MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Car AC: சுட்டெரிக்கும் வெயில்.! கோடையில் உங்க கார் ஏசி கூலிங் கம்மியா இருக்கா? இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.!

Car AC: சுட்டெரிக்கும் வெயில்.! கோடையில் உங்க கார் ஏசி கூலிங் கம்மியா இருக்கா? இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.!

Car AC Cooling Tips in Tamil : கோடை காலத்தில் கார் ஏசியின் செயல்திறனை அதிகரிக்க உதவும் 5 எளிய டிப்ஸ் இங்கே உள்ளன. இந்த அனல் பறக்கும் வெயிலில் பயணம் செய்பவர்கள் இந்த டிப்ஸை ஃபாலோ செய்தால், பயணத்தை ஜில்லாக மாற்றுவதோடு, எரிபொருளையும் சேமிக்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 28 2026, 07:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
உங்க காரை இன்னும் ஜில்லாக்கும் ஏசி டிப்ஸ்
Image Credit : Gemini AI

உங்க காரை இன்னும் ஜில்லாக்கும் ஏசி டிப்ஸ்

இந்தியாவில் வெயில் சுட்டெரிக்கிறது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் 45 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகிறது. இந்த மாதிரி நேரத்தில் பயணம் செய்வது பெரும் சிரமம். அதிலும் கார் ஏசி சரியாக வேலை செய்யவில்லை என்றால், பயணம் நரகமாகிவிடும். ஆனால், கார் பயணத்தின்போது பலர் சில எளிய விஷயங்களைக் கண்டுகொள்வதில்லை. இதனால் ஏசி கூலிங் குறைந்து, காரின் மீது கூடுதல் சுமை ஏற்படுகிறது. இந்த ஐந்து டிப்ஸை ஃபாலோ செய்தால், உங்கள் கார் ஏசியின் செயல்திறனை எளிதாக மேம்படுத்தலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
சூடான காற்றை வெளியே அனுப்புங்கள்
Image Credit : Gemini AI

சூடான காற்றை வெளியே அனுப்புங்கள்

காரை வெயிலில் பார்க் செய்யும்போது, உள்ளே சூடான காற்று நிரம்பிவிடும். இந்த மாதிரி நேரத்தில், காரை ஸ்டார்ட் செய்வதற்கு முன் ஒரு நிமிடம் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து வையுங்கள். இதனால் உள்ளே இருக்கும் சூடான காற்று வெளியேறிவிடும். பிறகு காரை ஸ்டார்ட் செய்து ஏசி போட்டால், கேபின் சீக்கிரமாக ஜில்லாகிவிடும்.
36
கார் ஸ்டார்ட் செய்தவுடன் ஏசி போடாதீர்கள்
Image Credit : Asianet News

கார் ஸ்டார்ட் செய்தவுடன் ஏசி போடாதீர்கள்

காரை ஸ்டார்ட் செய்தவுடனேயே ஏசியை ஆன் செய்து ஃபுல் கூலிங்கில் வைக்கக்கூடாது. முதலில் காரை சிறிது தூரம் ஓட்டுங்கள். கொஞ்ச தூரம் சென்ற பிறகு ஏசியை ஆன் செய்யுங்கள். ஏனென்றால், இன்ஜின் இயங்கும்போது ஏசி கம்ப்ரஸர் திறமையாக வேலை செய்து, கேபினை விரைவாக குளிர்விக்கும். சிஸ்டத்தில் ஓவர்லோட் ஆகாமல் இருக்க, மெதுவாக வெப்பநிலையைக் குறைத்து வாருங்கள்.
46
ரீசர்குலேஷன் மோடை சரியாகப் பயன்படுத்துங்கள்
Image Credit : Asianet News

ரீசர்குலேஷன் மோடை சரியாகப் பயன்படுத்துங்கள்

காரில் உள்ள ரீசர்குலேஷன் மோடை ஆன் செய்யுங்கள். இது வெளிப்பக்க சூடான காற்று உள்ளே வராமல், கேபினில் உள்ள காற்றையே மீண்டும் மீண்டும் குளிர்விக்கும். இதனால் கேபின் சீக்கிரமாக கூல் ஆகும். ஆனால், நீண்ட தூர பயணங்களில் இதைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் உள்ளே காற்றின் தரம் குறைய வாய்ப்புள்ளது. அவ்வப்போது வெளிக்காற்று உள்ளே வரும்படி ரீசர்குலேஷன் மோடை மாற்றி அமைக்க வேண்டும்.
56
உங்கள் ஏசியை ரெகுலராக சர்வீஸ் செய்யுங்கள்
Image Credit : Asianet News

உங்கள் ஏசியை ரெகுலராக சர்வீஸ் செய்யுங்கள்

இந்த கோடைக்காலத்தில் ஏசி சரியாக வேலை செய்வது ரொம்ப முக்கியம். இதற்காக, ஏர் ஃபில்டரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், கேஸ் அளவை சரிபார்க்க வேண்டும், மற்றும் லீக் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். ரெகுலர் சர்வீஸ் செய்தால் ஏசியின் செயல்திறன் சிறப்பாக இருக்கும்.
66
சரியான இடத்தில் பார்க் செய்யுங்கள்
Image Credit : Asianet News

சரியான இடத்தில் பார்க் செய்யுங்கள்

முடிந்தவரை உங்கள் காரை நிழலான இடத்தில் பார்க் செய்யுங்கள். இது காருக்குள் இருக்கும் வெப்பநிலையைக் குறைக்க உதவும். அப்போது ஏசியின் மீது அதிக சுமை ஏற்படாது, குறைந்த நேரத்திலேயே கார் ஜில்லாகிவிடும். சுட்டெரிக்கும் வெயிலிலும் ஜாலியாகப் பயணிக்கலாம். இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ செய்தால், கோடையில் உங்கள் கார் ஜில்லாக இருக்கும். மேலும், ஏசியை கவனமாகப் பயன்படுத்துவதால் எரிபொருள் மிச்சமாகும், பணமும் சேமிக்கப்படும், ஏசியின் ஆயுளும் அதிகரிக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
185
INDIND
(15.1 ov)94/1
IND need 49 runs in 107 balls
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
15 ஆண்டுகளாக மாறாத ஒரே காலை உணவு: கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையின் சிம்பிள் டயட் சீக்ரெட்!
Recommended image2
Hotel Style Channa Masala: ஹோட்டல் சுவையில் சன்னா மசாலா செய்ய இனி சிரமமே வேண்டாம்! இந்த டிப்ஸ் தெரிஞ்சா போதும்!
Recommended image3
America Lemon Price: அமெரிக்காவில் ஒரு எலுமிச்சை விலை இவ்வளவா? விலையைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க
Related Stories
Recommended image1
புது போன் வாங்கப்போறீங்களா? மே முதல் வாரத்தில் வெளியாகும் டாப் 6 ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ.!
Recommended image2
கச்சா எண்ணையில் இருந்து பெட்ரோல், டீசல், எரிவாயு எல்லாம் எப்படி எடுக்கப்படுகிறது? எத்தனை பொருட்கள் கிடைக்கும் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved