சப்பாத்தி செய்த சிறிது நேரத்திலேயே காய்ந்து போய் கடினமாவது பலருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை. ஆனால், பஞ்சு போல மிருதுவான சப்பாத்தி செய்ய ஒரு எளிய கிச்சன் ட்ரிக் உள்ளது.
life-style Sep 20 2026
Author: Raghupati R Image Credits:Social Media
Tamil
தயிர்
சப்பாத்தி மாவு பிசையும்போது வெறும் தண்ணீரை மட்டும் பயன்படுத்த வேண்டாம். அந்த தண்ணீரில் சிறிது தயிர் சேர்த்து பிசைந்தால் ஒரு பெரிய மாற்றத்தை நீங்கள் பார்க்கலாம்.
Image credits: freepik
Tamil
கூடுதல் மிருதுத்தன்மை
தயிர் சப்பாத்தி மாவை மிகவும் சாஃப்ட்டாக மாற்றுகிறது. இதனால் சப்பாத்தி மிருதுவாக வருவது மட்டுமின்றி, நீண்ட நேரத்திற்கும் அப்படியே காய்ந்து போகாமல் இருக்கும்.
Image credits: Social Media
Tamil
தேய்க்க சுலபம்
தயிரில் உள்ள லேசான புளிப்புத் தன்மை மாவை மிகவும் மென்மையாக்குகிறது. இதனால் சப்பாத்தி மாவை கட்டையில் வைத்து தேய்ப்பது உங்களுக்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
Image credits: freepik
Tamil
அருமையான சுவை
தயிர் சேர்த்து பிசைந்த மாவில் செய்யும் சப்பாத்தி வழக்கமான சப்பாத்தியை விட அதிக சுவையுடன் இருக்கும். நெய் அல்லது எண்ணெய் சேர்க்காமலேயே இதை ருசியாக சாப்பிடலாம்.
Image credits: freepik
Tamil
தயிர் தண்ணீர் தயாரிப்பது எப்படி?
முதலில் சிறிது வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 முதல் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள்.
Image credits: Pinterest
Tamil
கவனிக்க வேண்டியவை
தயிரை அதிகமாக சேர்த்துவிடக் கூடாது. அதிக தயிர் சேர்த்தால் மாவு பிசுபிசுப்பாக மாறிவிடும். இந்த சிம்பிள் ட்ரிக்கை ஃபாலோ பண்ணா, எப்பவுமே பஞ்சு மாதிரி சப்பாத்தி சாப்பிடலாம்!