Parenting Tips : குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதை நிறுத்த சரியான வயது என்ன தெரியுமா?
பெற்றோர்களே உங்கள் குழந்தைக்கு டயப்பர் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கான சரியான வயது எது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்துவது அம்மாக்களின் வேலையை எளிதாக்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஏனெனில் குழந்தைகள் அடிக்கடி மலம் மற்றும் சிறுநீர் கழிப்பார்கள். அதனால்தான், ஆறு மாதங்கள் வரையும் பல அம்மாக்களும் தங்களது குழந்தைக்கு டயப்பர் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சில அம்மாக்களோ தங்களது குழந்தைகளுக்கு 3-4 வயது ஆகியும் கூட டயப்பர் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இப்படி செய்வது உண்மையில் சரியல்ல.
ஏனெனில் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கழிவறையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பது பெற்றோரின் கடமை. அதுமட்டுமில்லாமல் டயப்பருக்கு செலவிடப்படும் பணமும் மிச்சமாகிறது.
குழந்தைகள் கழிப்பறை பயன்படுத்த சரியான வயது என்ன?
கழிப்பறை பயிற்சியானது 18 முதல் 24 மாதங்களான குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க ஏற்ற காலமாகும். காரணம், இந்த வயதில் தான் குழந்தைகளுக்கு எந்தவொரு விஷயத்தையும் நன்றாக புரிந்து கொள்ளும் திறன் இருக்கும். அதைப் போல காலை எழுந்தவுடன் மற்றும் இரவில் தூங்கும் கண்டிப்பாக கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு 3 முதல் 4 வயது வரை ஆகியும் டயப்பர் போடும் பெற்றோர்கள் உடனே அதை நிறுத்தி விடுங்கள். இல்லையெனில் அவர்கள் கழிவறை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் இருப்பார்கள். மேலும் அதை பழகவே ரொம்பவே சிரமப்படுவார்கள்.
குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்துவது பெற்றோர்கள் வசதியாக உணரலாம். ஆனால் அது அவர்களுக்கு சருமத்தில் பிரச்சனை, தொற்றுகள் ஏற்படுத்தும். எனவே தேவைப்படும் போது மட்டுமே பயன்படுத்துங்கள்.
குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதை எப்போது நிறுத்த வேண்டும்?
நிபுணர்களின் கூற்றுப்படி, ஒன்றரை முதல் 2 வயது வரும்போதே குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதை நிறுத்துவது நல்லது. ஒருவேளை 2 வயதில் அவர்கள் இன்னும் பக்குவமாக வளரவில்லை என்று நீங்கள் நினைத்தால் 3 வயதில் கண்டிப்பாக கழிப்பறையை பயிற்சி சொல்லி கொடுங்கள். ஏனென்றால் அந்த வயதில் இயற்கை உபாதைகள் வரும் உணர்வு அவர்களுக்குள் வளரும் என்கின்றனர் நிபுணர்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள படி பெற்றோர்கள், தங்களது குழந்தைகளுக்கு சரியான வயதில் கழிப்பறை பயிற்சி அளிப்பதை பின்பற்ற வேண்டும். அதுவே சாலச்சிறந்த நடவடிக்கையாகும்.