MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • புரதம், வைட்டமின் பி12 கொட்டிக்கிடக்கும் 'சிவப்பு எறும்பு சட்னி': ஒருமுறை சாப்பிட்டா விடவே மாட்டீங்களாம்!

புரதம், வைட்டமின் பி12 கொட்டிக்கிடக்கும் 'சிவப்பு எறும்பு சட்னி': ஒருமுறை சாப்பிட்டா விடவே மாட்டீங்களாம்!

மரத்துப் பொந்துகளில் வாழும் சின்னஞ்சிறு எறும்புகளைச் சேகரித்து, காரசாரமான சட்னியாக்கி, இன்று சந்தையிலும் ஹோட்டல்களிலும் விற்பனைக்குக் கொண்டுவந்தது வரை இதன் ஒவ்வொரு பின்னணியும் ஆச்சரியப்பட வைக்கிறது.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 24 2026, 08:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மரத்துல ஓடுற சிவப்பு எறும்பை பிடிச்சு சட்னியா?
Image Credit : Linkedin

மரத்துல ஓடுற சிவப்பு எறும்பை பிடிச்சு சட்னியா?

எறும்பு சட்னியை ஹோட்டல் மெனு கார்டில் பார்த்திருக்கிறீர்களா? மரத்தில் சாரை சாரையாக ஓடிக்கொண்டிருக்கும் சிவப்பு எறும்புகளைப் பிடித்து வந்து சட்னி அரைக்கிறார்கள் என்றால், நம்மில் பலருக்கு ஆச்சரியத்தில் புருவம் உயரத்தான் செய்யும். ஆனால், ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்ட மக்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.

தலைமுறை தலைமுறையாக அங்குள்ள பழங்குடியின மக்களின் ஃபேவரைட் உணவாக இருக்கும் இந்த சிவப்பு எறும்பு சட்னி, இப்போது இணையத்தில் திடீரென செம ட்ரெண்டாகி வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.

இந்தோனேசியா, மலேசியா போன்ற வெளிநாடுகளில் மட்டுமல்லாமல், நமது இந்தியாவிலும் இதுபோன்ற விநோதமான உணவுப் பழக்கங்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அதில் ஒடிசாவின் இந்த சிவப்பு எறும்பு சட்னி, அதன் தனித்துவமான ருசியாலும் பாரம்பரியத்தாலும் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
புவிசார் குறியீடு வென்ற 'காய் சட்னி'!
Image Credit : x

புவிசார் குறியீடு வென்ற 'காய் சட்னி'!

ஆங்கிலத்தில் 'ரெட் வீவர் ஆன்ட்ஸ்' (Red Weaver Ants) என்று அழைக்கப்படும் இந்த வகை சிவப்பு எறும்புகளை, உள்ளூர் மக்கள் 'காய்' (Kai) என்று அழைக்கின்றனர். இதனால் இதை வைத்து அரைக்கப்படும் சட்னிக்கு 'காய் சட்னி' என்று பெயர் வந்தது.

இது ஏதோ விநோதத்திற்காக செய்யப்படும் சமையல் மட்டுமல்ல; இதற்குப் பின்னால் ஒரு பெரும் போராட்ட வரலாறே அடங்கியுள்ளது. தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, கடந்த 2024-ம் ஆண்டு ஜன.2-ம் தேதி மயூர்பஞ்சின் "சிமிலிபால் காய் சட்னி"க்கு அதிகாரப்பூர்வமாக புவிசார் குறியீடு (GI Tag) வழங்கப்பட்டு தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டது.

35
எறும்புகளைப் பிடிப்பது எப்படி?
Image Credit : x

எறும்புகளைப் பிடிப்பது எப்படி?

இந்த சட்னியை தயாரிக்கும் விதம் அத்தனை சுவாரஸ்யமானது. மயூர்பஞ்ச் காட்டுப் பகுதிக்குள் செல்லும் மக்கள், மரங்களில் இலைகளை ஒன்றோடு ஒன்று ஒட்டி எறும்புகள் கட்டியிருக்கும் கூடுகளைக் குறிவைக்கிறார்கள். பெரும்பாலும் அதிகாலை வேளையிலேயே இந்தக் கூடுகள் சேகரிக்கப்படுகின்றன. எறும்புகளோடு சேர்த்து அவற்றின் முட்டைகளையும் அள்ளி எடுக்கிறார்கள்.

ஆனால், இது ஒன்றும் அத்தனை சுலபமான வேலை கிடையாது. இந்த வகை சிவப்பு எறும்புகள் கடித்தால், தோலில் ஊசியால் குத்தியது போன்ற பயங்கர வலி ஏற்படுவதுடன் கொப்புளங்களும் வந்துவிடுமாம். இதனால் கூடுகளைச் சேகரிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயல்பட வேண்டியிருக்கிறது.

45
காரசாரமான பாரம்பரிய செய்முறை
Image Credit : x

காரசாரமான பாரம்பரிய செய்முறை

கூட்டிலிருந்து எறும்புகளையும் முட்டைகளையும் கவனமாகச் சேகரித்து வந்ததும், அவற்றைச் சுத்தப்படுத்தி சமையல் வேலைகளைத் தொடங்குகிறார்கள். சுத்தப்படுத்திய எறும்புகளுடன் உப்பு, இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து மசாலாவாக அரைக்கிறார்கள்.

சில பகுதிகளில் கூடுதல் சுவைக்காக புதினாவும் சேர்த்துக் கொள்கிறார்கள். இறுதியில் காரமும் புளிப்பும் சம விகிதத்தில் கலந்து நாக்கில் எச்சில் ஊறவைக்கும் வகையில் அட்டகாசமான சட்னி தயாராகிவிடுகிறது! இதனை அப்பகுதி மக்கள் சுடச்சுட சாதம் மற்றும் கேழ்வரகு உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளோடு தொட்டுக்கொண்டு விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

55
எறும்புக்குள் இத்தனை சத்துக்களா?
Image Credit : x

எறும்புக்குள் இத்தனை சத்துக்களா?

காட்டுப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வீட்டு சமையல் அறையோடு இந்த சட்னி நின்றுவிடவில்லை. மயூர்பஞ்ச் வாரச்சந்தைகளிலும் இது விற்பனைக்கு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல், சில ஹோட்டல்களிலும் "சிவப்பு எறும்பு சட்னி" என்று பிரத்யேகமாக போர்டு போட்டு பரிமாறுகிறார்கள். காரமும் புளிப்பும் பின்னிப் பிணைந்த இதன் பிரத்யேக சுவைக்காகவே பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் வாங்கி ருசிக்கின்றனர்.

ஆச்சரியம் என்னவென்றால், இதில் கொட்டிக்கிடக்கும் ஊட்டச்சத்துக்கள் தான். புரதம் (Protein), கால்சியம் (Calcium), இரும்புச்சத்து (Iron), துத்தநாகம் (Zinc), வைட்டமின் B-12 உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. இதனால் இது வெறும் பாரம்பரிய உணவு மட்டுமல்லாமல், உடலுக்கு வலுவூட்டும் சத்துணவாகவும், நூற்றுக்கணக்கான பழங்குடியின குடும்பங்களின் முக்கிய வாழ்வாதாரமாகவும் உருவெடுத்துள்ளது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
பித்தப்பைக்கான உணவுகள்
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(54.0 ov) 99 & 156/4
Day 4
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
NZNZ
Thu, 22 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Spiritual: பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 பொருட்கள்.! ஒவ்வொன்றின் முக்கியத்துவம் என்ன?
Recommended image2
Ladoo Making: லட்டு பிடிக்கும்போதே உதிர்ந்து போகுதா? மாமியார் சொல்லும் இந்த ரகசியம் தெரிஞ்சுக்கோங்க!
Recommended image3
செம்பு பாத்திரத் தண்ணீர் உடலுக்கு அமிர்தமா? விஷமா? கல்லீரல், குடல் பாதிக்கும் அபாயம்... எச்சரிக்கும் நிபுணர்கள்!
Related Stories
Recommended image1
Mutton Cooking Tips: மட்டன் எவ்வளவு நேரம் வேக வைத்தாலும் கல்லு மாதிரி இருக்கா? இதை மறந்துடாதீங்க!
Recommended image2
Karuppu Kavuni Arisi Recipes: கருப்பு கவுனி அரிசி வைத்து செய்யும் 5 சூப்பர் உணவுகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved