MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Power Outage: ஒரு வாரம் கரண்ட் இல்லைனா என்ன ஆகும்? யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா?

Power Outage: ஒரு வாரம் கரண்ட் இல்லைனா என்ன ஆகும்? யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா?

Power Outage: அன்றாட வாழ்க்கையில ஒரு மணி நேரம் கரண்ட் போனா போதும், எல்லா வேலையும் அப்படியே நின்னுடும். ஒரு மணி நேரத்துக்கே இப்படினா, ஒரு வாரம் கரண்ட் இல்லாம போனா நம்ம நிலைமை என்ன ஆகும்? எப்போதாவது யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா?

2 Min read
Author : Ramprasath S
Published : Aug 10 2026, 02:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஒரு வாரம் கரண்ட் இல்லாவிட்டால்  என்ன ஆகும்?
Image Credit : Gemini

ஒரு வாரம் கரண்ட் இல்லாவிட்டால் என்ன ஆகும்?

காலையில் எழுந்ததும் சில மணி நேரம் கரண்ட் இல்லாமல் போனா ஃபேன் ஓடாது, மோட்டார் வேலை செய்யாது, போன்ல சார்ஜ் இருக்காது, இன்டர்நெட் வராது, டிவியும் ஓடாது. ஃபிரிட்ஜ்ல வச்சிருந்த பால், காய்கறி, பழங்கள்னு எல்லாமே வீணாப்போயிடும். பல இடங்கள்ல குடிநீர் விநியோகம் கூட நின்னுடும். ஒரு மணி நேரத்துக்கே இப்படினா, ஒரு வாரம் கரண்ட் இல்லாம போனா நம்ம நிலைமை என்ன ஆகும்? எப்போதாவது யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தொடர்புகள் துண்டிப்பு!
Image Credit : Asianet News

தொடர்புகள் துண்டிப்பு!

ஒரு வாரம் கரண்ட் இல்லாம போனா நகரங்கள்ல அடுக்குமாடி குடியிருப்புகள்ல லிஃப்ட் வேலை செய்யாது. வயசானவங்க, குழந்தைகள், நோயாளிகள் மாடிப்படி ஏறி இறங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க. மொபைல் போன்ல சார்ஜ் இல்லாததால குடும்பத்தினர், நண்பர்கள், அவசர சேவைகளோட தொடர்பு துண்டிக்கப்படும். இன்டர்நெட் இல்லாததால ஆன்லைன் பேங்கிங், டிஜிட்டல் பேமெண்ட், ஆபீஸ் வேலை, ஆன்லைன் படிப்பு எல்லாமே நின்னுடும்.

35
குழப்பமான சூழ்நிலைகள்
Image Credit : Getty

குழப்பமான சூழ்நிலைகள்

மருத்துவமனைகள்ல நிலைமை இன்னும் மோசமாகும். பெரிய மருத்துவமனைகள்ல ஜெனரேட்டர் இருந்தாலும், அதுக்கு டீசல் தீர்ந்துட்டா வென்டிலேட்டர்கள், ஐசியூ கருவிகள், ஆபரேஷன் தியேட்டர்கள் எல்லாமே ஆபத்துல சிக்கும். தொழிற்சாலைகள் மூடப்படும். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இருக்காது. உற்பத்தி நின்னு போறதால பொருளாதாரத்துல பெரிய பாதிப்பு ஏற்படும். ரயில்கள், மின்சார போக்குவரத்து சேவைகள் நின்னுடும். டிராஃபிக் சிக்னல்கள் வேலை செய்யாததால சாலைகள்ல குழப்பம் ஏற்படும்.
45
குற்றங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு
Image Credit : Chatgpt

குற்றங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு

ராத்திரி நேரத்துல தெருவிளக்குகள் இல்லாததால விபத்துகள், திருட்டு, மற்ற குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பிருக்கு. கரண்ட்டை நம்பியிருக்கிற விவசாயத் துறையும் கடுமையா பாதிக்கப்படும். போர்வெல் ஓடாததால பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காது. கோழிப் பண்ணைகள், பால் பண்ணைகள், மீன் வளர்ப்புத் துறைகள்ல பெரிய நஷ்டம் ஏற்படும். கம்ப்யூட்டரை நம்பி வேலை செய்றவங்களால வேலையை தொடர முடியாது. டெலிகாம் டவர் பேட்டரிகள் செயலிழந்து மொபைல் நெட்வொர்க்குகள் மொத்தமா முடங்கிடும்.
55
அத்தியாவசியப் பொருட்களுக்குப் போட்டி
Image Credit : stockPhoto

அத்தியாவசியப் பொருட்களுக்குப் போட்டி

மக்களுக்குள்ள பயமும் பதற்றமும் அதிகமாகும். கடைகள்ல அத்தியாவசியப் பொருட்களுக்கு போட்டி அதிகரிக்கும். சில பகுதிகள்ல குடிநீர், உணவு போன்ற அடிப்படைத் தேவைகளுக்குக் கூட கஷ்டம் ஏற்படும். ஆனா, இந்த மாதிரி நேரத்துல ஒரு நல்ல விஷயம் என்னன்னா, குடும்ப உறுப்பினர்கள் ஒருத்தரோட ஒருத்தர் அதிக நேரம் செலவிடுவாங்க. ஆனாலும், கரண்ட் இல்லாத வாழ்க்கையை நினைச்சுக்கூட பார்க்க முடியல. அதனால, கரண்ட்டை சிக்கனமா பயன்படுத்துறதுதான் புத்திசாலித்தனம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
வணிகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
உங்க தங்கச்சிக்கு கொடுக்க சூப்பரான வெள்ளி கடா டிசைன்கள்!
Recommended image2
சிம்பிள் & ஸ்டைலிஷ்: 3 கிராமில் லேட்டஸ்ட் கம்மல் டிசைன்கள்
Recommended image3
சப்பாத்தி மாவு பிசையும்போது தண்ணீரில் இதை மட்டும் சேருங்க!
Related Stories
Recommended image1
HIV Virus: பல் மருத்துவ சிகிச்சையால் ஹெச்ஐவி பரவுமா? - மருத்துவர் சொன்ன முக்கிய விளக்கம்.!
Recommended image2
Water Tap: குழாய்ல தண்ணீர் சொட்டுகிறதா? பிளம்பர் தேவையில்லை.! நீங்களே சரிசெய்யலாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved