- Home
- Lifestyle
- LPG Gas Cylinder: பிரிட்ஜும் சிலிண்டரும் பக்கத்துல இருக்கா? இந்த சின்ன தவறு பெரிய ஆபத்தில் முடியும்.. முழு விவரம்!
LPG Gas Cylinder: பிரிட்ஜும் சிலிண்டரும் பக்கத்துல இருக்கா? இந்த சின்ன தவறு பெரிய ஆபத்தில் முடியும்.. முழு விவரம்!
LPG Gas Cylinder: உங்கள் வீட்டில் கேஸ் சிலிண்டர் பக்கத்திலேயே பிரிட்ஜ் வைத்துள்ளீர்களா? இடப்பற்றாக்குறையால் இப்படி செய்தால் இது ரொம்பவே ஆபத்தான விஷயம். ஏன் என்று இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

கேஸ் சிலிண்டர் பக்கத்தில் பிரிட்ஜ் வைத்துள்ளீர்களா?
சமையலறையில் நாம் பயன்படுத்தும் சில பொருட்கள் விஷயத்தில் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் பெரிய ஆபத்து வந்துவிடும். இடப்பற்றாக்குறை காரணமாகப் பல வீடுகளில் கேஸ் சிலிண்டரையும் பிரிட்ஜையும் பக்கத்து பக்கத்தில் வைத்திருப்பார்கள். ஆனால், இந்தப் பழக்கம் சில நேரங்களில் பெரிய விபத்தை ஏற்படுத்தலாம்.
பிரிட்ஜ் எலக்ட்ரிக்கல் ஸ்பார்க் ஆபத்து
பிரிட்ஜில் கம்ப்ரஸர் உட்பட பல எலக்ட்ரிக் பாகங்கள் உள்ளன. பிரிட்ஜ் ஆன் அல்லது ஆஃப் ஆகும் போது, சின்னதாக எலக்ட்ரிக்கல் சிறு ஸ்பார்க் போன்ற தீப்பொறி உருவாக வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆகிக்கொண்டிருந்தால், அந்த நேரத்தில் உருவாகும் இந்த ஸ்பார்க் பெரிய தீ விபட்டை உண்டாக்கிவிடும். அதனால், எலக்ட்ரிக் பொருட்கள் பக்கத்தில் கேஸ் சிலிண்டரை வைக்கும்போது ரொம்பவே உஷாராக இருக்க வேண்டும்.
பிரிட்ஜில் இருந்து வெளியேறும் வெப்பம்
பிரிட்ஜை கூலிங்காக வைத்திருக்க கம்ப்ரஸர் தொடர்ந்து வேலை செய்துகிட்டே இருக்கும். இந்த செயல்முறையில் பிரிட்ஜின் பின்பக்கத்தில் இருந்து அதிக வெப்பம் வெளியேறும். ஆனால், எல்.பி.ஜி சிலிண்டரை அதிக வெப்பம் இருக்கிற இடத்தில் கண்டிப்பாக வைக்கக்கூடாது. அதிக வெப்பத்தால் சிலிண்டருக்கு உள்ளே அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால, வெப்பத்தை வெளியேற்றும் பிரிட்ஜ் மாதிரியான பொருட்கள் பக்கத்தில் சிலிண்டரை வைப்பதைத் தவிர்ப்பதுதான் பாதுகாப்பானது.
பிரிட்ஜ், சிலிண்டருக்கு இடையே எவ்வளவு இடைவெளி வேண்டும்?
பிரிட்ஜ் மற்றும் எல்.பி.ஜி சிலிண்டருக்கு நடுவில் குறைந்தபட்சம் 5 முதல் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். சிலிண்டரை எப்பொழுதும் நல்ல காற்றோட்டமான இடத்தில்தான் வைக்க வேண்டும். நேரடியாக வெயில் படுகிற இடத்திலயோ அல்லது காற்றோட்டம் இல்லாத இடத்திலயோ சிலிண்டரை வைக்கக்கூடாது.
சிலிண்டர் பக்கத்தில் எதை வைக்கக்கூடாது?
கேஸ் சிலிண்டர் பக்கத்தில் மைக்ரோவேவ் ஓவன் உட்பட எந்த எலக்ட்ரானிக் பொருட்களையும் வைக்காமல் இருப்பது ரொம்ப நல்லது. உங்கள் சமையலறையில் பிரிட்ஜும் கேஸ் சிலிண்டரும் ரொம்ப பக்கத்தில் இருந்தால், உடனே அவற்றுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளி மற்றும் நல்ல காற்றோட்டம் இருக்கிற மாதிரி இடத்தை மாற்றிவிடுங்கள்.
கேஸ் லீக் ஆகுற மாதிரி உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால், உடனே தீப்பெட்டி அல்லது எலக்ட்ரிக் ஸ்விட்சுகளைப் பயன்படுத்தாதீர்கள். உடனே உங்கள் கேஸ் ஏஜென்சி அல்லது டெக்னீஷியனுக்கு கால் பண்ணுங்கள். பாதுகாப்பு வழிமுறைகளைப் சரியாகப் பின்பற்றுங்கள்.
எமர்ஜென்சி ரெகுலேட்டர் மற்றும் பாதுகாப்பு வால்வு
சமையலறை பயன்பாடு முடிந்தவுடன் அல்லது நீண்ட நேரம் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கேஸ் அடுப்பின் நாப்களை அணைப்பதுடன் சேர்த்து, சிலிண்டரின் ரெகுலேட்டரையும் கட்டாயம் 'ஆஃப்' செய்துவிட வேண்டும்.
அதுபோல, சிலிண்டரை மாற்றும்போது அதன் ரப்பர் குழாயின் காலாவதி தேதியைச் சரிபார்ப்பது அவசியம். பொதுவாக எல்.பி.ஜி குழாய்களை ஒவ்வொரு 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றிவிட வேண்டும். எளிய விழிப்புணர்வு நம் குடும்பத்தின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

