MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • தூங்கும் பொழுது இடது பக்கமா தான் சாய்ந்து படுக்கனுமா? உண்மையான காரணம் தெரிந்தால் இப்படி தான் தூங்குவீங்க..!

தூங்கும் பொழுது இடது பக்கமா தான் சாய்ந்து படுக்கனுமா? உண்மையான காரணம் தெரிந்தால் இப்படி தான் தூங்குவீங்க..!

இடது பக்கம் சாய்ந்து தூங்குவது உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 

2 Min read
Author : maria pani
Published : Mar 25 2023, 03:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

நல்ல உடல் ஆரோக்கியத்திற்காக நாம் ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். இது நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நன்றாக வைத்திருக்க அவசியமான ஒன்று. தூக்கத்தில் தான் நம் உடல் சக்தி பெறுகிறது. நல்ல தூக்கம் புத்துணர்வை தருகிறது. ஆனால் நாம் தூங்கும் தோரணை (Posture) நமது ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இடது பக்கம் தூங்குவது தான் பல ஆரோக்கிய நன்மைகளை தருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இங்கு அறிந்து கொள்வோம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

செரிமானத்தை மேம்படும்

இடது பக்கம் தூங்குவதால், நம் உடல் கழிவுகள் குடல்கள் வழியாக எளிதாகச் செல்லும். இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. நீங்கள் உங்கள் இடது பக்கத்தில் தூங்கும்போது உங்கள் வயிறு மற்றும் கணையத்தின் நிலை நன்றாக இருக்கும். இது அமில ரிஃப்ளக்ஸ், நெஞ்செரிச்சல் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

37

குறட்டை குறையும்..! 

நீங்கள் அல்லது உங்கள் துணை குறட்டை விட்டு தூக்கத்தை நாசம் செய்தால், இடது பக்கத்தில் தூங்க முயற்சி செய்யுங்கள். இந்த நிலையில் தான் சுவாசப்பாதைகள் தெளிவாக இருக்கும். இது குறட்டையை பெருமளவு குறைக்கிறது.  

47

இதய ஆரோக்கியம் மேம்படும்  

இடது பக்கம் தூங்குவது இதயத்தின் அழுத்தத்தைக் குறைக்கும். இதயத்திற்கு இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.ஏனென்றால் நமது இதயம் கூட இடது பக்கம் தான் இருக்கிறது. இடது பக்கம் தூங்கினால் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். இதனால் இதய நோய் அபாயம் கூட குறையும். 

57

முதுகு வலி நிவாரணம்

முதுகு வலியால் அவஸ்தையா?  இடது பக்கமாக படுத்து தூங்குங்கள். இப்படி இடது பக்கம் தூங்கினால் முதுகு வலி கொஞ்சம் குறைந்துவிடும். இடது பக்கம் பார்த்து படுப்பதால் முதுகில் அழுத்தம் குறைகிறது.

67

நிணநீர் மண்டலம் மேம்படும் 

உடலில் இருந்து கழிவுகள், நச்சுகளை அகற்ற நிணநீர் அமைப்பு தான் உதவுகிறது. இடது பக்கமாக உறங்கினால் நிணநீர் மண்டலங்களை நன்கு செயல்பட்டு கழிவுகளை திறம்பட வெளியேற்றுகிறது. 

இதையும் படிங்க: கொத்தமல்லி தழை சீக்கிரம் அழுகாமல் இருக்கணுமா? நீண்ட நாட்கள் சேமித்து வைக்க இதை செய்யுங்கள்!

77

கர்ப்பகால சிக்கல் குறையும்

கர்ப்பிணிகள் இடது பக்கமாக படுக்க வேண்டும் என மருத்துவர்களும், நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர்.  இதனால் நஞ்சுக்கொடிக்கு இரத்த ஓட்டம் மேம்படும். பிரசவ, ப்ரீக்ளாம்ப்சியா சிக்கல்களின் அபாயத்தையும்  குறைக்கிறது. 

இதையும் படிங்க: அம்மாடியோவ்.. கிட்டதட்ட 14 மாதங்களாக சிறுநீர் கழிக்காத பெண்.. அவருக்கு என்னாச்சு தெரியுமா?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
காலையில் வெறும் வயிற்றில் கொய்யாப் பழம் சாப்பிடலாமா? யார் சாப்பிடலாம்? யார் தவிர்க்க வேண்டும்? நிபுணர் தரும் எச்சரிக்கை!
Recommended image2
தினமும் காலையில் இட்லி வித் ஃபில்டர் காபியா? நிபுணர் சொல்லும் ஷாக்கிங் உண்மை!
Recommended image3
Water Tank Leakage: தண்ணீர் தொட்டியில் விரிசலா? புதிய தொட்டி வாங்கும் முன் இதைச் செய்யுங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved