- Home
- Lifestyle
- பிரதமர் மோடி விரும்பி சாப்பிடும் குச்சி காளான்! 100 கிராம் இத்தனை ஆயிரமா? என்ன ஸ்பெஷல்?
பிரதமர் மோடி விரும்பி சாப்பிடும் குச்சி காளான்! 100 கிராம் இத்தனை ஆயிரமா? என்ன ஸ்பெஷல்?
பிரதமர் மோடி குச்சி காளான் எனப்படும் காளானை விரும்பி சாப்பிடுகிறார். மிகவும் விலை உயர்ந்த இந்த காளானில் என்னென்ன சத்துகள் உள்ளன? விலை என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

PM Modi's favourite Gucchi Mushroom: பிரதமர் நரேந்திர மோடி சைவ உணவுப் பிரியர். அதிலும் காளான்கள் பிரதமர் மோடிக்கு மிகவும் விருப்பமான உணவாகும். பல்வேறு வகையான காளான்களை ருசி பார்ப்பதை பிரதமர் மோடி வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் பிரதமர் மோடியின் விருப்ப பட்டியலில் இருக்கும் ஒரு காளான் மோரல் (Morel) என்று அழைக்கப்படும் குச்சி காளான்.
PM Modi's favourite Gucchi Mushroom
பிரதமரின் பேவரிட் குச்சி காளான்
மிட்ச்செலின் போன்ற உயர்தர உணவகங்களில் பரிமாறப்படும் குச்சி காளான் பிரதமர் மோடியின் பேவரிட் லிஸ்ட்டில் உள்ளது. இந்த குச்சி காளானின் விலையை கேட்டால் நீங்கள் மயக்கம் போட்டு விழுந்து விடுவீர்கள். இந்த காளான் ஒரு கிலோ ரூ.30,000 ஆகும். 100 கிராம் மட்டும் ரூ.3,000. அப்படி இந்த குச்சி காளானில் என்ன ஸ்பெஷல்? என்று நீங்கள் கேட்கலாம்.
குச்சி காளான் எங்கு வளரும்?
குச்சி காளான்கள் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் உள்ள இமயமலை அடிவாரப் பகுதிகளிலும் , இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராஞ்சலில் உள்ள மலைகளின் அடிவாரப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.இவை காடுகளில் கடின மரங்கள் மற்றும் ஊசியிலை மரங்களின் கீழ் வளர்க்கப்படுகின்றன . வசந்த காலத்தில் மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே காடுகளில் வளரும். இவற்றை மற்ற இடங்களில் வணிகரீதியாக பயிரிட முடியாது. இந்த காளான்கள் காடுகளில் மட்டுமே வளரும்.
Benefits of Gucchi mushrooms
சமவெளிகளில் பயிரிட முடியாதா?
குச்சி காளான்களின் அதிக தேவை மற்றும் அதிக விலை காரணமாக, பல்வேறு மக்களும் அமைப்புகளும் குச்சி காளான்களை வளர்க்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. சிலர் வீட்டு நிலைமைகளில் குச்சி காளான்களை வளர்ப்பதில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் பெரும்பாலோர் இவற்றை வளர்ப்பதில் தோல்வியை சந்தித்துள்ளனர்.
என்னென்ன சத்துகள்?
குச்சி காளான்களில் சத்துகள் மிக அதிகம் இருப்பதால் விலையும் மிக அதிகமாக உள்ளது. இந்த காளானில் ஆக்ஸிஜனேற்றிகள், புரதம், நார்ச்சத்து, வைட்டமின் டி மற்றும் பி வைட்டமின்கள் சத்துகள் நிறைந்துள்ளன. இத்தகைய விலைமதிப்பற்ற ஊட்டச்சத்துக்கள் புற்றுநோய் எதிர்ப்பு, எலும்பு வலுப்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றன.
Gucchi Mushrooms Price
ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக்கனி
குச்சி காளான்களை உட்கொள்வது நல்ல கொழுப்பான HDL கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது மற்றும் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பான LDL கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இதய நோயை தடுக்கிறது. மேலும் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் உதவுகிறது. முடி உதிர்தலை சரி செய்கிறது. ஆனால் இத்தகைய சத்துகள் நிறைந்த குச்சி காளான்கள் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.