MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பச்சை முட்டை குடித்தால் இந்த '1' விஷயம் நடக்குமா?

பச்சை முட்டை குடித்தால் இந்த '1' விஷயம் நடக்குமா?

Raw Egg Side Effects : பச்சை முட்டையை ஏன் குடிக்க கூடாது என்பதற்கான காரணங்கள் பற்றி எங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Jan 25 2025, 03:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Raw Egg Side Effects In Tamil

Raw Egg Side Effects In Tamil

நம் ஆரோக்கியமாக இருக்க தினமும் ஊட்டச்சத்துக் கொண்டிருந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அவற்றில் ஒன்றுதான் முட்டை.  முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதாவது புரதம், கால்சியம் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை அனைத்தும் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. அதனால் தான் பலர் தினமும் முட்டை சாப்பிடுகிறார்கள். மேலும் இதை இலகுவாக பெற்றுக் கொள்ளலாம். முட்டையை அவிழ்த்து, பொறித்து, வறுத்து, ஆம்லெட் என பலரும் பல விதங்களில் . சாப்பிடுபவர்கள். ஆனால் சிலரோ பச்சை முட்டையை அப்படியே குடிப்பார்கள். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Raw Egg Side Effects In Tamil

Raw Egg Side Effects In Tamil

பொதுவாக பூப்படைந்த பெண்களுக்கு பச்சை முட்டை குடிக்க கொடுப்பார்கள். இது காலம் காலமாகவே நடைமுறையில் உள்ளது. பருவமடைந்த பெண்களுக்கு பச்சை முட்டையை 16 நாட்கள் கண்டிப்பாக குடிக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லுவார்கள். அதுபோலவே உடற்பயிற்சி செய்பவர்களும் பச்சை முட்டையை குடிப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் பச்சை முட்டையை குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சொல்லப்படுகிறது மேலும் அப்படி குடிப்பதால் உடலில் சில பிரச்சனைகள் ஏற்படும் என்றும் சொல்லுகின்றனர்.

இதையும் படிங்க:  முட்டை சாப்பிடுவதால் உடலில் அதிக கொழுப்பு சேருமா? உண்மை என்ன?

35
Raw Egg Side Effects In Tamil

Raw Egg Side Effects In Tamil

பச்சை முட்டையை ஏன் குடிக்க கூடாது?

பச்சை முட்டைகளில் சால்மொனெல்லா என்னும் பாக்டீரியா இருக்கலாம். இது உணவில் பரவும் நோய்களுக்கு பொதுவான காரணமாகும். இந்த பாக்டீரியா காரணமாக வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் பிடிப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். ஒருவேளை இந்த பாக்டீரியா ரத்தத்தில் கலந்தால் அவை வாழ்நாள் முழுவதும் தொற்று நோயை ஏற்படுத்தும். ஆனால் இது அரிதானது. சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் பச்சை முட்டை குடித்தால் அதிலிருக்கும் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு தீவிரமாக நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. 

இதையும் படிங்க: பாலுடன் முட்டையா? நன்மைகளுடன் வரும் ஆபத்து!

45
Raw Egg Side Effects In Tamil

Raw Egg Side Effects In Tamil

பச்சை மூட்டை குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்:

- பச்சை முட்டையில் இருக்கும் வெள்ளை கருவில் இருக்கும் புரதம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதாவது படை நோய், வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை இதில் அடங்கும்.

- இது தவிர வெள்ளை கருவில் இருக்கும் புரதம் பயோடின் உடன் பிணைக்கப்பட்டு உடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. இதனால் பயோடின் குறைபாடு, சரும வெடிப்பு, முடி உதிர்தல் மற்றும் நரம்பியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

- பச்சை முட்டையை குடிப்பதால் வயிற்று உப்புசம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போட்டு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

- முட்டையை சமைத்து சாப்பிட்டால் அதில் இருக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்களின் தன்மை அதிகரிக்கும். ஆனால் பச்சையாக குடித்தால் இந்த முக்கியமான ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டை ஏற்படுத்தும்.

55
Raw Egg Side Effects In Tamil

Raw Egg Side Effects In Tamil

முக்கிய குறிப்பு: 

ஒருவேளை நீங்கள் பச்சை முட்டை குடிக்க விரும்பினால் நன்கு கழுவ வேண்டும். முக்கியமாக புதிய முட்டைகளை மட்டுமே குடிக்க வேண்டும். முட்டையின் ஓட்டில் விரிசல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முட்டையை முழுவதுமாக அப்படியே விழுங்காமல் நன்கு மென்று சாப்பிடுங்கள்.

* பச்சை முட்டையை குடிப்பதை விட வேகவைத்த முட்டை சாப்பிட்டால் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெற முடியும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கிய குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Taps: துருப்பிடித்த தண்ணி குழாய்கள் புதுசு போல ஜொலிக்கணுமா? 'இந்த' 2 சமையலறை பொருட்கள் போதும்!
Recommended image2
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Recommended image3
Cow Ghee Benefits: பசு நெய் நல்லதா? எருமை நெய் நல்லதா? தினமும் சாப்பிடும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved