MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Skipping Dinner: இரவு உணவு சாப்பிடாமல் தூங்குவது நல்லதா, கெட்டதா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி விபரம்!

Skipping Dinner: இரவு உணவு சாப்பிடாமல் தூங்குவது நல்லதா, கெட்டதா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி விபரம்!

Dinner: உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதால் நிறைய பேர் இரவு நேரத்தில் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் தூங்குகின்றனர். ஆனால், இப்படி செய்வது உண்மையிலேயே உடம்புக்கு நல்லதா? என்பதை பார்க்கலாம்.

1 Min read
Author : vinoth kumar
Published : Jun 09 2026, 10:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வெறும் வயிற்றில் தூங்குவது நல்லதா?
Image Credit : Getty

வெறும் வயிற்றில் தூங்குவது நல்லதா?

நம் அன்றாட வாழ்க்கையில், இரவு உணவு சாப்பிடும் நேரமும் அளவும் ரொம்ப முக்கியம். உடல் எடையைக் குறைக்கவோ அல்லது நேரம் இல்லை என்ற காரணத்திற்காக பலர் நைட் சாப்பிடாமல் தூங்கிவிடுகின்றனர். ஆனால், சுகாதார நிபுணர்கள் வெறும் வயிற்றில் தூங்குவது உடலையும் மனதையும் பாதிக்கும். அது எப்படி என்று இங்க பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
இரவு உணவைத் தவிர்ப்பது பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
Image Credit : Getty

இரவு உணவைத் தவிர்ப்பது பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

நிபுணர்கள் கூறுவது இரவு உணவை முழுவதுமா தவிர்த்துட்டு தூங்கினால் சிலருக்கு எடை குறையலாம். ஆனால், பலருக்கு இது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம். உடம்பு சக்திக்கு, சேமித்து வைத்த கொழுப்பைப் பயன்படுத்துவதால் எடை கொஞ்சம் குறைந்தாலும், நீண்ட காலத்தில் மெட்டபாலிசம் (metabolism) சமநிலையில் இல்லாமல் போகலாம்.

Related Articles

Related image1
Hair fall control: வெயிலால் முடி கொட்டுதா? இதோ 5 ஈஸி ஹேர் கேர் சீக்ரெட்ஸ்!
Related image2
shower before bed: நைட் தூங்குவதற்கு முன்பு குளித்தால் இவ்வளவு நடக்குமா?
36
சர்க்கரை நோயாளிகள் இரவு உணவைத் தவிர்ப்பது ஆபத்தானது
Image Credit : Getty

சர்க்கரை நோயாளிகள் இரவு உணவைத் தவிர்ப்பது ஆபத்தானது

இரவு நேரத்தில் வெறும் வயிற்றில் தூங்கினால், கேஸ்ட்ரிக், அசிடிட்டி அல்லது வயிறு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் அதிகமாகலாம். இதனால் காலையில் எழுந்ததும் அசௌகரியம், தலைவலி அல்லது சோர்வு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகள் இரவு உணவைத் தவிர்ப்பது ஆபத்தானது. ஏனென்றால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது.

46
வெறும் வயிற்றில் தூங்குவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
Image Credit : Getty

வெறும் வயிற்றில் தூங்குவதால் ஏற்படும் பக்க விளைவுகள்

சிலர் வெறும் வயிற்றில் தூங்கும்போது, பசியால் அவர்களுக்கு சரியாக தூக்கம் வராது. நடுராத்திரியில் முழிப்பு வருவது, அசௌகரியமாக உணர்வது போன்றவை சகஜம். சுகாதார நிபுணர்கள் கூறுவது, லைட்டான இரவு உணவு தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும்.

56
இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்
Image Credit : google

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்

ஆனால், எல்லா நேரத்திலும் வெறும் வயிற்றில் தூங்குவது கெட்டது என்று சொல்ல முடியாது. 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்' (Intermittent Fasting) முறையைப் பின்பற்றுபவர்கள், இரவு உணவைத் தவிர்த்து காலையில் சாப்பிடுவார்கள். இது எடை கட்டுப்பாட்டுக்கு உதவலாம். ஆனால், இது எல்லோருக்கும் ஒத்துவராது. தனிப்பட்ட உடல்நிலையைப் பார்த்துதான் இதைச் செய்ய வேண்டும்.

66
எளிதில் ஜீரணமாகும் உணவைச் சாப்பிடுவது பெஸ்ட்
Image Credit : google

எளிதில் ஜீரணமாகும் உணவைச் சாப்பிடுவது பெஸ்ட்

இரவு முழுவதும் வெறும் வயிற்றில் தூங்குவதை விட, சுலபமாக ஜீரணமாகும் உணவைச் சாப்பிடுவது நல்லது. சூப், பழங்கள், ஓட்ஸ் அல்லது லைட்டான சப்பாத்தி போன்ற உணவுகளைச் சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். ஜீரண மண்டலத்துக்கும் அதிக சுமை இருக்காது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆண்களுக்கான 5 ட்ரெண்டிங் வெள்ளி பிரேஸ்லெட் ஸ்டைலான டிசைன்கள்!
Recommended image2
பரிசளிக்க ஏற்ற 5 அழகான மற்றும் நவீன சிறிய வெள்ளி கம்மல் டிசைன்கள்
Recommended image3
shower before bed: நைட் தூங்குவதற்கு முன்பு குளித்தால் இவ்வளவு நடக்குமா?
Related Stories
Recommended image1
Hair fall control: வெயிலால் முடி கொட்டுதா? இதோ 5 ஈஸி ஹேர் கேர் சீக்ரெட்ஸ்!
Recommended image2
shower before bed: நைட் தூங்குவதற்கு முன்பு குளித்தால் இவ்வளவு நடக்குமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved