- Home
- Lifestyle
- Tomatoes Side Effects : அடக்கடவுளே! தக்காளியை அதிகம் சாப்பிட்டா ஆபத்தா? இந்த '5' பிரச்சனைக்கு காரணமே தக்காளி தான்
Tomatoes Side Effects : அடக்கடவுளே! தக்காளியை அதிகம் சாப்பிட்டா ஆபத்தா? இந்த '5' பிரச்சனைக்கு காரணமே தக்காளி தான்
Tomatoes Side Effects : தக்காளியை அதிகமாக சாப்பிட்டால் வரும் 5 முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தக்காளி சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்றாகும். இது உணவின் சுவையை கூட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பலரும் தக்காளியை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
தக்காளியில் நன்மை செய்யும் பண்புகள் சில இருப்பதால் அவை இரத்தசோகை, ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது தவிர, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியாகவும் தக்காளி செயல்படும். தக்காளியில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவுக்கு தீமைகளும் இருக்கிறது தெரியுமா? ஆம், தக்காளியை அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு மோசமான தீங்கு விளைவிக்கும். இந்த பதிவில் தக்காளி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் 5 பிரச்சனைகள் குறித்து பார்க்கலாம்.
அசிடிட்டி - தக்காளியில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் அதை அதிகமாக சாப்பிட்டால் அசிடிட்டி பிரச்சனை ஏற்படுத்தும்.
வாயு தொல்லை - நீங்கள் ஏற்கனவே வாயு தொல்லையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், தக்காளியை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். குறைந்த அளவில் மட்டுமே சாப்பிடுங்கள். இல்லையெனில் பிரச்சனை மேலும் அதிகரிக்கும்.
சிறுநீரக கற்கள் - நீங்கள் சிறுநீரக கற்கள் பிரச்சினைகள் பாதிக்கப்பட்டிருந்தால் மறந்தும் கூட தக்காளியை சாப்பிட வேண்டாம். ஏனெனில் தக்காளியில் இருக்கும் விதைகள் பித்தப்பையில் கற்களை உண்டாக்கும். வேண்டுமானால் விதைகளை நீக்கிவிட்டு கூட சாப்பிடலாம்.
மூட்டு வலி - தக்காளியில் இருக்கும் சில பண்புகள் மூட்டு வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் தக்காளியை தவிர்ப்பது நல்லது.
நெஞ்செரிச்சல் - தக்காளியில் இருக்கும் வைட்டமின் சி வாயு பிரச்சனைகளை அதிகமாக்கி நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் அதை அதிகமாக சாப்பிட்டால் உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி விடும். இதனால் தொண்டை எரிச்சல், வாய் எரிச்சல், தலை சுற்றல் உள்ளிட்ட பிரச்சனைகள் வரும்.