MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வீட்டிலேயே தங்க நகைகளை சுத்தம் செய்யலாம் தெரியுமா? எப்படின்னு தெரிஞ்சுக்க இதை படிங்க..!!

வீட்டிலேயே தங்க நகைகளை சுத்தம் செய்யலாம் தெரியுமா? எப்படின்னு தெரிஞ்சுக்க இதை படிங்க..!!

சில எளிய வழிமுறைகள் மூலம் வீட்டில் இருந்தவாறே தங்க நகைகளை விரைவாக சுத்தம் செய்யலாம். இந்த குறிப்புகள் உங்கள் நகைகளை புதியதாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.  

2 Min read
Author : Kalai Selvi
Published : May 19 2023, 11:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நீங்கள் தங்க நகைகளுக்கு அடிமையானவராக இருந்தால், கடைசியாக எப்போது அந்த நகைப் பெட்டிகளைத் திறந்து உங்கள் நகைகளை சுத்தம் செய்தீர்கள்? நீங்கள் வழக்கமாக தங்க நகைகளை அணிந்தால், கடைசியாக எப்போது அதை கழற்றி விரைவாக சுத்தம் செய்தீர்கள்? தங்கம் காலப்போக்கில் அதன் பிரகாசத்தை இழக்கிறது. எனவே அதனை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

தங்க நகைகள் பொக்கிஷமாக பராமரிக்கப்பட வேண்டும். குறிப்பாக உங்கள் தங்க நகைகள் புதியதாக அழகாக இருக்க, அதை தொடர்ந்து சுத்தம் செய்வது அவசியம்.உங்கள் தங்க நகைகளை குளிர்ந்த, உலர்ந்த இடத்தில், நேரடி சூரிய ஒளி அல்லது வெப்பம் படாத இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக உங்கள் தங்க நகைகள் பல ஆண்டுகளாக பிரகாசமாக பிரகாசிக்கும், மேலும் தலைமுறைகளுக்கு அதன் அழகையும் மதிப்பையும் பாதுகாக்கும்.

36
வீட்டில் தங்க நகைகளை சுத்தம் செய்வது எப்படி?

வீட்டில் தங்க நகைகளை சுத்தம் செய்வது எப்படி?

வெதுவெதுப்பான நீர் மற்றும் பாத்திர சோப்பு:

தங்க நகைகளை சுத்தம் செய்ய வெதுவெதுப்பான நீர் மற்றும் பாத்திர சோப்பு கரைசலை பயன்படுத்தலாம். அழுக்குகளை அகற்ற மென்மையான முட்கள் கொண்ட தூரிகையைப் பயன்படுத்தவும். பின்னர் நகைகளை தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும்.
 

46

தங்க நகைகளை சுத்தம் செய்ய கொதிக்கும் நீர்:

உங்கள் தங்க நகைகளை சுத்தம் செய்வதற்கான மற்றொரு எளிய வழி இது. இருப்பினும், முத்துக்கள் மற்றும் மரகதம் போன்ற மென்மையான ரத்தினங்கள் கொண்ட துண்டுகளுக்கு இது வேலை செய்யாது. ஏனெனில் அவை கொதிக்கும் நீரில் விரிசல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தங்கத்தால் செய்யப்பட்ட நகைகள் உங்களிடம் இருந்தால், அவற்றை கொதிக்கும் நீரில் சுத்தம் செய்யலாம். உங்கள் நகைகளை ஒரு பாத்திரத்தில் வைக்கவும். தண்ணீரை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வந்து, நகைகளின் மீது தண்ணீரை ஊற்றவும். உங்கள் நகைகள் அனைத்தும் நீரில் மூழ்கியிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தண்ணீர் குளிரும் வரை காத்திருந்து, பின் நகைகளை வெளியே எடுத்து, மென்மையான துண்டை வைத்து துடைக்கவும். பின் இயற்கையாக உலர விடவும்.
 

56

பற்பசை முறையை முயற்சிக்கவும்:

உங்கள் நகைகளை ஆழமாக சுத்தம் செய்ய வேண்டும் என்றால், இந்த பற்பசை முறையை முயற்சிக்கவும். மென்மையான பிரஷில், சிறிது பற்பசையை தடவி, உங்கள் நகைகளில் உள்ள அழுக்குகளை மெதுவாக தேய்க்கவும். முடிந்ததும், மென்மையான துணியால் நகைகளைத் துடைக்கவும்.

இதையும் படிங்க: எஸ்பிஐ வங்கியின் நிகர லாபம் 83% அதிகரிப்பு.. முழு விவரம் உள்ளே

66

தங்க நகைகளை சுத்தமாக வைத்திருக்க டிப்ஸ்:

உங்கள் நகைகளை சுத்தமான பெட்டியில் சேமிக்கவும். உங்கள் நகைகளை மென்மையான, சுத்தமான துணியில் வைப்பது நல்லது. 

சோப்பு தேங்காமல் இருக்க குளிப்பதற்கு முன் தங்க நகைகளை அகற்றவும். 

நீச்சல் அல்லது உடற்பயிற்சிக்கு செல்லும் முன் தங்க நகைகளை கழற்றிவிடுங்கள். நீச்சல் குளத்தில் உள்ள கடுமையான இரசாயனங்கள் தங்கத்தை சேதப்படுத்தும் அல்லது நிறமாற்றம் செய்யலாம். 

பயணத்தின் போது, உங்கள் நகைகள் கீறல் படாமல் இருக்க, ஒரு பெட்டி அல்லது நகைப் பையில் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

தங்க நகைகளை அணிந்த பிறகு வாசனை திரவியங்கள் மற்றும் ஹேர்ஸ்ப்ரே போன்ற பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அவை நிறமாற்றத்திற்கு வழிவகுக்கும்

நீங்கள் வழக்கமாக தங்க நகைகளை அணிந்தால், வாரந்தோறும் அதை கழற்றி, மென்மையான துணியால் துடைக்கவும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vastu Tips: உங்கள் குழந்தை படிப்பில் கவனம் செலுத்தவில்லையா? இந்த பொருட்களை முதல்ல அப்புறப்படுத்துங்க
Recommended image2
பெண் குழந்தைகளுக்கான 6 அழகான கார்ட்டூன் தங்கப் பதக்க டிசைன்கள்!
Recommended image3
பெண்களுக்கான 10 ஸ்டைலிஷ் ஹேர் அக்சஸரீஸ்: உங்களை அழகாக்கும் டிசைன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved