MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இந்திய ஆயுதப்படையில் பெண்களின் பங்கு!! வரலாறு காணாத மாற்றம்

இந்திய ஆயுதப்படையில் பெண்களின் பங்கு!! வரலாறு காணாத மாற்றம்

அன்னையர் தினம் 2025 : இந்திய ஆயுதப் படையில் பெண்களின் பங்கு குறித்து இந்தப் பதிவில் காணலாம்.  

2 Min read
Author : Kalai Selvi
Published : May 09 2025, 03:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Mother's Day 2025 Women in Indian Armed Forces

Mother's Day 2025 Women in Indian Armed Forces

தாய் இல்லாமல் அணுவும் அசையாது. ஒரு வீட்டின் அமைதிக்கு மட்டுமில்லை, நாட்டின் அமைதிக்கும் தங்களால் பங்களிக்க முடியும் என பெண்கள் நிரூபித்து வருகின்றனர். ஆயுதப்படையில் பணியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. பெண்களின் சேவையை பெற அவர்களுக்கான இட ஒதுக்கீடும் தரப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஆயுதப் படையில் இணையும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 

 

26
அன்னையர் தினம் 2025 தேதி:

அன்னையர் தினம் 2025 தேதி:

பெண்கள் ஒரு குடும்பத்தை நிர்வகிப்பதற்கான பொறுப்பை தவிரவும் பல வேலைகளை செய்யக் கூடியவர்கள். பெண்களின் தியாகம், அர்பணிப்பு போன்றவற்றை கொண்டாடும்விதமாக ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினம் மே 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளை கொண்டாடும் முன் பெண்கள் புரிந்து வரும் சாதனைகளையும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

Related Articles

Related image1
Mothers Day Gift : அன்னையர் தினத்தில் உங்கள் அம்மா மறக்க முடியாத படி 'இந்த' மாதிரி கிப்ட் கொடுத்து அசத்துங்க!
Related image2
Rasi Palan : இந்த 5 ராசி பெண்கள் தான் சிறந்த அம்மாக்கள்! ஏன் தெரியுமா..?
36
ஆயுதப் படையில் பெண்கள்!

ஆயுதப் படையில் பெண்கள்!

இந்தியாவில் இராணுவம் ஆண்களிம் உலகமாக இருந்துவந்தது. அதை மாற்றும்விதமாக புதிய தலைமுறை பெண்கள் ராணுவத்தில் இணைய தொடங்கியுள்ளனர்.  பெண்கள் இராணுவத்தில் துணை அதிகாரிகளாக மட்டுமின்றி இராணுவ பெண் தலைவர்களும் உருவெடுத்துள்ளனர்.

46
ஆயுதப் படையில் பெண்கள்

ஆயுதப் படையில் பெண்கள்

நம் நாட்டில் ஆயுத படைப் பிரிவில் பெண்களின் பங்களிப்பு பெருகிவருகிறது. அதற்கு சான்றாக ஷிவாங்கி சிங்கை கூறலாம். ரஃபேல் ஜெட் விமானத்தை ஓட்டிய முதல் இந்தியப் பெண் ஷிவாங்கி சிங் தான். பெண்கள் ஆயுதப் படைக்கு வரத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. 1958ஆம் ஆண்டில் ராணுவ மருத்துவப் படையில் (AMC) பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதன் பின்னர் 1991ஆம் ஆண்டில்  இந்திய கடற்படை பெண்களை அதிகாரிகளாக சேர்க்கத் தொடங்கியது. 

 

56
ஆயுதப் படையில் பெண்கள்

ஆயுதப் படையில் பெண்கள்

1992இல் பெண்கள் ஆயுதப் படைகளில் ஷார்ட் சர்வீஸ் கமிஷன் (SCC) அதிகாரிகளாக பல்வேறு துணை கிளைகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். இப்படி படிப்படியாகவே பெண்கள் ஆயுதப் படையில் கால் பதித்தனர். மார்ச் மாத 2023 நிலவரப்படி, இந்திய விமானப்படையில் (IAF) 1,636 பெண் அதிகாரிகள்,  இந்திய கடற்படையில்  மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பிரிவுகளில் பணி புரியும் பெண்கள் உட்பட 748 பெண் அதிகாரிகள் இருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. இந்திய ராணுவத்திலும் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. 2022ஆம் ஆண்டு நிலவரப்படி 3.80% பெண்கள் பங்களிப்பு ராணுவத்தில் இருந்துள்ளது. தமிழ்நாட்டில், மாநில அரசு காவல் பணியமர்வில் பெண்களை இணைக்கும் நோக்கில் 30% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

66
மாண்புமிகு பெண்கள்!

மாண்புமிகு பெண்கள்!

ஜனவரி 2023ஆம் ஆண்டில் 108 பெண் அதிகாரிகள் கர்னல் பதவி உயர்வு பெற்றனர். இது ஆயுதப்படையில் சாதிக்கும் பெண்கள் வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணம். பெண்கள் ஆயுதப் படையில் திறம்பட பணியாற்றிவருகின்றனர். அவர்களால் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும் என்பதற்கு சான்றுதான் அவர்களின் ஆயுதப் படை பங்களிப்பு என்றால் மிகையாகா!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Related Stories
Recommended image1
Mothers Day Gift : அன்னையர் தினத்தில் உங்கள் அம்மா மறக்க முடியாத படி 'இந்த' மாதிரி கிப்ட் கொடுத்து அசத்துங்க!
Recommended image2
Rasi Palan : இந்த 5 ராசி பெண்கள் தான் சிறந்த அம்மாக்கள்! ஏன் தெரியுமா..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved