MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • கார்லிக் சிக்கன் ரைஸ்...ரெஸ்டாரன்ட் சுவையில் வீட்டிலேயே ஈஸியாக செய்வது எப்படி?

கார்லிக் சிக்கன் ரைஸ்...ரெஸ்டாரன்ட் சுவையில் வீட்டிலேயே ஈஸியாக செய்வது எப்படி?

உணவகங்களின் பிரத்யேக சுவையில் கார்லிக் சிக்கன் ரைஸ் வீடே மணக்க செய்ய சில எளிய சமையல் ரகசியங்கள் இதோ! இனி ஹோட்டல் செல்லாமல் குறைந்த செலவில் வீட்டிலேயே சுவையாகவும் சுலபமாகவும் செய்து குடும்பத்தினரை அசத்துங்கள்!

2 Min read
Author : Priya Velan
Published : Aug 25 2026, 08:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
கார்லிக் சிக்கன் ரைஸ் ரெசிபி :
Image Credit : Google

கார்லிக் சிக்கன் ரைஸ் ரெசிபி :

பூண்டின் நறுமணமும், மிருதுவான சிக்கனின் சுவையும் இணைந்த ‘கார்லிக் சிக்கன் ரைஸ்’ நாவிற்குச் சிறந்த விருந்தளிக்கும் ஒரு உணவாகும். உணவகங்களில் மட்டுமே சாத்தியம் என்று நினைக்கும் இந்த உணவை, எவ்வித செயற்கை சுவையூட்டிகளும் சேர்க்காமல் வீட்டிலேயே மிகக் குறைந்த நேரத்தில் சமைக்க முடியும். விடுமுறை நாட்களில் குடும்பத்தினரை அசத்தவும், வெளியில் சாப்பிட்டால் ஆரோக்கிய பிரச்சனைகள் வந்து விடுமோ என்ற பயமும் இல்லாமல், அதிக செலவும் செய்யாமல் வீட்டிலேயே திருப்தியாக சாப்பிட்டு மகிழலாம். ஓட்டலுக்கு சென்று சாப்பிட வேண்டும் என அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இதை ஒருமுறை செய்து கொடுங்கள். இனி அடிக்கடி வீட்டில் செய்ய சொல்லி கேட்பார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
தேவையான பொருட்கள்:
Image Credit : Google

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 2 கப்,

எலும்பில்லாத கோழி இறைச்சி (Boneless Chicken) - 250 கிராம்.

நறுமணப் பொருட்கள்:

பொடியாக நறுக்கிய பூண்டு - 3 டேபிள் ஸ்பூன்,

ஸ்ப்ரிங் ஆனியன் (வெங்காயத் தாள்) - 1/2 கப்.

தாளிக்க & சுவையூட்ட:

வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,

நல்லெண்ணெய் - 1 டேபிள்

ஸ்பூன், சோயா சாஸ் - 1 தேக்கரண்டி, க

றுப்பு மிளகுத்தூள் - 1.5 தேக்கரண்டி,

உப்பு - தேவைக்கேற்ப.

38
சாதம் தயாரித்தல்:
Image Credit : Google

சாதம் தயாரித்தல்:

பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, 90% பதத்திற்கு வேக வைத்து வடித்துக் கொள்ள வேண்டும். சாதம் முற்றிலும் ஆற வேண்டும்; சூடான சாதத்தைப் பயன்படுத்தினால் கிளறும் போது உடைந்துவிடும்.

48
இறைச்சியைப் பதப்படுத்துதல் (Marination):
Image Credit : Google

இறைச்சியைப் பதப்படுத்துதல் (Marination):

சிறிய துண்டுகளாக நறுக்கிய சிக்கனுடன் சிறிதளவு இஞ்சி-பூண்டு விழுது, அரை தேக்கரண்டி மிளகுத்தூள், ஒரு தேக்கரண்டி சோயா சாஸ் மற்றும் தேவையான உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். இது இறைச்சிக்கு நற்சுவையையும் மிருதுவான தன்மையையும் தரும்.

58
பூண்டு மற்றும் சிக்கன் வதக்கல்:
Image Credit : Google

பூண்டு மற்றும் சிக்கன் வதக்கல்:

வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் பொடியாக நறுக்கிய பூண்டைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். அதே எண்ணெயில் ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து மிதமான தீயில் 8-10 நிமிடங்கள் வேகவைத்து தனியாக எடுக்கவும்.

68
சாதத்துடன் ஒன்றிணைத்தல்:
Image Credit : Google

சாதத்துடன் ஒன்றிணைத்தல்:

அதே வாணலியில் மீதமுள்ள வெண்ணெயை உருக்கி, வடித்த ஆறவைத்த சாதத்தைச் சேர்க்க வேண்டும். அதனுடன் வேகவைத்த சிக்கன், பொன்னிறமாக வறுத்த பூண்டு, மிளகுத்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் சாதம் உடையாமல் மெதுவாகக் கிளற வேண்டும்.

78
ஃபைனல் டச்:
Image Credit : Google

ஃபைனல் டச்:

அனைத்துப் பொருட்களும் ஒன்றுடன் ஒன்று கலந்ததும், நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியன் தூவி அடுப்பை அணைத்தால் கமகமக்கும் நறுமணத்துடன் கூடிய கார்லிக் சிக்கன் ரைஸ் தயார்!

88
சுவையை இரட்டிப்பாக்க சில ரகசிய டிப்ஸ்:
Image Credit : Google

சுவையை இரட்டிப்பாக்க சில ரகசிய டிப்ஸ்:

பூண்டின் பதம்: பூண்டை வதக்கும் போது தீயைக் குறைவாக வைக்க வேண்டும். பூண்டு லேசாகக் கருகினாலும் சாதத்தின் சுவை முழுமையாகக் கசப்பாகிவிடும்.

உதிரியான சாதம்: சாதம் ஒன்றோடொன்று ஒட்டாமல் உதிரியாக வர, அரிசி வேகும் போதே சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கலாம்.

புகை வாசனை (Smoky Flavor): உணவக பாணி சுவை பெற, சமைத்து முடித்த பின் நடுவில் ஒரு சிறிய கிண்ணத்தில் சுட்ட கரியை வைத்து, அதன் மேல் சில துளிகள் நெய் ஊற்றி 2 நிமிடங்கள் மூடி வைக்கலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
உணவு
சமையலறை குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cow Ghee Benefits: பசு நெய் நல்லதா? எருமை நெய் நல்லதா? தினமும் சாப்பிடும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க!
Recommended image2
90s Kids vs 2K Kids : அன்றைய ஃபேஷன் vs இன்றைய டிரெண்டிங் ஆடைகள்! ஒரு சுவாரஸ்ய ஒப்பீடு!
Related Stories
Recommended image1
prawn sukka : இறால் சுக்கா இப்படி செய்து பாருங்க...இனி அடிக்கடி செய்வீங்க
Recommended image2
cucumber idli : சுவையான, சட்டெனச் செய்யக்கூடிய வெள்ளரிக்காய் இட்லி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved