Kitchen Safety: கேஸ் ஸ்டவ் பக்கத்துல இந்த 6 பொருட்களை மட்டும் வெச்சுடாதீங்க!
சமையல் வேலை சுலபமா இருக்கணும்னு, தேவையான பொருட்களை எல்லாம் நாம கேஸ் ஸ்டவ் பக்கத்துலயே வெச்சுப்போம். ஆனா, அப்படி செய்றது ரொம்ப ஆபத்தானது. சில பொருட்களை கேஸ் ஸ்டவ் அருகே வைப்பது பாதுகாப்பற்றது.!
17

Image Credit : meta ai- प्रतीतात्मक
கேஸ் ஸ்டவ் அருகே வைப்பது பாதுகாப்பற்றது
சமையல் வேலையை ஈஸியாக்க, நாம பல பொருட்களை ஸ்டவ் பக்கத்துல வெச்சுக்கிறோம். ஆனா, எல்லா பொருட்களையும் அப்படி வைக்கிறது பாதுகாப்பானது இல்லை. இந்த லிஸ்ட்ல இருக்கிற பொருட்கள் உங்க ஸ்டவ் பக்கத்துல இருந்தா, உடனே எடுத்துடுங்க.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
27
Image Credit : Istock
சமையல் எண்ணெய்
சமையல் எண்ணெயை கேஸ் ஸ்டவ் பக்கத்துல வைக்கவே கூடாது. ஸ்டவ்வில் இருந்து வர்ற சூடு தொடர்ந்து எண்ணெய் மேல பட்டா, அது சீக்கிரமே கெட்டுப்போயிடும். இதனால எண்ணெய்யோட சுவையும், தரமும் பாதிக்கும்.
37
Image Credit : istockphoto
மசாலா பொருட்கள்
சமையலுக்குப் பயன்படுத்துற மசாலாப் பொருட்களை கேஸ் ஸ்டவ் பக்கத்துல வைக்காதீங்க. சூடு படும்போது, அதோட தன்மையும் சுவையும் மாறிடும். மசாலாப் பொருட்களை கிச்சன் ஷெல்ஃபில் வைக்கிறதுதான் நல்லது.
47
Image Credit : Socialmedia
டிஷ்யூ பேப்பர்
டிஷ்யூ பேப்பரை கேஸ் ஸ்டவ் பக்கத்துல வைக்கிறதை தவிர்த்திடுங்க. இது ரொம்ப சுலபமா தீப்பிடிக்க வாய்ப்பு இருக்கு. அதனால, இதை கேஸ் ஸ்டவ்வில் இருந்து தள்ளியே வைங்க.
57
Image Credit : Socialmedia
எலக்ட்ரிக் உபகரணங்கள்
கேஸ் ஸ்டவ்வில் இருந்து வர்ற அதிகப்படியான சூடு, மிக்ஸி, டோஸ்டர் போன்ற எலக்ட்ரிக் சாதனங்களை சீக்கிரமே ரிப்பேர் ஆக்கிடும். அதனால, இந்த மாதிரி பொருட்களை ஸ்டவ் பக்கத்துல வைக்கவே கூடாது.
67
Image Credit : istock
கெட்டுப்போகும் உணவுகள்
சீக்கிரமா கெட்டுப்போகக்கூடிய உணவுப் பொருட்களை கேஸ் ஸ்டவ் பக்கத்துல வைக்காதீங்க. காய்கறிகள், பழங்களை அதிக சூடோ, வெளிச்சமோ இல்லாத இடத்துல, சாதாரண அறை வெப்பநிலையில வைக்கலாம்.
77
Image Credit : Getty
கிளீனர்கள்
கிளீனர்களில் பலவிதமான ரசாயனங்கள் இருக்கு. இதனால, இதுவும் தீப்பிடிக்க வாய்ப்பு அதிகம். கேஸ் ஸ்டவ் பக்கத்துல கிளீனர்களை வைக்கிறதை கண்டிப்பா தவிர்த்திடுங்க.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.
Latest Videos

