மழைக்காலத்தில் கரையான் தொல்லையா? நொடியில் தீர்வு! சூப்பர் டிப்ஸ்
மழைக்காலத்தில் வீட்டில் கரையான் தொல்லை அதிகமாக இருந்தால் நொடியில் அழிக்க உதவும் சில வீட்டு குறிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Natural Ways To Kill Termites In Rainy Season
கரையான்கள் வீட்டின் சுவர், மர சாமான்கள், கதவுகள் என எதையும் விட்டு வைக்காமல் அவற்றை அரித்தே பாழாக்கிவிடும். அதுவும் குறிப்பாக இந்த பிரச்சனை மழை காலத்தில் அதிகமாகவே இருக்கும். காரணம் இந்த சீசனில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் கரையான்கள் வேகமாக வளரும். இதனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவை கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றை அழித்துவிடும். கரையான் அழிப்பதற்கு பணம் ஏதும் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து அவற்றை நொடியில் அழித்து விடலாம். அவை என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் :
ரெண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் இரண்டையும் ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி நன்றாக கலந்து அதை கரையான் உள்ள இடத்தில் நேரடியாக தெறிக்க வேண்டும். வினிகரில் இருக்கும் அசிட்டிக் அமிலம் மற்றும் எலுமிச்சை சாற்றில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கரையான் உடனே கொன்றுவிடும்.
உப்பு நீர் :
சூடான நீரில் உப்பு கலந்து அதை நேரடியாக கரையான் மீது தெளிக்க வேண்டும். இதனால் கரையான் உடனே இறந்துவிடும்.
கிராம்பு எண்ணெய் :
அரை கப் தண்ணீரில் மூன்று சொட்டு கிராம்பு எண்ணெய் கலந்து அவற்றை ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி கரையான் மீது தெளிக்க வேண்டும். கிராமில் இருக்கும் கடுமையான வாசனை கரையானை முடியும் கொன்றுவிடும்.
வேப்ப எண்ணெய் :
வேப்ப எண்ணெய் இயற்கையாகவே பூச்சிக்கொல்லியாக செயல்படும். இதை கரையான் இருக்கும் இடங்களில் தெளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை இப்படி செய்து வந்தால் வீட்டில் இருந்து கரையான் முற்றிலுமாக அழிந்துவிடும்.
தடுப்பு முறைகள் :
- குளிர்ச்சியான அல்லது ஈரப்பதமான இடங்களில் தான் கரையான் வேகமாக வளரும். எனவே வீட்டுக்குள் சூரிய ஒளி படும்படி வீட்டின் கதவு ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வையுங்கள்.
- மர சாமான்கள் ஈரமாக இருந்தால் வெயில் அடிக்கும் போது அவற்றை உலர வைக்கவும்.
- மர சாமான்களை அவ்வப்போது சோதிக்கவும். கரையான் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
- சுவர்களில் ஏதேனும் துளைகள் இருந்தால் அவற்றை அடைத்தால் கரையான்கள் வருவதை தடுக்கலாம்.
- வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். இதனால் கரையான் வருவது தடுக்கப்படும்.