MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • உஷார்.! வெப்ப அலை எச்சரிக்கை.. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் இந்த விஷயங்கள் கவனிங்க

உஷார்.! வெப்ப அலை எச்சரிக்கை.. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் இந்த விஷயங்கள் கவனிங்க

இந்தியாவில் வெப்ப அலை தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் 'ஹீட் ஸ்ட்ரோக்' போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் அவர்களை பாதுகாக்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Apr 29 2026, 01:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வெப்ப அலை பாதுகாப்பு
Image Credit : Asianet News

வெப்ப அலை பாதுகாப்பு

இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கைகளின்படி, அடுத்த நாட்களிலும் வெப்பநிலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் பள்ளிகள் காட்டப்படுவதால், குழந்தைகள் வெயிலில் பள்ளி செல்வது பெற்றோருக்கு கூடுதல் கவலை அளிக்கிறது. குழந்தைகளின் உடல் எதிர்ப்பு குறைவாக இருப்பதால், வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் அவர்களை விரைவாக தாக்கும் அபாயம் உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஹீட் ஸ்ட்ரோக் குழந்தைகள்
Image Credit : Gemini AI

ஹீட் ஸ்ட்ரோக் குழந்தைகள்

வெப்ப அலை நேரங்களில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் வெப்பநிலை மற்றும் சூடான காற்று வீசும் பகுதிகளில் 'ஹீட் ஸ்ட்ரோக்' அபாயம் அதிகமாகும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதன் அறிகுறிகளாக வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, மயக்கம் போன்றவை காணப்படும். குறிப்பாக குழந்தைகள் அதிகமாக விளையாடும் போது வியர்வை அதிகரிப்பதால் உடலில் நீர் குறைவது வேகமாக நடக்கிறது. சரியான நீர்ச்சத்து பராமரிப்பு இல்லாவிட்டால், மருத்துவமனையில் அனுமதி பெறும் நிலையும் உருவாகலாம்.

35
பள்ளி மாணவர் பாதுகாப்பு
Image Credit : Asianet News

பள்ளி மாணவர் பாதுகாப்பு

இந்த சூழலில், குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் முன் பெற்றோர் சில முக்கிய முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். காலையிலேயே குழந்தைகள் வெறும் வயிற்றில் வெளியே செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடித்து செல்லவும், பள்ளிக்குச் செல்லும் போது தண்ணீர் பாட்டிலை அவசியம் எடுத்துச் செல்லவும் பழக்கப்படுத்தப்பட வேண்டும். தாகம் வந்த பிறகல்ல, இடையிடையே சிறு அளவில் தண்ணீர் குடிக்கச் சொல்வது மிகவும் அவசியம்.

45
குழந்தைகள் நீர்ச்சத்து
Image Credit : ANI

குழந்தைகள் நீர்ச்சத்து

வெப்பத்தைக் கட்டுப்படுத்த உடலுக்குத் தேவையான உப்புச் சத்து மற்றும் தாதுக்கள் ORS, எலுமிச்சை நீர், மோர் போன்ற பானங்களை தினசரி கொடுப்பது நல்லது. குழந்தைகளுக்கு இலகுவான, குளிர்ச்சி தரும் உணவுகள் வழங்கப்பட வேண்டும். வெள்ளரி, தர்பூசணி, தயிர், புதினா போன்ற உணவுகள் உடலை குளிர்விக்க உதவும். அதே நேரத்தில் ஜங்க் உணவுகள், எண்ணெய் அதிகமான பொரியல் வகைகள் போன்றவற்றை தவிர்ப்பது அவசியம்.

55
வெயில் கால டிப்ஸ்
Image Credit : ANI

வெயில் கால டிப்ஸ்

மேலும், குழந்தைகள் அணியும் உடை பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். இலகுவான, வெளிர் நிறமான பருத்தி உடைகள் வெப்பத்தை குறைக்க உதவும். நேரடி வெயிலில் செல்லும் போது குடை, தொப்பி அல்லது துணி கொண்டு தலை பாதுகாக்க வேண்டும். குறிப்பாக மதியம் 12 மணி முதல் 4 மணி வரை அதிக வெயிலில் வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துவது முக்கியம். சிறிய முன்னெச்சரிக்கைகள் கூட குழந்தைகளை வெப்ப அலை அபாயத்திலிருந்து பாதுகாக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குழந்தைகள்
கோடைக்காலம்
ஆரோக்கியம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Home Cleaning Tips: வீடு முழுக்க ஒட்டடை, தூசியா? ஈஸியாக சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ!
Recommended image2
SCIENCE: முதலில் வந்தது கோழிதான்.! கொக்கரக்கோ விடுகதைக்கு விடை கிடைச்சாச்சு.!
Recommended image3
புது டிரெஸ் துவைக்காம அப்படியே போடுறீங்களா? இந்த 5 ஆபத்துகளை தெரிஞ்சிக்கோங்க!
Related Stories
Recommended image1
Car AC: சுட்டெரிக்கும் வெயில்.! கோடையில் உங்க கார் ஏசி கூலிங் கம்மியா இருக்கா? இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.!
Recommended image2
கொளுத்தும் கோடை வெயில்! தமிழகம் முழுவதும் மீண்டும் இன்று முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved