தினமும் இளநீர் குடிக்கிறது ரொம்ப தப்பு.. நிபுணர்கள் ஏன் எச்சரிக்கிறார்கள்?
இளநீர் அருந்துவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் இருந்தாலும், தினமும் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லதல்ல என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மற்றபடி அவ்வப்போது இளநீர் அருந்துவதால் எந்த தீங்கும் ஏற்படாது.
இளநீர் எனும் இயற்கை பானத்தில் பல வகையான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இது நம் உடலில் எலக்ட்ரோலைட்டுகளை அதிகரிப்பதோடு, சருமம் பளபளப்பாக இருக்கவும் உதவுகிறது. உடல் வெப்பத்தினால் நீர்ச்சத்து குறையாமல் இருக்கவும் உதவுகிறது. இப்படி இதில் இருக்கும் பயன்களுக்காக பலர், தினமும் இளநீரை விரும்பி குடிக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது என்கின்றனர் நிபுணர்கள். அது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
இளநீரை தினமும் குடிப்பதால் உங்கள் உடலில் பொட்டாசியம் அளவு அதிகரிக்கிறது. இதனால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் தினமும் இளநீர் அருந்தினால், ரத்த அழுத்தம் வெகுவாக குறையும். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிக்கலான நிலைக்கு செல்லும். இளநீரில் காணப்படும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்கும். அதனால் இளநீரை அடிக்கடி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
தினமும் இளநீர் அருந்தினால் வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும். இதில் புளிக்கக்கூடிய ஒலிகோசாக்கரைடுகள், டிசாக்கரைடுகள், மோனோசாக்கரைடுகள், பாலியோல்கள் (FODMAP) ஆகியவை உள்ளன. இவை குறுகிய சங்கிலி அமைப்புடைய கார்போஹைட்ரேட்டுகள். இவை குடலில் இருந்து தண்ணீரை உறிஞ்சுகின்றன. இதனால் பலருக்கு வயிற்றுப்போக்கு மாதிரியான செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
இளநீரை சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இளநீரை குடிப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கும். சர்க்கரை நோய் இருந்தால் மருத்துவரிடம் கேட்ட பிறகே இளநீர் அருந்துவது நல்லது. அதுவும் கொஞ்சமாக..தான்.
இளநீரில் பொட்டாசியம், சோடியம், மாங்கனீஸ் ஆகிய எலக்ட்ரோலைட்டுகள் காணப்படுகின்றன. வெவ்வேறு அளவுகளில் காணப்படும் இளநீரை சந்தைகளில் வாங்கி அருந்துவதால் உடலில் எலக்ட்ரோலைட்டுகளுடைய சமநிலையின்மை ஏற்படுகிறது. இது உடலுக்கு நல்லதல்ல. நம் உடலில் பொட்டாசியம் அதிகமானால் பக்கவாதம் கூட ஏற்படலாம்.
இளநீரை குடிக்கவேக் கூடாது என சொல்லவில்லை. தினமும் எடுத்து கொள்ளாமல் இடைவெளிவிட்டு அருந்துங்கள். கூல்டிரிங்ஸ் போன்ற கார்போனேற்றம் செய்யப்பட்ட பானங்களை அருந்தாமல் தவிர்ப்பது முற்றிலும் நல்லது.
இதையும் படிங்க: தைப்பூசம் அன்று நேரில் காட்சி கொடுப்பாரா முருகன்? புராண வரலாறு சொல்லும் அற்புதங்கள் அறிவோம்!
இதையும் படிங்க: ஞாயிற்றுக்கிழமை இந்த திசையில் பயணம் செய்யக் கூடாது.. மீறி போனால் என்ன நடக்கும் தெரியுமா?