- Home
- Lifestyle
- Kitchen Trick : காலிஃப்ளவர்ல புழுக்களை நீக்கும் ஈஸி டிப்ஸ்!! இப்படி செஞ்சா சுவையா இருக்கும்
Kitchen Trick : காலிஃப்ளவர்ல புழுக்களை நீக்கும் ஈஸி டிப்ஸ்!! இப்படி செஞ்சா சுவையா இருக்கும்
காலிஃப்ளவரில் இருக்கும் புழுக்களை சுலபமாக அகற்ற அதை சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

Kitchen Trick To Clean Cauliflower
காலிஃப்ளவர் எல்லோருக்குமே மிகவும் பிடித்த காய்கறி ஆகும். அதிலும் குழந்தைகள் இதை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். இது சுவையான மற்றும் சத்தான காய்கறியாக இருந்தாலும், அதில் இருக்கும் முக்கியமான பிரச்சனை எதுவென்றால் அதற்குள் இருக்கும் புழுக்கள் தான். ஆகவே அதை சரியாக கழுவி சமைக்காவிட்டால் அந்த புழுக்கள் வயிற்றுக்குள் சென்று ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். எனவே, காலிஃப்ளவரை எப்போதுமே நன்கு சுத்தம் செய்து சமைக்கவும். இந்த பதிவில் காலிஃப்ளவரை சரியான முறையில் சுத்தம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
தண்டை நீக்கு!
பொதுவாகவே காலிஃப்ளவரை சந்தையில் இருந்து வாங்கிட்டு வந்த உடனே அது அப்படியே வைத்து விடுவோம். அதில் இருக்கும் தண்டை கூட நீக்க மாட்டோம். ஆனால் இப்படி செய்வது மிகவும் தவ.று ஏனெனில் காலிபிளவரில் இருக்கும் தண்டு பகுதியின் வாசனைக்கு புழுக்கள் வெளியேறாமல் அதன் உள்ளே இருக்கும். எனவே நீங்கள் கடையிலிருந்து காலிஃப்ளவரை வாங்கிட்டு வந்ததுமே அதன் தண்டு பகுதியை உடனே நீக்கி விடுங்கள்.
பூக்களை பிரித்து வை!
காலிஃப்ளவரை ஃப்ரிட்ஜில் அப்படியே வைக்காமல் முதலில் அதன் பூக்களை ஒவ்வொன்றாக பிரித்து தனியே எடுத்து பிறகு ஸ்டோர் செய்யவும்.
உப்பு மற்றும் மஞ்சள் கொண்டு சுத்தம் செய் :
மஞ்சள் மற்றும் உப்பு இவை இரண்டுமே காலிஃப்ளவரில் இருக்கும் புழுக்களை அழிக்கும் தன்மையுடையது. எனவே, காலிஃப்ளவரில் இருந்து பூக்களை தனியே பிரித்து எடுத்த பிறகு அதை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி பிறகு அதில் ஒரு கைப்பிடி அளவு உப்பு மாற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் சேர்த்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இப்படி வைத்தால் புழுக்கள் வெளியேறும். பிறகு மீண்டும் தண்ணீரில் அலசி நன்கு உலர்த்தி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைக்கவும்.
சூடான நீர் :
காலிஃப்ளவரை ஏற்கனவே கழிவு வைத்தாலும் அதில் சிறிய அளவில் புழுக்கள் இருக்கும். எனவே சமைப்பதற்கு முன் காலிஃப்ளவரை சூடான நீரில் போட்டு சிறிது நேரம் வைத்து விட்டு பிறகு சமைக்கவும்.
வினிகர் அல்லது எலுமிச்சை சாறு :
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் 2-3 ஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கலந்து நறுக்கி வைத்த காலிஃப்ளவரை அதில் போட்டு சுமார் 10 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு கழுவினால் அதில் இருக்கும் புழுக்கள் முற்றிலும் வெளியேறிவிடும்.