- Home
- Lifestyle
- பெற்றோர்களே ப்ளீஸ் நோட்.. கல்வி, தேர்வுகள் பற்றி குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள்..
பெற்றோர்களே ப்ளீஸ் நோட்.. கல்வி, தேர்வுகள் பற்றி குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள்..
மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளைக் குறைக்க உதவும் கல்வி மற்றும் தேர்வுகள் பற்றி குழந்தைகளுக்கு நாம் கற்பிக்கக்கூடிய சில விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்

தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது சற்று சிக்கலான விஷயங்களாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு எல்லாவற்றிலும் சிறந்ததை வழங்குவதை உறுதிசெய்யும் அதே வேளையில், வாழ்க்கையில் கடந்து செல்ல தேவையான தந்திரங்களையும் திறன்களையும் கற்றுக்கொள்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக கல்வி மற்றும் தேர்வுகள் குறித்து குழந்தைகளுக்கு கற்றுக்கொள்வது, அவர்களை வழிநடத்துவது கடினமான விஷயமாக இருக்கும். கற்றல் வேறுபாடுகள் அல்லது பாடங்களை புரிந்துகொள்வதில் சவால்கள் உள்ள குழந்தைகளுக்கு, அதிக மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் தூண்டலாம். தேர்வு மற்றும் முடிவுகள் வரும்போது அவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சிகளில் அவமானமும் ஒரு பகுதியாகும்.
கற்றல் மற்றும் சிந்தனை வேறுபாடுகள் உள்ள குழந்தைகளை கவனமாக கையாள வேண்டும். கற்றல் என்பது ஒரு பயணம். மேலும் இந்த செயல்முறையை ரசிக்க முயற்சிக்க வேண்டும். மேலும் கிரேடுகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் இருந்தால் நல்லது" என்று உளவியல் நிபுணர்கள் தெரிவிகின்றனர்.
மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளைக் குறைக்க உதவும் கல்வி மற்றும் தேர்வுகள் பற்றி குழந்தைகளுக்கு நாம் கற்பிக்கக்கூடிய சில விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம். தேர்வுகளிகம்: தேர்வுகளின் நோக்கத்தை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். குழந்தைகளின் பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்ள. பெரும்பாலும் குழந்தைகள் தேர்வுகளை பயமுறுத்தும் மற்றும் சங்கடமான ஒன்றாக நினைக்கிறார்கள். தேர்வுகளுக்கு பின்னால் உள்ள உண்மையான நோக்கத்தைப் பார்க்க நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்.
படிப்பு மற்றும் தேர்வுகள் பற்றிய அவர்களின் பய உணர்வுகளை கேலி செய்வதற்குப் பதிலாக, அவர்களின் உணர்ச்சிகளைப் பற்றி அறிந்துகொள்ள நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். இது அவர்களுக்கு அச்சத்தை போக்க உதவும். குழந்தைகளின் மதிப்பை அவர்களுக்கு உறுதியளிக்கவும்: தேர்வுகளில் என்ன முடிவு வந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. குழந்தைகள் தனித்துவமானவர்கள், சிறப்பு வாய்ந்தவர்கள் மற்றும் தகுதியானவர்கள் என்று நாம் அவர்களுக்கு உறுதியளிக்க வேண்டும்.
குழந்தைகளின் நம்பிக்கையை அதிகரிக்கவும்: சில சமயங்களில் தேர்வுகளில் மதிப்பெண் குறைவது அல்லது மோசமான முடிவுகள் காரணமாக, குழந்தைகளின் நம்பிக்கை குறையும். எனவே அவர்களின் மதிப்பு, திறன் மற்றும் அவர்கள் யார் என்பதை தேர்வு முடிவுகள் தீர்மானிக்கவில்லை என்பதை நாம் அவர்களுக்கு உறுதியளிக்க வேண்டும்.