- Home
- Lifestyle
- Nail Biting Risks : அடிக்கடி நகம் கடிக்கும் நபரா? உடனே நிறுத்துங்க! உயிருக்கு ஆபத்தாகும் பழக்கம்
Nail Biting Risks : அடிக்கடி நகம் கடிக்கும் நபரா? உடனே நிறுத்துங்க! உயிருக்கு ஆபத்தாகும் பழக்கம்
அடிக்கடி நகங்களை கடிப்பது ஆரோக்கியத்திற்கு எந்த மாதிரி தீங்கை விளைவிக்கும் என்று இங்கு பார்க்கலாம்.

நம்மில் பலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. டென்ஷன், பதட்டம் அல்லது கோபமாக இருக்கும்போது அடிக்கடி நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். அதிலும் அதிகமாக நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கையில் இருக்கும் நகங்களை மட்டுமல்ல சதை பகுதிகளையும் சேதப்படுத்துகின்றனர்.
பொதுவாக விரல் சப்பும் குழந்தைகளுக்கு நகம் கடிக்கும் பழக்கமும் கூடவே வந்துவிடும். நகம் கடிக்கும் பழக்கம் வந்துவிட்டால் அதை நிறுத்துவது ரொம்பவே கஷ்டம். மேலும் பற்களில் பிரச்சனையையும் ஏற்படுத்தும். நகங்களை அடிக்கடி கடித்தால், அந்த கையை வாயில் வைப்பதன் காரணமாக பாக்டீரியாக்கள் வயிற்றுக்குள் சென்று தொற்று நோய்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இப்படி அடிக்கடி நகங்களை கடிப்பவர்களுக்கு Obsessive Compulsive Disorder பிரச்சனை இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த பழக்கத்தை உடனே நிறுத்துவது என்பது கடினமான காரியம் தான். ஆனால் தொடர்ந்து முயற்சி செய்வதன் மூலம் நிறுத்தி விடலாம்.
எப்படி நிறுத்தலாம்?
- சலிப்பு, பதட்டம், டென்ஷன் ஆக இருக்கும்போது உடனே நகத்தை கடிக்க தோன்றும் ஆனால் அதற்கு பதிலாக வேறு பழக்கத்தை முயற்சிப்பதன் மூலம் இந்த நாகவடிக்கும் பழக்கத்தை நிறுத்தி விடலாம்.
- அதுபோல நகத்தை கடிக்காமல் இருப்பதற்காக நகங்களில் நெயில் பாலிஷ் போட்டுக் கொள்ளலாம். நகத்தை சிறியதாக வெட்டிக் கொள்ளவும் அல்லது கிளவுஸ் போட்டுக் கொள்ளவும். ஒருவேளை இவை அனைத்தும் பலன் தரவில்லை என்றால் தெரப்பிகள் மூலம் இந்த பழக்கத்தை சுலபமாக நிறுத்தி விடலாம் என்று சொல்லப்படுகிறது.