உப்பு கறை படிந்த உங்கள் பாத்ரூமை கூட..வெறும் 10 நிமிடத்தில் சுத்தம் செய்து பளிச்சென்று மின்ன வைப்பது எப்படி?
Bathroom tiles cleaning: நீண்ட நாள் உப்பு கறை படிந்த பாத்ரூமை சுத்தம் செய்வதற்கு தேவையான பெஸ்ட் ஐடியா ஒன்றை தான் நாம் தெரிந்து வைத்து கொள்ள போகிறோம்.
நம்முடைய வீட்டில் எதை சுத்தமாக வைத்திருக்கிறோமோ இல்லையோ..? குளியலறை, கழிவறையை நிச்சயமாக சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், நீண்ட நாட்களாக சுத்தம் இல்லாமல் இருக்கும் பாத்ரூம் நமக்கு பல்வேறு நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும். சில சமையம், உடல் உபாதைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை கூட இருக்கும்.
பெரும்பாலும் இன்றைய வீடுகளில் உப்பு தண்ணீர் பயன்பாட்டில் இருப்பதால், ரொம்பவே ஈஸியாக பாத்ரூம் முழுவதும் வெள்ளை வெள்ளையாக திட்டுக்கள் படிந்து அந்த இடமே பார்ப்பதற்கு ரொம்பவும் அசுத்தமாக தெரியும். இது போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு பெஸ்ட் ஐடியா ஒன்றை தான் நாம் தெரிந்து வைத்து கொள்ள போகிறோம்.
குளியலறையை பொறுத்தவரை அன்றாடம் குப்பைகளை நீக்கிவிடுங்கள். குளியலறை நீர் போகும் சல்லடையில் தலைமுடி சென்று அடைத்துவிடும். இதனால் தண்ணீர் போகாது போகாமல் அடைத்து கொள்வதோடு கிருமிகள் தேங்கும் கூடாரமாகவும் ஆகிவிடும்.
முதலில் இதற்கு நீங்கள், ரெட் ஹார்பிக் வாங்கி கொள்ளுங்கள். இதனுடன் வினிகர் சேர்த்து நன்றாக கலந்து வைத்து கொள்ளுங்கள். பிறகு இந்த லிக்விடை எடுத்து, ஒரு காலியான ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளுங்கள்.
இதை உப்பு கரை இருக்கும் பாத்ரூம் முழுவதும் ஸ்பிரே செய்து விட்டு விடுங்கள். தரையில் அழுக்கு இருந்தால் கூட அந்த இடத்தில் இந்த ஸ்பிரேவை அடித்துக் கொள்ளலாம். பிறகு சாதாரணமாக சோப்பு நீர் விட்டு பிரஷ்ஷை கொண்டு தேய்த்தாலே டாய்லெட் பளிச்சிடும். மாதத்தில் ஒரு நாள் இந்த குறிப்பை பின்பற்றி வந்தாலே உங்களுடைய பாத்ரூம் எப்போதும் புதுசு போல பளிச்சென்று ஜொலித்துக் கொண்டே இருக்கும்.