MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Kids Lunch Box: ஸ்கூல் டிபன் பாக்ஸ்க்கு தினமும் என்ன செய்வது? 6 நாட்களுக்கான ஹெல்தி & டேஸ்டி மெனு இதோ!

Kids Lunch Box: ஸ்கூல் டிபன் பாக்ஸ்க்கு தினமும் என்ன செய்வது? 6 நாட்களுக்கான ஹெல்தி & டேஸ்டி மெனு இதோ!

பள்ளி செல்லும் குழந்தைகளு பிடித்த உணவை தயார் செய்வது அம்மாக்களுக்கு சவாலான விஷயமே. அதுவும் 6 நாட்களுக்கு சத்தான, பிடித்த உணவை கொடுத்தனுப்பவது என்பது குதிரை கொம்புதான். அந்த சிக்கலை போக்கும் வகையில் சத்தான வாராந்திர லஞ்ச் மெனு இதோ உங்களுக்காக!

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 22 2026, 12:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
திங்கட்கிழமை   வெஜ் உப்புமா

திங்கட்கிழமை - வெஜ் உப்புமா

திங்கட்கிழமை உங்க குழந்தையின் லஞ்ச் பாக்ஸ்க்கு வெஜ் உப்புமா செஞ்சு வைக்கலாம். இது வயிறையும் நிரப்பும், காய்கறிகளின் சத்துக்களும் கிடைக்கும். இதுக்கு, முதல் நாள் இரவே ரவையை வறுத்து, காய்கறிகளை நறுக்கி வெச்சுடுங்க. உருளைக்கிழங்கு, வெங்காயம், பட்டாணி, தக்காளி, பீன்ஸ், கேரட்னு உங்களுக்கு பிடிச்ச காய்கறிகளை சேர்த்து, காலையில 5 நிமிஷத்துல சட்டுனு செஞ்சுடலாம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
செவ்வாய்க்கிழமை - வெஜ் பர்கர்

செவ்வாய்க்கிழமை - வெஜ் பர்கர்

செவ்வாய்க்கிழமை, குழந்தைகளுக்கு வெஜ் பர்கர் செய்து கொடுக்கலாம். கடையில் வாங்கும் பர்கர் ஆரோக்கியமானது இல்லைதான், ஆனால் இதை வீட்டிலேயே ஹெல்தியாக செய்யலாம். குழந்தைகள் சாப்பிட மறுக்கும் காய்கறிகளை வேகவைத்து மசித்து, பர்கர் டிக்கியில் (வடை) சேர்த்துடலாம். சீஸ் புரோட்டீன் தரும், பச்சை காய்கறிகள் நார்ச்சத்து தரும். பர்கர் பேட்டியை (டிக்கி) முதல் நாள் இரவே தயார் செய்து வைத்துவிட்டால், காலையில் லேசாக வறுத்து, பர்கர் பன்னை சூடு செய்து, சட்னி தடவி அசெம்பிள் செய்து கொடுத்துவிடலாம். குழந்தைகள் இதை சுலபமாக சாப்பிடுவார்கள்.
36
புதன்கிழமை - வெஜ் ஃபிராங்கி ரோல்ஸ்

புதன்கிழமை - வெஜ் ஃபிராங்கி ரோல்ஸ்

புதன்கிழமை, உங்க குழந்தைகளுக்கு வெஜ் ஃபிராங்கி ரோல்ஸ் செய்து கொடுக்கலாம். ஃபிராங்கி ரோல்னா என்னன்னு யோசிக்கிறீங்களா? வீட்ல செய்யுற சப்பாத்தியில் கொஞ்சம் புதினா சட்னி, கொஞ்சம் தக்காளி சாஸ் தடவி, உங்களுக்கு பிடிச்ச ஏதாவது ஒரு உலர்வான காய்கறி பொரியலை உள்ளே ஸ்டஃப் செய்யுங்க. மேலே கொஞ்சம் ஃப்ரெஷ்ஷான சாலட் காய்கறிகளைத் தூவி, அதை ஒரு ரோல் மாதிரி சுருட்டி குழந்தையின் டிபன் பாக்ஸில் வைங்க. குழந்தை இதை விளையாடிக்கிட்டே கூட ஈசியா சாப்பிட்டுடும்.

46
வியாழக்கிழமை வெஜ் இட்லி

வியாழக்கிழமை வெஜ் இட்லி

வியாழக்கிழமை, உங்க குழந்தைகளுக்கு வெஜ் இட்லி செய்து கொடுக்கலாம். இது செய்றதுக்கு ரொம்ப சுலபம், சட்டுனு தயாராகிவிடும். இதுக்கு, முதல் நாள் இரவே இட்லி மாவை ரெடி பண்ணிடுங்க. அதில் உங்களுக்குப் பிடித்த காய்கறிகளான உருளைக்கிழங்கு, வெங்காயம், கேரட், குடைமிளகாய், பீன்ஸ், பட்டாணி போன்றவற்றைச் சேர்த்து, காலையில் இட்லியை வேகவைத்து எடுத்தால் போதும். மேலே கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து குழந்தைகளின் டிபன் பாக்ஸில் வைத்தால், அவங்க எப்படி சட்டுனு சாப்பிடுறாங்கன்னு பாருங்க.
56
சத்தான ஃப்ரைடு ரைஸ்

சத்தான ஃப்ரைடு ரைஸ்

வெள்ளிக்கிழமை, உங்க குழந்தைக்கு ஃப்ரைடு ரைஸ் செய்து கொடுக்கலாம். இதுக்காக காலையில எழுந்து சாதம் வடிக்கத் தேவையில்லை. உங்க வீட்ல முதல் நாள் இரவு வடித்த சாதம் மீதம் இருந்தால், அதில் உங்களுக்குப் பிடித்த காய்கறிகளை நறுக்கிச் சேருங்க. பிறகு, கொஞ்சம் சோயா சாஸ், கிரீன் சில்லி சாஸ், வினிகர் சேர்த்து, சாதத்தையும் போட்டு லேசாக டாஸ் செய்து குழந்தைகளின் டிபன் பாக்ஸில் வைத்துவிடுங்கள்.
66
ஒரு நாள் கொடுப்பதில் தவறில்லை

ஒரு நாள் கொடுப்பதில் தவறில்லை

சனிக்கிழமை வாரத்தின் கடைசி ஸ்கூல் நாள். அதனால, உங்க குழந்தைகளின் விருப்பத்துக்கும் கொஞ்சம் இடம் கொடுங்க. பெரும்பாலான குழந்தைகளுக்கு பாஸ்தா, நூடுல்ஸ் போன்ற உணவுகள் ரொம்ப பிடிக்கும். மைதாவால் ஆனது என்பதால் இது ஆரோக்கியமற்றது என்றாலும், வாரத்தில் ஒரு நாள் கொடுப்பதில் தவறில்லை. அதனால், உங்க குழந்தைக்கு பாஸ்தா சாலட் செய்து கொடுக்கலாம். பாஸ்தாவை வேகவைத்து, அதில் மயோனைஸ், ஃப்ரெஷ் காய்கறிகள் மற்றும் சீஸ் சேர்த்து கலந்து குழந்தையின் டிபன் பாக்ஸில் வைங்க. பாஸ்தா என்ற பெயரைக் கேட்டாலே குழந்தை எப்படி அதைச் சாப்பிட்டு முடிக்கிறது என்று பாருங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
உணவு
உணவு சேர்க்கைகள்
ஆரோக்கியம்
சுகாதார நன்மைகள்
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lunch Bag Cleaning Hacks: லஞ்ச் பேக் நாத்தமடிக்குதா? ஈஸியா க்ளீன் பண்ண சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
ஒரு கப் ஐஸ்கிரீம் விலை ரூ.5.2 லட்சமா? கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் – அப்படி என்ன ஸ்பெஷல்?
Recommended image3
மத்தி, நெத்திலி மீன்களில் இவ்வளவு சத்துகளா? குறைந்த விலையில் உடலை வலுவாக்கும் சிறு மீன்கள்!
Related Stories
Recommended image1
Eye Health: மீன் சாப்பிடுவது கண்களுக்கு நல்லதா? அறிவியல் சொல்வது என்ன?
Recommended image2
Viral Food News: பிரியாணி போடும்போது வர்ற அந்த 'டங் டங்' சத்தம்... பின்னாடி இப்படி ஒரு மேட்டரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved