MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • veg biryani : வெஜ் பிரியாணி ஒருமுறை இப்படி செய்து சாப்பிடுங்க...நான்வெஜ்சுக்கு பை சொல்லிடுவீங்க

veg biryani : வெஜ் பிரியாணி ஒருமுறை இப்படி செய்து சாப்பிடுங்க...நான்வெஜ்சுக்கு பை சொல்லிடுவீங்க

அசைவ உணவிற்கு இணையான சுவை மற்றும் நறுமணத்துடன் காய்கறி பிரியாணி செய்ய முடியுமா? அரிசி பதம் மாறாமல், மசாலாக்கள் சரியான விகிதத்தில் கலந்து, ஒவ்வொரு வாயிலும் அசைவப் பிரியாணி திருப்தியைத் தரும் சில அரிய சமையல் ரகசியங்களை இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்!

2 Min read
Author : Priya Velan
Published : Aug 05 2026, 05:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி :
Image Credit : Getty

ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி :

பிரியாணி பிரியர்களுக்கு எப்போதுமே அசைவ பிரியாணி மீது தான் தனி ஈர்ப்பு இருக்கும். காய்கறிகளை வைத்து செய்யப்படும் காய்கறிப் பிரியாணியில் (Veg Biryani) அசைவப் பிரியாணியின் மணமும், அதே செறிந்த சுவையும் வரவில்லை என்பது பலரின் குறையாக இருக்கும். ஆனால், சரியான விகிதத்தில் மசாலாக்களைச் சேர்த்து, பாரம்பரிய முறைப்படி சில சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்து சமைத்தால், காய்கறிப் பிரியாணியும் அசைவ உணவை விட சுவையில் மிஞ்சும். நாவில் எச்சில் ஊறவைக்கும் வகையில், வீடு முழுவதும் மணம் கமழும் காய்கறிப் பிரியாணி செய்வதற்கான அரிய ரகசிய நுணுக்கங்கள் தெரிந்தாலே போதும். இந்த முறையில் ஒருமுறை வெஜ் பிரியாணி செய்து பாருங்க. அப்புறம் ரெஸ்டாரரென்டிற்கும், நான்வெஜ் பிரியாணிக்கும் "பை-பை" சொல்லிடுவீங்க.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
காய்கறிகளைத் தயிரில் ஊறவைத்தல் :
Image Credit : Getty

காய்கறிகளைத் தயிரில் ஊறவைத்தல் :

காய்கறிகளை நேரடியாக எண்ணெயில் வதக்காமல், நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காளான் மற்றும் பட்டாணியை கெட்டித் தயிர், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள், சிறிதளவு புதினா மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் மசாலாவின் சாறு காய்கறிகளின் உள்ளே இறங்கி, சாப்பிடும் போது காய்கறிகளின் சுவை சாதாரணமாக தெரியாமல் மிகுந்த சுவையுடன் இருக்கும்.

Related Articles

Related image1
biryani : ஆம்பூர் ஸ்டைல் பிரியாணி அதே சுவையில் செய்யும் ரகசிய டிப்ஸ் தெரியுமா?
Related image2
fish gravy : செட்டிநாடு ஃபிஷ் கிரேவி இப்படி செய்து பாருங்க: பல நாட்களுக்கு சுவை மறக்காது
36
தேங்காய்ப்பால் மற்றும் நெய் கலவை :
Image Credit : Getty

தேங்காய்ப்பால் மற்றும் நெய் கலவை :

அரிசியை வேகவைக்க வெறும் தண்ணீரை மட்டும் பயன்படுத்தாமல், ஒரு பங்கு தேங்காய்ப்பால் மற்றும் மூன்று பங்கு தண்ணீர் என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். தேங்காய்ப்பால் பிரியாணிக்கு ஒரு மென்மையான தன்மையையும், ராயல் ரிச் சுவையையும் தரும். அத்துடன் தாளிக்கும் போது பசு நெய்யுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்ப்பது மணத்தை கூட்டும்.

46
வறுத்த வெங்காயம் மற்றும் புதினா-கொத்தமல்லி விழுது :
Image Credit : Getty

வறுத்த வெங்காயம் மற்றும் புதினா-கொத்தமல்லி விழுது :

வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்து (Fried Onions/Barista) தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல புதினா மற்றும் கொத்தமல்லியை நறுக்கிப் போடுவதற்குப் பதிலாக, லேசாக அரைத்து விழுதாகச் சேர்க்க வேண்டும். இந்த பச்சை விழுது பிரியாணிக்கு இயற்கை நிறத்தையும், வறுத்த வெங்காயம் அசைவப் பிரியாணிக்கே உரித்தான ஆழமான சுவையையும் அளிக்கும்.

56
சீரகச் சம்பா அரிசி மற்றும் சுடச்சுட தம் முறை :
Image Credit : Getty

சீரகச் சம்பா அரிசி மற்றும் சுடச்சுட தம் முறை :

காய்கறிப் பிரியாணிக்கு பாஸ்மதி அரிசியை விடப் பாரம்பரியச் சீரகச் சம்பா அரிசியே மிகச் சிறந்த தேர்வாகும். அரிசியை முக்கால் பதம் வேகவைத்து, காய்கறி கலவையின் மேல் பரப்பி, வறுத்த வெங்காயம் மற்றும் குங்குமப்பூ பால் தெளிக்க வேண்டும். பாத்திரத்தை தோசைக் கல்லின் மேல் வைத்து, மிதமான தணலில் 15 நிமிடங்கள் 'தம்' (Dum) போட வேண்டும். இது அரிசி உடையாமல் உதிரி உதிரியாக வர உதவும்.

66
காய்கறிகளின் அளவு மற்றும் பூண்டு சேர்க்கை :
Image Credit : Getty

காய்கறிகளின் அளவு மற்றும் பூண்டு சேர்க்கை :

காய்கறிகளைச் சிறியதாக நறுக்காமல் சற்று பெரிய துண்டுகளாக நறுக்க வேண்டும். மேலும், இஞ்சி-பூண்டு விழுதை விடத் தட்டிப் போட்ட பூண்டுப் பற்கள் பிரியாணியின் மணத்தை தூக்கி நிறுத்தும். பெரிய துண்டுகளாக இருக்கும் போது 'தம்' போடும் போது காய்கறிகள் குழைந்து கூழ் ஆகாமல் தன் வடிவம் மாறாமல் இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
உணவு
சமையலறை குறிப்புகள்
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
paneer 65 : சுவையான மொறு மொறுப்பான பன்னீர் 65 இப்படி செய்தது உண்டா?
Recommended image2
Birds : கிளிகள் மனித குரலை எப்படி பேசுகின்றன? இதற்குப் பின்னால் என்ன ரகசியம்?
Recommended image3
Ginger Hack: இஞ்சியைத் துருவ கஷ்டமா இருக்கா? இந்த சிம்பிள் ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! பலருக்கும் தெரியாத சூப்பர் டிப்ஸ்.!
Related Stories
Recommended image1
biryani : ஆம்பூர் ஸ்டைல் பிரியாணி அதே சுவையில் செய்யும் ரகசிய டிப்ஸ் தெரியுமா?
Recommended image2
fish gravy : செட்டிநாடு ஃபிஷ் கிரேவி இப்படி செய்து பாருங்க: பல நாட்களுக்கு சுவை மறக்காது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved