MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன்பு ஒருபோதும் செய்யவே கூடாத 5 விஷயங்கள்!

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன்பு ஒருபோதும் செய்யவே கூடாத 5 விஷயங்கள்!

குழந்தை நல்ல மனிதராக வளர பெற்றோர் செய்யும் சில தவறுகளைத் தவிர்க்க வேண்டும். ஒருபோதும் தங்கள் குழந்தைகள் முன்பு பெற்றோர் செய்யவே கூடாத சில தவறுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramya s
Published : Oct 14 2024, 03:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Parenting Tips Tamil

Parenting Tips Tamil

பெற்றோராக, உங்கள் குழந்தை நல்ல மனிதராக மாற, குழந்தையின் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆனால் சில பெற்றோர் தங்களுக்கு தெரியாமல் சில தவறுகளை செய்கின்றனர். பெற்றோர் செய்யும் இந்த தவறுகள் குழந்தையின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தையின் முன்பு செய்ய வேண்டிய விஷயங்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் மற்றும் நடத்தைகள் என்ன என்பதை பலரும் புறக்கணிக்கிறார்கள். எனவே, நீங்கள் உங்கள் குழந்தைக்கு சிறந்த எதிர்காலத்தை கொடுக்க விரும்பினால், அவர்கள் முன் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Parenting Tips Tamil

Parenting Tips Tamil

பெரியவர்களை அவமரியாதை செய்யக்கூடாது

உங்கள் பிள்ளை பெரியவர்களை மதிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்களும் குழந்தைகளுக்கு முன்னால் பெரியவர்களை மதிக்க வேண்டும். நீங்கள் பணிவாகப் பேச வேண்டும், இளையவர்களிடம் சமமான அன்புடனும் பாசத்துடனும் பழக வேண்டும். அப்போதுதான் உறவுகளும் உணர்ச்சிகளும் எவ்வளவு முக்கியம் என்பதை உங்கள் குழந்தை புரிந்து கொள்ளும்.

கவனமாகக் கேளுங்கள்

உங்கள் பிள்ளைகள் உங்களுடன் பேச முயற்சிக்கும்போது, அவர்கள் சொல்வதை கவனமாக கேளுங்கள். அவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுங்கள். அவர்கள் பேசி முடித்த பிறகு, நீங்கள் எதை விளக்க விரும்புகிறீர்களோ அதை விளக்குங்கள். குழந்தையைக் குழந்தையாகக் கருதி குழந்தையின் வார்த்தைகளைப் புறக்கணிக்காதீர்கள்.

35
Parenting Tips Tamil

Parenting Tips Tamil

எதிர்மறை வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்

பல நேரங்களில் பெற்றோர்கள் குழந்தை தவறு செய்யும் போது முட்டாள், பைத்தியம் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள், இது அவர்களின் மன ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது. இதைத் திரும்பத் திரும்பச் சொன்னால், குழந்தை அதைச் சரியாகக் கருதத் தொடங்கும். அவர் தன்னைத் தாழ்வு மனப்பான்மையுடன் பார்க்கத் தொடங்குவார். எனவே, உங்கள் குழந்தையிடம் இவற்றைக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும்.

அதிகப்படியான கட்டுப்பாடு

உங்கள் குழந்தைக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கினால், அவர்களுக்கு சுய சந்தேகம் வரத் தொடங்கும். அவர்களுடையை முடிவெடுக்கும் திறன் பலவீனமடையும். எனவே, பெற்றோர்களாக, குழந்தை புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று பேசும்போது, ​​​​அதைச் செய்யட்டும். அவர் சொல்வது சரியல்ல என்று நீங்கள் உணர்ந்தால், தவறு நடக்கும் முன் அவரைத் தடுக்க நீங்கள் அவரைக் கண்காணிக்க வேண்டும். இதற்குப் பிறகு, அவருடைய இந்த புதிய விஷயம் சரியல்ல என்பதை நீங்கள் அவருக்கு விளக்க வேண்டும்.

45
Parenting Tips Tamil

Parenting Tips Tamil

முதலில் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்

பெரும்பாலும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செல்போன் பார்க்க வேண்டாம். மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேச வேண்டாம், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். ஆனால் உங்கள் பிள்ளையை போன் பார்க்க வேண்டாம் என்று கூறினால் முதலில் நீங்கள் போன் பார்க்க கூடாது, அதே போல் உங்கள் பிள்ளைகள் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் முதலில் அதை செய்ய வேண்டும்.

 

55
Parenting Tips Tamil

Parenting Tips Tamil

எனவே, உங்கள் குழந்தையிடம் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்களோ, அதை முதலில் நீங்களே செய்யுங்கள். ஏனென்றால் பெற்றோர் தான் குழந்தைக்கு முன்மாதிரி. குழந்தைகள் நல்ல மற்றும் கெட்ட பழக்கங்களை பெற்றோர்களிடம் இருந்து  மட்டுமே கற்றுக்கொள்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
-
INDIND
(3.5 ov)21/2
NZ chose to bowl.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rat Control Tips: இதை செஞ்சி பாருங்க.. எலிகள் இனி உங்க வீட்டு பக்கமே வராது.. சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
தீபாவளிக்கு மனைவிக்கும், அம்மாவுக்கும் என்ன வாங்கலாம்? டாப் 6 அசத்தல் கிப்ட் ஐடியாக்கள் இதோ!
Recommended image3
Travel : வெறும் ரூ.2,000 செலவில் 6 மாநிலங்கள்! எப்படி டிராவல் செய்கிறார் இந்தப் பெண்? ரகசியம் இதுதான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved