- Home
- Lifestyle
- ஏசி, ஏர் கூலர் எதுவுமே வேணாம்.! பழைய காட்டன் புடவைகளை வைத்து வீட்டை குளுகுளுன்னு மாத்தலாம்.! இப்படி பண்ணா கோடையில் கரண்ட் பில்லே வராது.!
ஏசி, ஏர் கூலர் எதுவுமே வேணாம்.! பழைய காட்டன் புடவைகளை வைத்து வீட்டை குளுகுளுன்னு மாத்தலாம்.! இப்படி பண்ணா கோடையில் கரண்ட் பில்லே வராது.!
Cool Your Home Naturally Using Old Cotton Sarees : கடும் வெயிலால் ஏசி பில் எகிறிடுச்சா? கரண்ட் பில்லே இல்லாம, பழைய காட்டன் புடவைகளை வெச்சு உங்க வீட்டைக் குளுகுளுன்னு மாத்துறது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Cool Your Home Naturally Using Old Cotton Sarees
வெயில் காலம் வந்தாலே, சூட்டைத் தாங்க முடியாம ஏசி, ஏர் கூலர்னு ஓட ஆரம்பிச்சுடுவோம். ஆனா, நாள் முழுக்க இதையெல்லாம் யூஸ் பண்ணா கரண்ட் பில் எகிறிடும். ஒரு ரூபா செலவில்லாம, வீட்ல இருக்க பழைய புடவையை வெச்சே வீட்டைக் குளுகுளுன்னு மாத்தலாம்னா நம்புவீங்களா? ஆமா, அது சாத்தியம்தான்! இந்த பழைய டெக்னிக் பத்தி முழுசா தெரிஞ்சுக்கலாம் வாங்க.
வெயில் காலத்துக்கு உதவும் காட்டன் புடைவைகள்
இந்த டெக்னிக்குக்கு உங்களுக்கு முக்கியமா தேவைப்படுறது பழைய காட்டன் புடவைதான். காட்டன் புடவைங்க தண்ணியை நல்லா உறிஞ்சி, ஈரப்பதத்தை அதிக நேரம் தக்கவைக்கும். மத்த சிந்தெடிக் புடவைகளை விட, இந்த வேலைக்கு காட்டன் புடவைதான் ரொம்ப கரெக்ட். எனவே வீட்டுல இருக்குற காட்டன் புடவைகளை தூக்கி எறியாம, பத்திரமா சேமிச்சு வச்சுக்கோங்க. இது வெயில் காலத்துக்கு உங்களுக்கு ரொம்ப உதவிகரமாக இருக்கும்.
பழைய காட்டன் புடவையை வைத்து வீட்டை குளுகுளுவென மாற்றலாம்
முதல்ல, பழைய காட்டன் புடவையை எடுத்து நல்லா துவைச்சுக்கோங்க. அப்புறம், அந்தப் புடவையை குறைஞ்சது ஒரு மணி நேரமாவது தண்ணியில ஊற வைங்க. இதனால புடவையோட நூல் எல்லாம் நல்லா கூல் ஆகிடும். ஒரு மணி நேரம் கழிச்சு, புடவையை தண்ணியில இருந்து எடுத்து, லேசா பிழிஞ்சுக்கோங்க. புடவை காயக்கூடாது, ஈரமா இருந்தா போதும்.
கரண்ட் பில்லும் ஜீரோவுக்கு வந்துடும்
ஜன்னல், கதவை முழுசா மூடாதீங்க, புடவை வழியா காத்து உள்ளே வர இடம் விடுங்க. வெயில் காலத்துல புடவை சீக்கிரம் காய்ஞ்சிடும், அதனால ஒரு நாளைக்கு 4-5 தடவை தண்ணி தெளிச்சு ஈரமாக்குங்க. காத்து நல்லா வர்ற இடத்துல இந்த புடவையை போட்டா, வீடு முழுக்க சில்லுனு காத்து பரவும். இந்த சிம்பிள் ஐடியாவால, நீங்க ஃபேன், ஏசி இல்லாமலே வீட்ல இதமான குளிரை அனுபவிக்கலாம். பணமும் மிச்சமாகும், கரண்ட் பில்லும் ஜீரோவுக்கு வந்துடும்.
டேபிள் ஃபேனை வைத்து வீட்டை கூல் ஆக்கலாம்
அதே மாதிரி பெரிய சைஸ் முதல் சிறிய சைஸ் வரை வாளிகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த வாலிகளில் ஐஸ் கட்டிகள் மற்றும் நீரை நிரப்பி வச்சிடுங்க. வாளிகளுக்கு பின்னால் ஒரு அடி இடம் விட்டு, ஒரு டேபிள் ஃபேனை வைத்து ஆன் பண்ணி விடுங்க. டேபிள் பேனில் இருந்து வர காத்து அந்த வாளிகளில் உள்ள தண்ணியில பட்டு நாம் மேல் விழும் பொழுது சூடான காத்து கூட சில்லுனு மாறிடும். ஆனா இதை கையாளும் போது கவனமாக இருக்கணும். ஈரப்பதத்தோட ஃபேனை தொட்டு விடக்கூடாது. ஃபேன் தண்ணில படுற மாதிரி வைத்துவிடக்கூடாது. வாலிகளுக்கும் பேனுக்கும் நடுவுல குறைஞ்சது ஒன்னு முதல் 2 அடி இடைவெளி இருக்க மாதிரி பாத்துக்கோங்க.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

