்வில் முதலிடம் பிடிக்க எந்த நேரத்தில் படிக்கனும் தெரியுமா? கண்டிப்பா பலன் கிடைக்கும்
மாணவர்களே.. அதிகாலையில் படித்தால் 6 நன்மைகள் கிடைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

Morning Study Benefits For Students
பொதுவாக படிக்கும் மாணவர்களுக்கு வரும் சந்தேகம் எதுவென்றால், எப்போது படித்தால் படித்தது நினைவில் நிற்கும் என்பது தான். இதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு முறையில் கருத்துக்களை தெரிவிப்பார்கள். அதாவது காலையில் படிப்பது, இரவு படிப்பது என்று சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அதிகாலையில் படித்தால் கீழே கொடுக்கப்பட்ட 6 நன்மைகள் கிடைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்பது குறித்து இப்போது இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
1. மன அமைதியாகும் :
அதிகாலையில் தான் மன அழுத்தம் இல்லாமல் மனம் அமைதியாக இருக்கும். எனவே இந்த சூழ்நிலையில் படித்தால் படிப்பில் முழு கவனம் செலுத்தி படிக்க முடியும். படிக்கும் பாடங்களை மிக எளிதாக உள்வாங்கிக் கொள்ளவும் முடியும்.
2. நீண்ட காலம் நினைவில் இருக்கும் :
அதிகாலையில் படித்தால் நினைவாற்றல் வலுப்படும் என்று சொல்லப்படுகிறது. எப்படியெனில், நான் தூங்கி எழும்போது மூளையானது புத்துணர்ச்சியுடன் இருக்கும். அந்த சூழ்நிலையில் படிக்கும் போது படித்தது நீண்ட காலம் நினைவில் அப்படியே இருக்கும்.
3. மன உறுதி தரும் :
இரவு தூக்கத்திற்கு பிறகு அதிகாலை எழுந்து படித்தால் கடினமான பாடங்களை கூட மிக எளிதில் புரிந்து கொள்ளும் அளவிற்கு மன உறுதி கிடைக்கும். ஆனால் நேரம் செல்ல செல்ல உடலில் இருக்கும் ஆற்றலானது கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். எனவே காலை ஆற்றில் உபயோகப்படுத்தி படியுங்கள். கண்டிப்பாக நல்ல பலனை பெறுவீர்கள்.
4. டிஜிட்டல் கவனச்சிதறல்கள் குறையும் :
காலையில் டிஜிட்டலால் ஏற்படும் கவனச்சிதறல்கள் மிக மிக குறைவாக இருக்கும். எனவே இந்த நேரத்தில் படிப்பது ரொம்பவே சிறந்தது.
5. ஒழுக்கம் :
அதிகாலையில் இருந்து படிப்பது ஒழுக்கத்தை கடைபிடிக்க முடியும். அதாவது தினமும் அதிகாலை எழுவதை பழக்கமாக வைத்துக் கொண்டால் உடல் எப்போதுமே ஆரோக்கியமாக இருக்கும்.
6. காலை சூரிய ஒளி :
காலை சூரிய ஒளியால் மனநிலை மற்றும் நினைவாற்றல் வலுப்படும். இது தவிர உடலில் வைட்டமின் டி சீராக கிடைக்கும். எனவே காலை சூரிய ஒளியில் படித்தால் நினைவாற்றல் திறன் அதிகரிக்கும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆகையால் படிக்கும் மாணவர்களே, மேலே குறிப்பிட்ட நன்மைகளை நீங்கள் பெற விரும்பினால் அதிகாலையில் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். சில நாட்களிலே உங்களுக்குள் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.