குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்கு பெற்றோர் கட்டாயம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்
குழந்தைகள் மன உறுதியை மேம்படுத்த எதிர்காலத்திற்கு தேவையான விஷயங்களை குறித்து இங்கு காணலாம்.

Parenting Tips
பெற்றோர் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அதிகம் கவலைப்படுவார்கள். தன்னுடைய குழந்தை அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரின் விருப்பமாக இருக்கும். ஆனால் குழந்தைகள் சிந்தனையில் மட்டுமின்றி ஆளுமையிலும் சிறந்து வளர 5 விஷயங்கள் அவசியமானது. இந்தப் பதிவில் அதை காணலாம்.
மன உறுதி:
பெற்றோரின் மனம் திறந்த உரையாடல்கள் குழந்தைகளுக்கு மிகவும் தேவையான ஒன்று. அவர்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஊக்குவிக்க வேண்டும். மனம் திறந்த உரையாடல் குழந்தைகளிடம் நம்பிக்கையை வளர்க்கிறது. இதனால் குழந்தைகள் உங்களிடம் அவர்களின் உணர்வுகளை தயங்காமல் வெளிப்படுத்துவார்கள்.
சுவாச பயிற்சிகள்
குழந்தைகளுக்கு சுவாசப் பயிற்சிகள், தியானம் ஆகிய மன உறுதி தொடர்புடைய விஷயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். இவை பதட்டத்தைக் குறைத்து கவனத்தை மேம்படுத்தும். இதனால் கவனம் சிதறாமல் படிப்பார்கள்.
உணர்ச்சிகளை கையாளுதல்
பிறர் மீது பச்சாத்தாபம், அதே நேரம் சுய விழிப்புணர்வு, புதிய உறவுகளை உருவாக்குதல் ஆகியவற்றை திறம்பட செய்யும் திறன்களை கற்பிக்க வேண்டும். இவை உணர்ச்சி நுண்ணறிவு, மீள்தன்மையை மேம்படுத்தும்.
டிஜிட்டல் கல்வி :
தொழில்நுட்பத்துடன் கற்கும் திறனை வளர்க்க வேண்டும். ஆஃப்லைன் செயல்பாடுகளுடன், திரை நேரத்தை சமநிலைப்படுத்தி கற்க வேண்டும். போனில் அதிக நேரம் செலவிடக் கூடாது. படிக்க, மற்ற திறன்களை வளர்க்க மொபைல் போனை பயன்படுத்த வழிகாட்ட வேண்டும்.
திறமைகள்
ஏதேனும் தனுத்திறமைகள் குழந்தைகளுக்கு இருந்தால் அதை வளர்க்கும் விதமாக வகுப்புகளில் சேர்த்துவிடலாம். ஓவியம், ஓடுதல், தாண்டுதல், இசை, தற்காப்பு பயிற்சிகள் உள்ளிட்ட குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கும் ஏதேனும் வகுப்புகளில் அவர்களை சேர்த்து ஊக்குவிக்க வேண்டும்.