MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • உங்கள் ஏர் கூலரை ஏசி போல சில்லென்று மாற்ற 5 அட்டகாசமான டிப்ஸ்

உங்கள் ஏர் கூலரை ஏசி போல சில்லென்று மாற்ற 5 அட்டகாசமான டிப்ஸ்

கடுமையான வெயிலைச் சமாளிக்க ஏசி இல்லாதவர்கள், வீட்டில் உள்ள ஏர் கூலரையே ஏசி போல மாற்றலாம். கூலிங்கை அதிகரிக்கச் சில எளிய வழிகளைக் கையாண்டால், குறைந்த செலவில் இந்த கோடையிலும் உங்கள் வீடு ஜில்லென்று மாறும். குளுகுளு அனுபவத்தைப் பெற இதுவே சிறந்த வழி!

1 Min read
Author : Priya Velan
Published : May 07 2026, 02:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தேன்கூடு அட்டைகளும் நறுமணமும்!
Image Credit : Pinterest

தேன்கூடு அட்டைகளும் நறுமணமும்!

பழைய வைக்கோல் போன்ற கூலிங் பேட்களை மாற்றிவிட்டு, ஹனிகோம்ப் (Honeycomb) பேட்களைப் பயன்படுத்துங்கள். இது அதிக நேரம் குளிர்ச்சியைத் தக்கவைக்கும். கூலர் தண்ணீரில் இரண்டு சொட்டு லெமன்கிராஸ் அல்லது லாவண்டர் ஆயில் சேர்த்தால், ஏசி போல நறுமணத்துடன் கூடிய குளிர்ந்த காற்று வீடு முழுவதும் வீசும்!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
 'ஐஸ் கியூப்' மேஜிக் :
Image Credit : Pinterest

'ஐஸ் கியூப்' மேஜிக் :

பலர் கூலர் தொட்டியிலேயே ஐஸ் கட்டிகளைப் போடுவார்கள். இது மோட்டாரை சீக்கிரம் பழுதாக்கும். அதற்கு பதில், கூலரின் மேல் பகுதியில் உள்ள நீர் தெளிக்கும் தட்டில் (Water tray) ஐஸ் கட்டிகளை வையுங்கள். அங்கிருந்து தண்ணீர் குளிர்ந்து பேட்களில் இறங்கும் போது, காற்று வழக்கத்தை விட 5°C முதல் 8°C வரை கூடுதலாகக் குளிர்ச்சியாக இருக்கும்.

Related Articles

Related image1
Top 5 Air Coolers: குறைந்த கரண்ட் பில்.. அதிக குளிர்ச்சி! இந்த கோடைக்கு நீங்க வாங்க வேண்டிய டாப் 5 கூலர் வகைகள்!
Related image2
Air Cooler Tips: உங்க கூலர்ல இருந்து சூடான காத்து வருதா? ஐஸ் மாதிரி கூலாக மாற்ற இதோ ஒரு சூப்பர் ஐடியா.!
35
ஜன்னல் கதவு... மூடியே இருக்கணுமா?
Image Credit : Pinterest

ஜன்னல் கதவு... மூடியே இருக்கணுமா?

ஏசி பயன்படுத்தும் போது கதவை மூடுவோம். ஆனால் கூலருக்கு அப்படிச் செய்யக்கூடாது. கூலரை ஜன்னலுக்கு மிக அருகில் வைத்து, பின் பக்கத்தில் இருந்து வெளிக்காற்று உள்ளே வருமாறு வையுங்கள். அதே சமயம், அறையின் எதிர்ப்புறம் உள்ள கதவை லேசாகத் திறந்து வைத்தால் Cross Ventilation ஏற்பட்டு, புழுக்கம் நீங்கி ஏசி எஃபெக்ட் கிடைக்கும்.

45
அந்த 15 நிமிட இடைவேளை :
Image Credit : Pinterest

அந்த 15 நிமிட இடைவேளை :

கூலரை ஆன் செய்த உடனே ஃபேனை ஓடவிடாதீர்கள். முதலில் தண்ணீரை (Pump) மட்டும் ஆன் செய்து 10 முதல் 15 நிமிடங்கள் ஓடவிடுங்கள். கூலிங் பேட்கள் முழுமையாக நனைந்த பிறகு ஃபேனை ஆன் செய்தால், முதல் நிமிடம் முதலே சில்லிங் காற்று வரும். இது பேட்கள் காய்ந்து வருவதால் ஏற்படும் வெப்பத்தைத் தவிர்க்கும்.

55
உப்புத் தண்ணீரைத் தவிர்க்கவும் :
Image Credit : Pinterest

உப்புத் தண்ணீரைத் தவிர்க்கவும் :

உங்கள் பகுதியில் உப்புத் தண்ணீர் இருந்தால், அது கூலரின் பேட்களில் படிந்து காற்றைத் தடுக்கும் . வாரம் ஒருமுறை தண்ணீரை முழுமையாக மாற்றிவிட்டு, ஒரு டீஸ்பூன் வினிகர் அல்லது பேக்கிங் சோடா கலந்து தொட்டியைச் சுத்தப்படுத்துங்கள். இது பாசி படிவதைத் தடுத்து, தூய்மையான காற்றை உறுதி செய்யும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
காற்று குளிர்விப்பான்
குளிர்சாதனப் பெட்டி சுத்தம் செய்தல்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
மாடர்ன் லுக் தரும் லேட்டஸ்ட் 1 கிராம் இன்ஃபினிட்டி கம்மல் டிசைன்கள்
Recommended image2
ரூ 100 பட்ஜெட்டில் அசத்தலான 6 பெண்டெக்ஸ் தங்க நகல் வளையல் டிசைன்கள்
Recommended image3
கோடைகாலத்திற்கான 6 சிறந்த லைட் எம்பிராய்டரி காட்டன் சூட் டிசைன்கள்
Related Stories
Recommended image1
Top 5 Air Coolers: குறைந்த கரண்ட் பில்.. அதிக குளிர்ச்சி! இந்த கோடைக்கு நீங்க வாங்க வேண்டிய டாப் 5 கூலர் வகைகள்!
Recommended image2
Air Cooler Tips: உங்க கூலர்ல இருந்து சூடான காத்து வருதா? ஐஸ் மாதிரி கூலாக மாற்ற இதோ ஒரு சூப்பர் ஐடியா.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved