MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • அம்பானி வீட்டில் இப்படி நடக்குதா? கிட்டத்தட்ட 600 பணியாளர் வச்சு பராமரிக்கும்..பிரமாண்ட மாளிகையின் உண்மை முகம்

அம்பானி வீட்டில் இப்படி நடக்குதா? கிட்டத்தட்ட 600 பணியாளர் வச்சு பராமரிக்கும்..பிரமாண்ட மாளிகையின் உண்மை முகம்

முகேஷ் அம்பானி, நீதா அம்பானி வீட்டின் சுவாரசியமான சில தகவல்களை தெரிந்தால் ஆச்சரியத்தில் ஆடி போய்விடுவீர்கள். 

2 Min read
Author : maria pani
Published : Mar 08 2023, 02:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, தன் குடும்பத்துடன் மும்பையில் இருக்கும் அன்டிலியா எனும் வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டின் தோற்றமும் மதிப்பும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்த இடத்தில் உள்ளது. அன்டிலியா என்றால் அம்பானி வீடு என்பதை விட அம்பானி மாளிகை எனலாம். அவ்வளவு கண்கவர் உண்மைகளை கொண்டது அந்த கட்டிடம். அதன் சில உண்மை தகவல்களை இங்கு காணலாம். 

26

உலகின் இரண்டாவது மிக விலையுயர்ந்த வீடான அம்பானியின் அன்டிலியா வீட்டில் 27 மாடிகள் உள்ளன. இந்த மாளிகை 8.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் வந்தாலும் அசையாமல் இருக்கும் வகையில் செம்ம தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

36

கிட்டத்தட்ட 4,532 சதுர மீட்டர் அளவில் கட்டப்பட்டுள்ளது. ஸ்பா, சலூன், மூன்று நீச்சல் குளங்கள், யோகா மற்றும் நடன ஸ்டுடியோக்கள் என எல்லா வசதிகளும் மாளிகைக்குள் இருக்கின்றன. பெரிய மாளிகை மட்டுமல்ல... இந்த மாளிகையை பராமரிக்க 600 பணியாளர்கள் கொண்ட குழு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாளிகையை சுற்றியுள்ள தோட்டத்தை சுத்தம் செய்து ஈரப்பதமாக வைப்பதோடு, வீட்டையும் பராமரிக்கிறார்கள். 

46

கிட்டத்தட்ட 168 கார்களை நிறுத்த இங்கு போதுமான இடவசதி உள்ளது. அதுவும் 3 ஹெலி பேட் கூட இங்கு கட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்த மாளிகையை கட்ட 2 ஆண்டுகள் ஆகியதாம். அம்பானியின் இந்த மாளிகையின் மதிப்பு ரூபாய் 6,000 கோடி முதல் 12,000 கோடி வரை இருக்கலாம் என தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால் நிம்மதி சுத்தமா இருக்காது.. ஓயாமல் சண்டை சச்சரவு தான்.. இதை பண்ணி பாருங்க..

56

இவ்வளவு விலை உயர்ந்த மாளிகையை சும்மாவா விடுவார்கள். இங்கு வேலை செய்யும் பணியாளர்கள் மாதம் ரூ 2 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்கள். வீட்டை கண்ணாடி போல மாசுபடாமல் வைத்திருக்க இவ்வளவு சம்பளமா? உண்மையில் இது வெறும் மாதச்சம்பளம் தான்.. அவர்களுக்கு வழங்கும் மற்ற சலுகைகளை இதில் சேர்க்கவில்லை. 

66

புகழ்பெற்ற சிகாகோவைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்களான பெர்கின்ஸ், வில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான லெய்டன் ஹோல்டிங்ஸ் ஆகியோர் தான் இந்தக் கட்டிடத்தை வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: அம்பானி டிரைவர் ஒரு மாசம் எத்தனை லட்சம் சம்பாதிக்கிறார் தெரியுமா? பெரிய கம்பெனி வேலையிலும் கிடைக்காத வருமானம்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dosa Batter: இப்படி மாவு அரைச்சா, ஹோட்டல் தோசையை இனி வீட்டுல சாப்பிடலாம்!
Recommended image2
அதிகம் விற்பனையாகும் பீர் இதுதான்! டாப் 5 லிஸ்ட் இதோ! கிங்பிஷர் எத்தனையாவது இடம்?
Recommended image3
Vegetarian Foods: சைவ பிரியரா நீங்க? உடம்புக்கு அதிக புரோட்டீன் தரும் 5 உணவுகள்! மிஸ் பண்ணாதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved