- Home
- Lifestyle
- குக்கரில் தண்ணீர் வெளியே கசியுதா? இந்த 3 தவறுகளை சரி செய்தால்... 1 துளி தண்ணீர் கூட வெளியேறாது! சூப்பர் டிப்ஸ்
குக்கரில் தண்ணீர் வெளியே கசியுதா? இந்த 3 தவறுகளை சரி செய்தால்... 1 துளி தண்ணீர் கூட வெளியேறாது! சூப்பர் டிப்ஸ்
Pressure Cooker Water Leakage: சிலருடைய வீட்டில் குக்கரில் சமைக்கும்போது சில நிமிடங்களில் தண்ணீர் வெளியே கசியும். அப்படி கசிவதால் கேஸ் அடுப்பின் பர்னரில் தீ சரியாக எரியாமல் பிரச்சனை செய்ய தொடங்கும். அதை எப்படி சரி செய்வது என்ற குறிப்புகளை இங்கு காணலாம்.

அவசரமாக சமைக்கும் போது குக்கர் தான் நமக்கு கை கொடுக்கும். சில நிமிடங்களில் சோறு சமைத்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க கிளம்பிவிடலாம். வேலைக்கு செல்வோருக்கு குக்கர் ரொம்ப உதவியாக இருக்கும். ஆனால் நாளடைவில் குக்கர் தொந்தரவு தர ஆரம்பிக்கும். குக்கர் மக்கர் செய்ய அதன் பராமரிப்பும் முக்கிய காரணம். நாம் சில தவறுகளை செய்யும்போது தான் அது பிரச்சினைகளை செய்கிறது. அதில் ஒரு பிரச்சனைதான் தண்ணீர் கசிவது. அதனை எப்படி சரி செய்யலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
குக்கரை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் தண்ணீர் கசிவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மத்த பாத்திரங்களைப் போல குக்கரை தேய்த்து கழுவக் கூடாது. குக்கரை சுத்தம் செய்வதற்கான சில யுத்திகள் உள்ளன. அதை பின்பற்றி சுத்தம் செய்தால் தான் எந்த தொந்தரவும் இருக்காது.
குக்கரில் தேவைக்கு அதிகமாக தண்ணீர் ஊற்றுவதினால் அல்லது குக்கரை மிகுந்த தீயில் (Full flame) வைக்கும்போது தண்ணீர் கசிவு வர வாய்ப்புள்ளது. குக்கரில் எந்த பொருளை சமைத்தாலும் தண்ணீரின் அளவு சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மிதமான தீயில் சமைக்கும்போது குக்கரில் இருக்கும் நீர் துளிகூட வெளியே எட்டி பார்க்காது.
சில துளி எண்ணெய்!!
எந்த உணவை குக்கரில் சமைத்தாலும் அதிலிருந்து தண்ணீர் வெளியே வராமல் இருக்க ஒரு துளி என்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். உங்களுடைய மூடியை சுற்றிலும் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். இதனால் தண்ணீர் வெளியேறாது.
இதையும் படிங்க: இரவில் நகம் வெட்டக்கூடாது! மாதவிடாய் வந்தால் பெண்கள் சமையலறைக்கு போக கூடாது, இந்து நம்பிக்கைகளின் பின்னணி!
ரப்பர்!!
நாம் பயன்படுத்தும் குக்கர் மூடிகளில் உள்ள ரப்பர், சில மாதங்களில் தளர்வாகிவிடும். இதனால் குக்கரில் இருந்து தண்ணீர் வெளியேற வாய்ப்புள்ளது. உங்கள் வீட்டு குக்கரில் ரப்பர் தளராமல் இறுக்கமாக இருந்தால் தண்ணீர் கசியாது. தளர்வான ரப்பரை விரைவில் மாற்றிக் கொள்ளுங்கள். ரப்பர் விரைவில் தளர்வாவதை தடுக்க சமைத்த உடனே குளிர்ந்த நீரில் அதை போடுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இப்படி செய்வதால் நீண்ட காலம் உழைக்கும். சில குக்கர் ரப்பரை பிரிட்ஜ் ஃப்ரீசரில் வைத்து பராமரிப்பார்கள். இதுவும் தண்ணீர் கசியாமல் இருக்க உதவும் முறைதான்.
விசில் சுத்தம்!!
சில நேரங்களில் சமைக்கும்போது குக்கரில் உணவுப் பொருள் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. விசில் அழுக்காக இருக்கும் போது நீராவி வெளியேற வழி இருக்காது. குக்கரை சுத்தம் செய்யும்போது விசிலையும் முழுவதும் திறந்து அதனுடைய அடைப்புகளை சுத்தம் செய்ய வேண்டும். குக்கர் விசில் சுத்தமாக இருந்தால் தண்ணீர் கசியும் பிரச்சனை இருக்காது.
இதையும் படிங்க: பிரெட் சாப்பிடுறவங்களா நீங்க! வாங்கும் முன் இந்த 1 விஷயத்தை பாக்கெட் மேல தவறாமல் பாருங்க! உங்க நல்லதுக்குதான்!